இந்த பிரச்சாரத்தை வைத்துக் கொண்டுதான் பலரும் எதோ பிசி, எம்பிசி, எஸ்சி மாணவர்கள் ஜஸ்ட் பாஸ் ஆனாலே டாக்டர் படிப்பு கிடைத்து விடுவதாக பொது புத்தியில் நம்பி வருகின்றனர்.
உண்மையில் இந்த பிரிவுகளுக்கு இடையே மருத்துவ படிப்பிற்கான கட் ஆப் மார்க்கை ஒரு முறையாவது ஒப்பிட்டு பாருங்கள் உண்மை எதுவென்று புரியும்.
உதாரணத்திற்கு, சென்ற வருடம் 2016 ஆம் ஆண்டு, அதாவது நீட் நுழைவுத் தேர்வு வரும் முன்பு, மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் எ ம் பி பி எஸ் மருத்துவ படிப்பு சேர்வதற்கான கட் ஆப் மார்க் பட்டியல் இது.
பி.சி 199.25
எம் பி சி 198.75
ஓ.சி 199.5
எஸ்.சி 196.75
அதாவது மகா ஜனங்களே இந்த ஓசி பிரிவிற்கும் பிசி பிரிவிற்கும் வெறும் 0.25 மதிப்பெண்தான் வித்தியாசம்.
இந்த 0.25 மதிப்பெண் அதிகம் வாங்க திற்மை இல்லாத கூட்டம்தான் ஏதோ இட ஒதுக்கீட்டினால் வாழ்க்கையே பறி போனதாக கதறுகிறது.
வெறும் மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குகிறார்கள் என்று தமிழக அரசின் பாடத்திட்டத்தினை ஏளனம் செய்யும் இந்தக் கூட்டத்தால் ஏன் 0.25 மதிப்பெண் கூடுதலாக வாங்க இயலதா.
அப்புறம் எஸ்.சி பட்டியல் இன மாணவர்களுக்கும், ஓ.சி பிரிவிற்கும் வித்தியாசம் 2.75. காலம் காலமாய் கல்வி பெற இயலாமல் ஒடுக்கி வைக்கப்பட்ட சமூகத்திற்கும் இவர்களுக்கும் இடையே உள்ள உள்ள வித்தியாசம் வெறும் 2.75 மதிப்பெண்.
உண்மை இவ்வாறு இருக்க நீட் நுழைவுத் தேர்வு வந்தால் இட ஒதுக்கீடு இல்லாமல் எல்லோருக்கும் திறமை அடிப்படையில் சீட் வழங்கப்படும் என்ற பச்சைப் பொய்யை எப்படி நீங்கள் நம்ப வைக்கப்பட்டீர்கள் என யோசித்துப் பாருங்கள்.
மாநில அரசின் வாயிலாக ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைத்து வந்த மருத்துவப் படிப்பு இனி எட்டாக் கனி ஆனதற்கு நம் அறியாமையும் ஒரு காரணம்.
இனியாவது வாட்சப் சித்தர்கள் பரப்பும் விசமப் பரப்புரையினை அப்படியே நம்பி பார்வேர்டு செய்யாதீர்கள்.
Note:
இந்த புள்ளி விபரத்தோடு, 2016 ஆம் ஆண்டிற்கான எஸ் சி பட்டியல் இனத்தில் இருந்து எம் பி பி எஸ் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கட் ஆப் ரேஞ்ச் பட்டியலையும் இணைத்துள்ளேன். ஆரம்பம் முடிவு (start- end) எல்லையில் மதிப்பெண்களை பார்த்தால் 0.1 ல் இருந்து 3 மதிப்பெண்கள் மட்டுமே இருக்கும். அந்த அளவுக்கு கடுமையான போட்டி நிலவி உள்ளது. இதில் எங்கே தரம் குறைந்துள்ளது என்று நிரூபியுங்கள்...
http://www.whitehouseit.com/news/mbbs2016/mbbs_2016_admissions_overall.html
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.