16/10/2017

இது கேரளாவில்...


மலையாள மனோரமா இதழின் செய்தியாளர் ராமசாமி, தற்போது தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்திருப்பது போல, கேரளாவிலும் ஜூன், ஜூலை மாதங்களில் தீவிரமாக டெங்கு பரவியது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வேகமாக ஆய்வில் இறங்கினார். ஒரே நாளில், காலையில் அதிகாரிகள் கூட்டத்தையும் மதியம் அமைச்சரவைக் கூட்டத்தையும், மாலையில் அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டினார்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓர் அமைச்சரை நியமித்தார். அவரின் கட்டுப்பாட்டில் ஆட்சியாளர், அதிகாரிகள் மேற்பார்வையில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்துக் கட்சித் தொண்டர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் என அனைவரையும் இணைத்துத் தீவிர சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.

15 நாள்களில் கொசுவின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, மக்களைக் காய்ச்சலிலிருந்து முழுமையாக மீட்டனர்.

கொசுவே இல்லாத மாநிலமாக கேரளாவை மாற்றிவிட்டார்கள். கேரளாவைப் போல தமிழக அரசும் செயல்பட வேண்டும் என்றார்.

இது தமிழ்நாட்டில்...

அக்டோபர் 7ம் தேதி தர்மபுரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா 200க்கு 400மீட்டர் பந்தல், 10 எல்இடி திரைகள், சேலம் - தர்மபுரி எல்லையான தொப்பூரிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வரை கட்சிக் கொடிகள், கட் அவுட்டுகள், ஆங்காங்கே மேடைகளில் குத்தாட்ட நிகழ்ச்சிகள் மற்றும் அதிமுக ஒன்றிய, நகரச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் தங்குவதற்கு 250க்கும் மேற்பட்ட ஏசி ரூம்கள், வந்து செல்வதற்கு ஏசி கார்கள், அவர்களுக்கான உணவுகள் என விழாவுக்கு இரண்டு கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்கள்.

ஆனால், அரசு மருத்துவமனைகளில் படுக்க பெட் இல்லாமல், ஒரு கிழிந்த பாயில் மூன்று குழந்தைகளைப் போட்டிருக்கிறார்கள். போதிய மருந்து இல்லை... ஊழியர்கள் இல்லை... மருத்துவர் இல்லை!

- ஜூனியர் விகடன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.