25/10/2017

அமானுஷ்யம்...


மெக்சிகோ நகரிலிருந்து 2 மணி நேரம் ஒரு கால்வாய் வழியாக பயணித்தால், 'சோச்சி மில்கோ' என்ற மனித நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியை அடையலாம்.

பல வருடங்களுக்கு முன் அந்த கால்வாய் வழியாகச் சென்ற ஜூலியன் சாண்டனா பரேரா, ஒரு இளம் பெண்ணின் பிணத்தையும் அவள் விட்டுச் சென்ற பொம்மையையும் கண்டறிந்தார்.

அவளது காலடிச் சத்தத்தையும், ‘அப்பா நீங்க ஏன், என்ன காப்பாத்தல?’ என்கிற அலறல் சத்தத்தையும் கேட்டு மிரண்டு போன அவர், அவள் விட்டுச் சென்ற பொம்மையை ஒரு மரத்தில் கட்டித் தொங்க விட்டார்.

தொடர்ந்து, பேயாய் அலையும் அந்த இளம்பெண்ணின் ஆன்மாவை சாந்தப்படுத்துவதற்காக கடந்த 50 வருடங்களாக அந்த தீவை பொம்மைகளால் அலங்கரிக்க ஆரம்பித்தார்.

இவ்வளவும் செய்த அவரே, சில வருடங்களுக்கு முன் அந்த தீவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தற்போது, இவரது குடும்பத்தினர் இவர் விட்டுச் சென்ற வேலையை செய்து வருகின்றனர்.

அங்கு வைக்கப்படும் பொம்மைகள் அனைத்திலும் அந்த பெண்ணின் ஆவி புகுந்து ஓலமிடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விஷயம் ஊடகங்கள் மூலமாக கசிந்து தற்போது ஏராளமான புகைப்படக் கலைஞர்களும் சாகச விரும்பிகளும் அந்த தீவிற்கு வந்து பொம்மைகளை மரத்தில் தொங்க விட்டுச் செல்கின்றனர்.

பரேரா இறந்து 14 வருடங்கள் ஆன போதும், இன்னும் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்பதாக சில பார்வையாளர்களும், அது அவளது அலறல் சத்தம் இல்லை பரேராவின் அலறல் சத்தம் என்று சிலரும் கூறி வருகின்றனர்.

ஒரு சிலரோ, அவர் எந்த பொணத்தையும் பாக்கல, ரொம்ப நாளா இந்த தீவுப்பக்கம் தனியாவே இருந்ததால ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி அவர இப்படியெல்லாம் செய்ய வச்சிருக்குதுன்னு கூலா சொல்றாங்க.

எது எப்படியோ, இப்ப வரைக்கும் இருட்டிய பிறகு அந்த தீவுக்குப் போக பலர் பயந்து நடுங்குவது தான் இந்த தீவோட ஹைலைட்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.