26/10/2017

மெர்சல் பின்னனி என்ன?


மெர்சல் திரைப்படமும் அது தொடர்பான தொடர் breaking news செய்திகளும் என் மனதில் ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

கடந்த காலங்களில் ஒவ்வொரு முறையும் இப்படி வந்த போதும் தமிழினத்தின் மிகப்பெரும் உரிமை எதோ ஒன்று பறிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தின் உரிமையை பாதுகாத்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தின் கடைசி கட்டத்திலேயே இது ஆரம்பித்து விட்டது.

இரண்டு உதாரணங்களை சொல்லுகிறேன்..

சுவாதி படுகொலை breaking news செய்திகளின் பின்னணியில் தான் நீட் மசோதா நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா கேட்ட நியாயமான கேள்விகள் ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போராட்டங்கள் உச்சகட்டத்தில் இருந்த போது தான் 16.01.2017 அன்று தமிழக கடற்கரைகளில் வரி போடும் உரிமை தமிழகத்திடம் இருந்து பறிக்கப்பட்டது. இதை செய்தது மா.பா.பாண்டியன்.

இப்போது எதை மறைக்க முயற்சி நடக்கிறது என்பதை இரண்டு நாளாக தேடுகிறேன். எனக்கு தெரிவது காசிமேட்டில் நடந்த கலவரம். ஆனால் இது தானா அல்லது இதை விட வேறு ஏதும் பெரிய கேடு அடிமை எடப்பாடி மூலமாக நிறைவேற்றி விட்டார்களா எனத் தெரியவில்லை.

தமிழக மீனவ மக்கள் வெகு கவனமாக இருங்கள்.தமிழ்நாட்டை இப்போது மட்டும் அல்ல எப்போதுமே அரணாக காப்பது நீங்கள் மட்டும் தான்.

நீங்கள் கடற்கரையில் தொடர்ந்து வசிப்பது உங்களுக்கு மட்டும் அல்ல.தமிழ்நாட்டின் உயிருக்கே முக்கியமானது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.