அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பொதுமக்களின் வங்கி கணக்கு, எரிவாயு இணைப்பு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆதார் எண்ணை இணைத்து வருகிறது. இதேபோல், செல்போன் எண்ணையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்காத சிம் கார்டுகள் வரும் 2018-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பின் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
மேலும், 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி சிம் கார்டுகள் செயலிழப்பு செய்யப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.