11/09/2017

இந்தி மொழி என்பது ஒரே மொழியல்ல...


இந்தி வடநாட்டில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி என்பதெல்லாம் முழுக்க பொய்.

இம்மொழி வடநாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு மாறுதல்களுடன் வெவ்வேறு மொழி பெயர்களைக் கொண்டு பேசப்படுகின்றது.

ஒரு பகுதியில் பேசப்படும் இந்தியை மற்ற பகுதியில் உள்ளவர்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியாது.

இவ்வாறு பல்வேறு மாறுதல்களுடன் பலவாறு பேசப்படும் இந்தியை மொழியியல் அறிஞர்கள் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தி ஐந்து பிரிவுகளாகப் பேசப்படுவது தெரியவருகிறது.

அதாவது 'மேல்நாட்டு இந்தி', 'கீழ்நாட்டு இந்தி', 'பிகாரி', 'ராஜஸ்தானி','பகரி' எனப் பிரிக்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு பிரிவில் பல உட்பிரிவுகள் உள்ளன.

என்ன கீழே உள்ள வரைபடம் உங்களுக்கு தலைசுற்றலை கொடுக்கிறதா?.

ஆம் இந்தி என்பது தமிழை போன்று இயற்கையாக உருவான மொழியில்லை, செயற்கையாக உருவாக்கப்பட்ட சிக்கல் மொழி.

இவ்வாறு பல மொழிகளை இந்தி எனும் குடையின் கீழ் கொண்டுவந்து, மற்ற மொழி பேசுபவர்களையும் இந்தி பேசுபவர்கள் என கணக்கு காண்பிக்கிறது நம் இந்திய அரசு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.