உலகில் வழக்கொழிந்து (செத்துப்போன) மொழியாகிய சமக்கிருதத்துக்கு மந்திரம் உண்டு தந்திரம் உண்டு.
அதுதான் கோயில்களில் பூசைக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.
தெய்வத்தமிழுக்குப் பதிலாக சமக்கிருதத்தில் தான் தமிழர்கள் பூசை செய்ய வேண்டும்.
தமிழில் தில்லையில் தேவாரம் பாடினால் கூட தீட்டுப்பட்டு விடும் என்று வாதாடுகிறார்கள் சமக்கிருதவாதிகள்.
இன்றும் தமிழ் நாட்டிலேயே தமிழர்களின் முன்னோர்கள் கட்டிய கோயில்களில் தமிழில் தேவாரம் பாடுவதற்குத் தமிழர்கள் போராட வேண்டிய நிலையில் உள்ளது அங்குள்ள நிலைமை.
இதில் வேடிக்கை என்னவென்றால் யாராலும் பேசப்படாத மொழியாகிய சமக்கிருதம் பூசைக்குரியது, வழிபாட்டுக்குரிய மொழி என்று வாதாடுகிறார்கள்.
ஆனால் பூசை (வடமொழியில் பூஜை) என்ற சொல்லே சமக்கிருதம் அல்ல.
அது தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்ட சொல்லென 1927 இல் இந்தியாவின் தொன்மையைப் பற்றிய கட்டுரையை எழுதிய Jarl Charpentier's என்பவரும், சமக்கிருத மொழியிலக்கண அகராதியை தயாரித்து வெளியிட்ட பேராசிரியர் Manfred Mayrhofer என்பவரும் கூறுகிறார்கள்.
பூசை என்ற சொல்லே இல்லாத மொழி எப்படி பூசைக்குரிய மொழியாக முடியும்.
நாயன்மார்களால் தமிழில் பாடி இறைவனை உருகவைத்து அற்புதங்கள் பலவற்றை நடத்திக்காட்டிய தமிழ் தான் உண்மையில் பூசைக்குரிய மொழியாகும்.
அதிலும் சிலர் சமக்கிருதம் தான் தமிழுக்கும் ஏனைய மொழிகளுக்கும் தாய் அதுவே மூத்த மொழி என்கிறார்கள்.
தமிழிலிருந்து இரவல் வாங்கிய மொழி எப்படி தமிழுக்குத் தாயாக முடியும்?
தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை யுண்ட பாலனை யழைத்தது மெலும்பு பெண்ணுருவாக் கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித்தண்டமிழ்ச் சொல்லோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்.
Tamil Roots of Puja or Pujai :
பூசை சமக்கிருத சொல் அல்ல தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்டது.
Jarl Charpentier's 1927 paper in Indian Antiquary connects the meaning and etymology of pooja with 'smearing,' the smearing of images etc with things like red powders etc. The origin of the word Puja lies in the Dravidian Languages. Two possible Tamil roots have been suggested: Poosai "to smear with something" and Poosei "to do with flowers".
Mayrhofer **suggests the derivation of pUjA from Tamil (Dravidian). 'pUcu' (to smear).
"If puujaa originally refers to worship, the Dravidian etymology from the root puucu 'to smear' is quite acceptable. We must remember that among the oldest objects of worship in South Asia are the sacred trees, and smearing the tree trunks with red-coloured powders and oils was an integral part of the early tree cult (cf. e.g. J. Auboyer, Daily life in ancient India, 1961, page 154).
"If puujaa originally refers to worship, the Dravidian etymology from the root puucu 'to smear' is quite acceptable. We must remember that among the oldest objects of worship in South Asia are the sacred trees, and smearing the tree trunks with red-coloured powders and oils was an integral part of the early tree cult (cf. e.g. J. Auboyer, Daily life in ancient India, 1961, page 154).
(** Manfred Mayrhofer (26 September 1926 – 31 October 2011) was an Austrian Indo-Europeanis who specialized in Indo-Iranian languages. Mayrhofer served as professor emeritus at the University of Vienna. He is noted for his etymological dictionary of Sanskrit...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.