11/08/2017

இந்தியாவில் முஸ்லிம்கள் அச்சத்துடன் தான் வாழ்கிறார்கள் - துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி...


இஸ்லாமியர்கள் ஒருவித அச்சத்துடன் வாழும் சூழ்நிலை இந்தியாவில் உருவாகியுள்ளது என துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி தெரித்துள்ளார்.

ராஜ்யசபா தொலைக்காட்சியில் ஹமீது அன்சாரி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது...

இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஒருவித அச்சத்துடன் தான் வாழ்ந்து வருகிறார்கள். பாதுகாப்பு உணர்வின்மை இஸ்லாமியர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

அதுமட்டுமில்லாமல் சமூக மதிப்பீடுகள், தார்மீக உணர்வு அனைத்து இடங்களிலும் வீழ்ந்து வருகிறது. நமது தேசபக்தி என்பது அனைத்து நேரத்திலும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் என்ற அவசியமில்லை.

இந்தியாவில் பெருகிவரும் சகிப்புத்தன்மையின்ப்மை குறித்து பிரதமர் மோடியிடம் கேட்டேன். ஆனால் அவர் கூறிய பதிலை வெளிப்படையாக கூறுவது ஜனநாயக மரபுக்கு எதிரானது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த இந்த மூன்றாண்டுகளில் நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது வெளிப்படையான ஒன்று. இவ்வாறு ஹமீது அன்சாரி கூறியுள்ளார்.

பதவியில் இருக்கும் போது யாருக்கு இவர் பேன் பார்த்து கொண்டிருந்தார்.?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.