06/09/2017

தமிழர் ஆடற்கலைகள்...


தமிழர்களின் ஆடற்கலைகள் என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது பரதநாட்டியம் தான்.

அதைவிடுத்து வேறு ஆடல்கள் தமிழர்கள மத்தியில் இல்லையா? இருக்கிறது. பல ஆடற்கலைகள் காலம் காலமாக தமிழர்களால் ஆடப்பட்டு வருகிறது.

படம் : தமிழர் ஆடற்கலைகளில் சிறப்பு மிக்க சில ஆடற்கலைகள்.

௧) கரகாட்டம் - தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஆடும் நடனம்.

௨) கும்மியாட்டம் - கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.

௩) கோலாட்டம் - கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் நடனம்.

௪) பொய்க்கால் குதிரை ஆட்டம் - குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம்.

௫) புலியாட்டம் - புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம்.

௬) மயிலாட்டம் - மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும்.

௭) ஒயிலாட்டம் - ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம்.

௮) குறவன் குறத்தி ஆட்டம் - குறவர் சமூகத்தினைச் சார்ந்த ஆணான குறவனும், பெண்ணான குறத்தியும் இசைத்தபடி ஆடும் ஆட்டம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.