11/08/2017

பாழிகளில் ஆளப்பட்டு வந்த மொழியே பாலி மொழி ஆகும்...


இது ஒற்றர் மொழிகளில் மிக முக்கியமான மொழியாகும்.

சமஸ்கிருதம் என்பது தீயிட்டு யாகம் செய்யும் போதும், கோயில்களின் கருவறைகளில் அதிக அதிர்வெண் கொண்ட ஒலியலைகளை உருவாக்குவதற்கும் உருவாக்கப்பட்ட பிரத்யேக மொழியாகும்.

கோயில் கருவறையில் உள்ள மாந்திரீக கட்டு அவிழ்ந்து விடாமல் இருப்பதற்காகவும், புறவிசைகளின் தாக்கத்ததிலிருந்து தப்பிக்கவும் ஒரு நாளின் பொழுதுளை ஆறாகப் பிரித்து மந்திரங்களை ஒதச்செய்து அதன் ஒவ்வொரு அந்தி-சந்திகளிலும் அதிக ஒலியலைகளை எழுப்பச் செய்தனர்.

இதற்கு நீண்ட ஒலியலைகளை எழுப்பக் கூடியதும் சொற்பிறப்பியலின் படி ஒரு எழுத்தின் தொடக்கமும், முடிவும் நீண்டு ஒலிப்பது போன்ற இலக்கணம் கொண்டதுமான சமஸ்கிருதத்தின் தேவை அவர்களுக்கு இன்றியமையாததாக இருந்தது.

பொதுவாக உளவு பார்க்கும் ஒற்றர்களுக்கு விதிமுறைகளே இருக்கக்கூடாது.

இன்னின்ன மொழிகள்தான் பேசவேண்டும் என்ற வரைமுறையும் கிடையாது.

அவர்கள் ஒற்று பார்த்து தகவல் சொல்வதற்காக எண்ணற்ற மொழிகளையும், சங்கேதக் குறியீடுகளையும், நாட்டிய முத்திரைகளையும் வைத்திருந்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.