தமிழகம் முழுவதும் உள்ள 23 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்; வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி..
சென்னை: தமிழகத்தில் 23 சுங்கச்சாவடிகளின் கட்டணம் சத்தமின்றி திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்ைகக்கு வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த கட்டண உயர்வில் ஆம்னி பஸ், லாரிகளுக்கு ரூ.5 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 374 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், தமிழகத்தில் 43 சுங்கச் சாவடிகள் (டோல்கேட்) உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 1992ம் ஆண்டு போட்ட நெடுஞ்சாலைகளுக்கான கட்டண உயர்வு ஒப்பந்தம் ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டிற்கு ஒரு முறை 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 20 சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), பாளையம் (தர்மபுரி), விஜயமங்கலம் (குமாரபாளையம்), புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை), ராசம்பாளையம் (நாமக்கல்), சமயபுரம் (திருச்சி), மொரட்டாண்டி (விழுப்புரம்), வைகுந்தம் (சேலம்), நாதக்கரை (சேலம்), வீரசோழபுரம் (சேலம்) , ஓமலூர் (நாமக்கல்) மேட்டுபட்டி (சேலம்), பரணூர் (காஞ்சிபுரம்), அதூர் (செங்கல்பட்டு), வல்லவன்கோட்டை (தஞ்சாவூர்), விக்கிரவாண்டி (விழுப்புரம்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), மணவாசி (திருச்சி), திருப்பரைத்துரை (திருச்சி), திருமாந்துரை (விழுப்புரம்), செங்குறிச்சி (விழுப்புரம்) உட்பட 23 சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 45 கி.மீ நீளமுள்ள சாலைகளுக்கு கார், ஜீப் ஒரு தடவை செல்ல ரூ.45 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் மட்டும் உயர்த்தப்படவில்லை. ஆனால், லாரி, ஆம்னி பஸ்களுக்கு ரூ.160லிருந்து ரூ.165 ஆகவும். இலகுரக வாகனங்களுக்கு ரூ.80லிருந்து ரூ.85 ஆகவும், கனரக வாகனங்களுக்கு ரூ.250லிருந்து ரூ.265 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு சில சுங்கச்சாவடிகளில் கார், ஜீப் இரண்டு முறை செல்வதற்கு ரூ.5 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்து உரிய அறிவிப்பு வெளியிடாமல் சத்தமின்றி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு அடுத்த ஆகஸ்ட் 21ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டண உயர்வால், அத்தியாவசிய ெபாருட்களின் விலை உயரும். மேலும் லாரி தொழில் நஷ்டத்தில் இயங்கும் லாரி தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு மாறுவதை தவிர வேறு வழியில்லை என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.