உள்ளிருந்து ஓங்கும் உன்னதத்தின் இரகசியம்...
பெற்ற தாயை மகன் மறந்தாலும், பிள்ளையை தாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும், உயிரை தேகம் மறந்தாலும், கற்ற நெஞ்சகம் கற்றவற்றை மறந்தாலும், கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நல்ல தவத்தோர் உள்ளிருந்து ஓங்கும் நமசிவயத்தை நான் ஒரு பொழுதும் மறக்க மாட்டேன் என பொருள் பட வள்ளலார் பாடி இருக்கின்றார்..
இதில் உள்ளிருந்து ஓங்கும் என்ற வரி தான் மிக மிக முக்கியம்..
நமசிவய என்ற பஞ்ச பூத சக்தி, தேகத்தின் உள்ளே அமர்ந்து ஓங்க தொடங்கும் பொழுது மட்டுமே, தேகத்தில் உயிர் நிற்கும்..
கண நேரம் ஆயினும் அந்த ஓங்குதல் நடைபெற வில்லையென்றால், சுற்று புற காற்று மண்டல அழுத்தத்தால் ஒடுங்குதல் என்ற செயல் நடைபெற்று, தேகம் நசுக்கப் பட்டு வேதனை படுகிறது..
பிறந்த குழந்தை மூச்சு விட தெரியவில்லை என்றால் உடனே இறந்து போகும்..
இந்த மூச்சானது தேகத்தின் உள்ளே புகுந்து, வெளி உலக சூழ் நிலைகளின் ஒடுக்குதல் என்ற செயலுக்கு எதிராக ஓங்குதல் என்ற செயலை உருவாக்கி தேகத்தை சமநிலை படுத்துகிறது..
இந்த காரணத்தினால் தான் நாம் நான்கு விநாடிகளுக்கு ஒரு முறை சுவாசித்து, உள் நுழைந்த காற்று மண்டலத்தினால் உள்ளே ஓங்குதல் என்ற செயல் பாடு நடை பெற்று நம் தேகம் சமசீர் அடைந்து உயிர் வாழ்கிறோம்..
ஆக மொத்தத்தில் உள் இருந்து ஓங்குதல் மூலம் மட்டுமே தேகத்தில் உயிர் வாழ்கிறது..
ஓங்குதல் என்ற செயல் பாடு நடக்கும் போது மட்டுமே தேக திசுக்கள் விரிவடையும் தன்மையால் இன பெருக்கம் அடைந்து அதன் மூலம் தேகம் வலுவடைகிறது..
இந்த சூழ்நிலையில் சுற்று புற சூழ்நிலைகளால் உருவாகும் ஒடுங்குதல் என்ற செயல் பாடு, சுவாச ஒழுங்கின்மை காரணமாக அதிகரித்து, தேகம் சிறுக சிறுக வலுவிழந்து, முடிவில் மரணம் கவ்வுகிறது...
ஆகவே ஓங்குதலுக்கு உதவாத சுவாச பயிற்சிகள் அத்தனையும் தேகத்தை நாசப் படுத்துகிறது..
மிக முக்கியமாக சுவாசத்தின் மூலமாக நடைபெறும் ஒங்குதல் என்ற செயல் பாட்டிற்றிக்கு, சுவாச இல்லாத நிலையில் ஒரு மாற்று பயிற்சியின் மூலம் அந்த ஓங்குதல் நடை பெற வில்லை என்றால், சுவாச மற்ற நிலையில் தேகத்தில் உயிர் நிச்சயமாக தங்காது..
அந்த மாற்று பயிற்சியை பயிலாத வரை ஜீவ சமாதி என்பது சாத்தியமில்லை...
சுவாசத்தின் மூலம் இல்லாமல் அந்த மாற்று பயிற்சியின் மூலம் மட்டுமே அந்த உள் இருந்து ஓங்குதல் மூலம், புதையுண்ட ஜீவ சமாதியில் ஓரு மகான் தன் தேகம் அழியாமல் காத்து, தன் தேக கனலை காத்து, தன் ஒளி தேகத்தால் செயல் பட முடியும்..
அந்த மாற்று பயிற்சியை கற்றுக் கொள்ளாமல், உள் இருந்து ஓங்குதலை இழந்து, ஜீவ சமாதி என்று புகுந்தவர்கள் அத்தனை பேரும் மரணத்தை தழுவியவர்களே...
இதனால் தான் உள் இருந்து சதா காலமும் ஓங்குதலை நடத்தும் நமசிவய என்ற ஜீவ சக்தியை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன் என்று வள்ளலார் சொல்லுகின்றார்..
அந்த உள் இருந்து ஓங்குதலை பெற மாற்றுப் பயிற்சியினை கற்று பயின்ற பின் சுவாசம் என்ற ஒன்று மனிதனுக்கு தேவை இல்லை..
அப்படி வெளி சுவாசம் தேவையில்லாத மனிதனே ஜீவ சமாதிக்கு தகுதி உடையவன் ஆகிறான்..
அவன் வெளி சுவாசத்தால் செயல் படும் ஒழுங்கின்மையிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு.
பரி பூரண ஒழுங்கு என்ற அந்த உள் ஓங்குதலில் தன் தேகத்தை வேண்டிய காலம் காத்து தன் ஒளி தேகத்தில் செயல் ஆற்றுகின்றார்கள் சித்தர் பெரு மக்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.