30/11/2017

மோனலிசா ஓவியத்தில் ஏலியன்ஸ் குறித்து ரகசிய குறியீடு. ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்...


லியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ் பெற்ற ஓவியம் மோனலிசா.

பெண் ஒருவர் புன்னகைப்பது போன்ற இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் ரகசியம் குறித்து பல்வேறு கருத்துகள் நீண்ட நாட்களாக பரவியுள்ளன. 

இந்நிலையில், மோனலிசா ஓவியத்தில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான தகவலை டாவின்சி மறைத்துள்ளார் என்றும் அதற்கான சான்று மோனலிசா ஓவியத்தில் இருப்பதை கண்டறியலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்...

புகழ்பெற்ற ஓவியத்தில் ஏலியன் துறவி ஒருவர் மறைந்து உள்ளார் என வேற்று கிரகவாசிகளுக்கான இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது..


இது குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், வேற்று கிரகவாசிகளின் மறைவு வாழக்கை முறை குறித்து இந்த குழுவினர் தெரிவித்துள்ளதுடன், அவர்களின் முக அமைப்புகள், தலையில் அணியும் தொப்பி, மேல் அங்கி மற்றும் கைகள் ஆகியவை குறித்தும் வெளியிட்டுள்ளனர்.

வீடியோ  : https://youtu.be/WI-PTaOauRc

கணினியில் உருவாக்கப்பட்டு உள்ள குரல் ஒன்று பேசும்போது, லியோனார்டோ டாவின்சி தனது பெரும்பாலான படைப்புகளில் ரகசிய குறியீடுகள் மற்றும் உணர்வதற்கு அரிய செய்திகளை ஒரு நோக்கத்துடனே மறைத்துள்ளார் என்றும் பெரும்பான்மையான மத வல்லுநர்கள் கூறுகின்றனர். 

இது உண்மை என்றால், மோனலிசா படம் உண்மையில் முக்கியமான வரலாற்று மற்றும் மத உண்மைகளை மறைக்கும் வகையில் ஓவியமாக்கப்பட்டு இருக்கலாம் என கூறுகிறது.

எனினும், அந்த வீடியோ, வேற்று கிரகசவாசிகள் இருப்பதற்கான சாத்தியங்களை குறித்த நம்ப கூடிய விளக்கங்கள் எதனையும் வழங்கவில்லை..


அதனுடன் ஓவியத்திற்கு அதிக வண்ணங்களை கொடுத்து, அதனை பார்ப்பதற்கு ஏற்ற வகையில் மெருகேற்ற வேண்டும் என்பதனையும் ஏற்று கொள்கிறது. 

இது குறித்து யூ டியூப் கருத்து வெளியீட்டாளர் ஒருவர் கூறும்போது, வேற்றுகிரகவாசி சாமியாரா?

வேற்றுகிரகவாசி எந்த மதத்தை சேர்ந்தவராக இருப்பார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.  எனினும், சிலர் இதற்கான சாத்தியம் இருக்கிறது என கூற முன்வந்துள்ளனர்.

வேற்றுகிரக தட்டுகளை குறித்த இணையதளம் ஒன்றினை நடத்தி வரும் வேற்று கிரகவாசி கருத்தியலாளர் ஸ்காட் சி வேரிங் கூறும்போது, டா வின்சி வேற்று உலக உயிரினங்களின் உறுப்பினர் என கூறுகிறார்..

அவர் எழுதும்போது, லியோனார்டோ டா வின்சி ஒரு வேற்று கிரகவாசியாக இருப்பதற்தோ அல்லது அதில் பாதியாக இருப்பதற்கான வாய்ப்போ மிக அதிகமாக காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

அதற்கான குறியீடுகளை அவர் வெளிப்படுத்துகிறார்.  அவர் மிக அதிக அறிவாற்றல் திறன் கொண்டவர்.  அசாதாரண படைப்பாற்றல் திறன் உடையவர்.  அவற்றை பயன்படுத்தி இந்த விசயங்களை அவர் செய்து முடித்துள்ளார். 


இதுபோன்ற பல்வேறு துறைகளிலும் இணைந்து பணியாற்றும் திறன் கொண்டவரான லியோனார்டோ போன்று இருப்பது வழக்கத்தில் இல்லாதது.  ஜீனியஸ் ஆக இருப்பினும் அனைத்து துறைகளிலும் சிறந்து லியோனார்டோ போன்று இருப்பது அரிதானது.

அவரது படைப்புகளில், ரகசிய தகவல்கள் மற்றும் குறியீடுகளை மறைத்து வைப்பவர் என்பது தெரிந்ததே. 

அதனால், இந்த புதிய கண்டுபிடிப்பு, அவரது அசாதாரண திறமைகள் எங்கிருந்து வந்தது அல்லது அவை வேற்று கிரகவாசிகளிடம் இருப்பது, என்பன போன்ற தெரியாத விசயத்தை அறிவதற்கான முக்கிய கரு பொருளாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார். 

டா வின்சியின் ஓவியங்கள் மறைக்கப்பட்ட குறியீடுகள் மற்றும் தகவல்களை கொண்டிருக்கிறது என்ற ஊக அடிப்படையிலான செய்திகள் உள்ளன.  தி டா வின்சி கோடு என்ற புத்தகம் மற்றும் படம் இதனடிப்படையிலேயே உருவாக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2010ம் ஆண்டில், மோனலிசாவின் ஓவியத்தில் அவரது கண்களில் சிறிய எண்கள் மற்றும் எழுத்துகள் இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் அது குறியீடுகளாகவும் இருக்க கூடும் என்றும் வரலாற்று கலைஞர்கள் கூறியுள்ளனர்...

பாஜக மோடியின் சாதனை...


ப்ளாஸ்டிக் தவிர்ப்போம்.. பல கோடி ஏழைகளை வாழ வைப்போம்...


காலப் பயணத்தின் ஆதாரங்கள்...


1500 ஆண்டு பழமையான மம்மி  அணிந்திருந்த ADIDAS காலனி..

மங்கோலியா வில் அல்டாய் மலை அருகில் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1500 ஆண்டுகள் பழமையான பதப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தின் சில பாகங்களை கண்டு பிடித்தனர்...

அந்த பெண் அணிந்திருந்த காலனி நவீன ADIDAS நிறுவன தயாரிப்பு காலனி போல் உள்ளதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு உள்ளது..

இந்த மம்மியை பற்றி ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த பெண் வாழ்ந்த காலத்தில் அந்த மக்கள் இனம் கைவினை பொருட்கள் தயாரிப்பதில் தன்னறிவு பெற்று மிகவும் முன்னேறி இருந்திருக்கும் என கூறினார்..

கைவினையில் சிறந்த இனமாக விளங்கி இருந்தாலும் நவீன அடிடாஸ் நிறுவன தயாரிப்பை  ஒற்ற ( அடிடாஸ் நிறுவதத்தின் தனித்துவமான வரிகள் இந்த காலனிகளில் காணப்பட்டன )..

கால பயணத்தின் ஆதாரமாகவே இதை பலர் பார்க்கின்றனர்...

அசோக் குமார் தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அன்புச்செழியன் போலீசாரிடம் சரணடைந்ததாக தகவல்...


1950 வது வருடம் ஜுன் மாதம்..


Rudolph Fentz என்பவர் நியூயார்கின் பிராதான சாலையில் நடந்து போய் கொண்டு இருக்கிறார்.. அப்போது திடீரென அங்கு வந்த கார், அவர் மீதி ஏறி, சம்பவ இடத்திலேயே இறக்கிறார்..

அதற்கு பிறகு நடந்தது தான் அதிர்ச்சியான சம்பவம்..

சம்பவ இடத்திற்க்கு வந்த போலிசாருக்கு அதிர்ச்சி..  காரணம், அந்த நபர் 1800 ஆம் ஆண்டு வாக்கில் மக்கள் புழங்கிய ஆடையில் இருந்தார்...

சரி பழமை விரும்பி போல என நினைத்து, அவரது உடமைகளை பரிசோதித்ததில் 70 $ கரண்சியும், குதிரைகளை கழுவுதற்க்கு விட்ட டோக்கனும் ( இது 1950 வது வருடம் ), 1876 வருடத்தை சேர்ந்த ஒரு பிஸினஸ் கார்டும் இருந்தது..

எதிலும் அவரது பிறந்த வயது, அடையாளத்தை கண்டறிவதற்கான துப்பு கிடைக்கவில்லை...

அப்படியும் முட்டி மோதி போலிசார் கண்டு பிடித்ததில் 1876 வருடத்திலிருந்து அவர் மாயமாக மறைந்து போனதும் அப்போது அவரது வயது 29 என்பதும் மட்டுமே தெரிந்தது..

அப்படியென்றால் யாரோ ஒருவர் 1800 வாக்கிலேயே டைம்மேஷினை கண்டு பிடித்து விட்டார்களா ? அது உலகிற்கு தெரியாமலேயே போய் விட்டதா ?

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு...


தியான இரகசியம்...


கண் மூடி செய்யும் எந்த ஆன்மிக சாதனையும் தியானமோ , தவமோ ஆகாது.

கண்மூடிட்டான் என்று தமிழில் இறந்தவரையே கூறிப்பிடுவர்.

கண்மூடி பழக்கம் என்று தவறான பழக்கத்தை கூறிப்பர்.

கண் திறந்து கண்மணி உணர்வோடு கண் ஒளி கொண்டு உள் செல்வது தவம். இந்த உணர்வை தன கண் ஒளி கொண்டு கொடுப்பவர் தான் உண்மை சற்குரு. இதற்கு உதாரணங்கள்..

அகத்தியர் கண் மூடி தவம் செய்பவரை மூடர்கள் என்று சாடுகிறார்.

கண் மூடி செய்யும் தியானத்தை திருமூலரும் சாடுகிறார் :

"குருடும் குருடும் சேர்ந்து குருடாட்டம் ஆடி குழியில் விழுந்தவாரே" - திருமந்திரம்.

கண் மூடி தியானம் செய்ய கற்று கொடுபவர்களும் அதை நம்பி அவர் சொல்வதை செய்யும் சீடர்களும் குருடர்கள் என்றும் அவர்கள் கடைசியில் சேருமிடம் மரண குழியே என்பது தான் இதன் அர்த்தம்.

மேலும் வள்ளலார் கண் மூடி பழக்கம் எல்லாம் மண் மூடி போக என்கிறார்.

அகத்தியரும், வள்ளலார், சித்தர்களும் சொல்வதை கேட்பீரா? அல்லது இன்றைய அரை வேற்காடு சாமியார்களை நம்புவீர்களா சிந்திபீர்...

ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சூறைக் காற்று வீசி, மரம் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்...


ரகுவின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது, அனுமதி எங்கே உள்ளது ? எனக் கேட்டு கோவையில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...


இரட்டை இலை டிடிவி மேல்முறையீடு : அவசர வழக்காக ஏற்று நாளை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரனை...


மத்திய பிரதேசத்தில் ஒருவர் வயிற்று வலிக்காக மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்ததில் ஸ்டீல் டம்ளர் எடுக்கப்பட்டுள்ளது...


விசாரித்ததில் மது குடிக்கும் போது டம்ளரை விழுங்கியுள்ளார் என தெரியவந்தது...

பேனர் ஜிக்கள்; கோபத்தில் மீண்டும் கார்டூன் வரைந்த பாலா...


சென்னை ப்ரஸ் க்ளப்பில் வாயில் கருப்பு துணியை கட்டி பத்திரிக்கையாளர்கள் போராட்டம்...


கார்டூனிஸ்ட் பாலா கைதை கண்டித்து போராட்டம் நடத்தியதற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று போராட்டம்...

நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...


பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது.

இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனை மரங்களை நட்டு வளர்த்தனர்.

இதன் காரணம் என்னவென்றால் பனை மரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனை மரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச் செல்லும்.

அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...

நதிகளை காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...

கன்னியாகுமரியில் தற்போது புயல் மழை...






தமிழர்களுக்கு ஜப்பான் இழைத்த பெரும் துரோகம்...


இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற்றிலும் ஜப்பான் தமிழ் மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது.

இலங்கை அரசின் கொடையாளி நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது.

தமிழின அழிப்பை நிறுத்தும்படி குரல் கொடுக்கத் தவறியதோடு சிங்கள அரசுக்குச் சாதகமான இராசதந்திர நகர்வுகளைத் தனது விசேட தூதர் மூலம் ஜப்பான் முன்னெடுத்தது.

மலாயா, சிங்கப்பூர் தமிழர்களை ஜப்பான் நேரடியாகப் படுகொலை செய்தது. இது ஜப்பானுடைய கொடூர முகத்தின் இன்னொரு பரிமாணமாக அமைகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது 1942ல் மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான் தனது ஆதிக்கத்தை பர்மா, சியாம் நாடுகளுக்கு விரிவு படுத்தத் திட்டமிட்டது. சியாம் இப்போது தாய்லாந்து என்று அழைக்கப்படுகிறது.

பர்மாவைத் தாக்கிய பிறகு தனது படையினரையும் ஆயுத தளபாடங்களையும் எடுத்துச் செல்ல ஒரு புகையிரதப் பாதை அமைக்க தொடங்கியது. தாய்லாந்து தலைநகர் பாங்கொக், பர்மா தலைநகர் இரங்கூன் ஆகியவற்றை இணைக்கும் 252 மையில் நிளமான இருப்புப் பாதையை அமைக்க ஜப்பான் திட்டம் தீட்டியது.

அடர் காடுகள், கருங்கல், மலைகள், பெரிய நதிகள் ஆகியவற்றைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. பாதை போடும் பணிக்குப் போர்க் கைதிகளைப் பயன்படுத்த ஜப்பான் படையினர் திட்டமிட்டனர்.

அத்தோடு மலாயா சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களையும் வலுக்கட்டாயமாகக் ஈடுபடுத்தவும் திட்டமிட்டனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தமிழ் ஆண்களும் இளைஞர்களும் சரியான உணவு, மருந்து, ஒய்வு இல்லாமல் மரணமடைந்தனர்.

ஓரு சிலரை விட எல்லோரும் கொல்லப்பட்டனர் என்பதால் இந்த புகையிரதப் பாதை மரண இரயில்வே என்று அழைக்கப்படுகிறது.

சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரான இந்தச் செயல் ஜப்பான் அரசு இழைத்த மிகப் பெரிய போர்க் குற்றமாக போர் முடிந்த பிறகு அதன் மீது சுமத்தப்பட்டது.

இந்த இரும்புப் பாதையைப் போடுவதற்கு ஜப்பான் இராணுவம் 16,000 போர்க் கைதிகளையும் கூடுதலான எண்ணிக்கையில் பொது மக்களையும் பயன்படுத்தியது.

மலாயாத் தோட்டப் புறங்களில் இருந்து கொண்டுச் செல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 80,000 தொடக்கம் 100,000 வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

பிரிட்டன், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சோந்த போர்க் கைதிகள் மேற்கூறிய 16,000 பேரில் அடங்குவர்.

மலேரியா, கொலரா, பெரிபெரி, போசாக்கின்மை போன்றவை உயிரிழப்பை ஏற்படுத்தின. வேலை செய்ய முடியாதவர்கள் சுடப்பட்டனர். குற்றவாளிகள் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

மலாயா சிங்கப்பூர் தமிழர் வரலாற்றில் இது ஒரு கண்ணீர் அத்தியாயம்.

சுபாஸ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்த பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த இந்தியச் சிப்பாய்கள் பர்மா – சயாம் இரயில்வே பணிக்கு கொண்டு செல்லப்படவில்லை.

இந்த ரயில் பாதை தொடர்பான திரைப்படங்களும் ஆய்வு நூல்களும் இன்றுவரை வெளிவந்தபடி உள்ளன.

குவாய் நதிக்கு மேலான பாலம் (Bridge on the River Kwai) என்ற திரைப்படம் பிரசித்தமானது. இதனுடைய படப்பிடிப்பு இலங்கையின் மலைப் பிரதேசத்தில் நடத்தப்பட்டது. காலஞ்சென்ற பிரிட்டிஷ் நடிகர் சேர் அலெக் கினெஸ் (Sri Alec Guinness) பிரதம பாகத்தில் நடித்தார்.

அவுஸ்திரேலியப் போர் கைதிகளின் துன்பியல் வரலாறு பற்றி ஊடகவியலாளர் கமரன் போர்ப்ஸ் (Cameron Forbes) நரகநெருப்பு (Hellfire) என்ற தலைப்பில் 559 பக்க ஆய்வு நூலை எழுதினார். ஒரு அத்தியாயத்தில் பின்வரும் செய்தி கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட சிறிய கப்பலில் ஓரு சிலரை ஜப்பான் படை அதிகாரிகள் மிக நல்லமுறையில் கவனித்தனர்.

சிங்கப்பூரில் ஜப்பானிடம் சரணடைந்த பிரிட்டிஷ் படைக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் ஆர்தர் பேர்சிவலை (Gen Arthur Percival) மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய தளபதி ஜெனரல் தோமோயுக்கி யமாஷிற்றா (Gen Tomoyuki Yamashita) பெரும் மரியாதையுடன் நடத்தினார்.

1,700 கைதிகள் நெருக்கமாக அடையப்பட்டனர். நிற்பதற்கு மாத்திரம் இடம் இருந்தது. வேண்டுமென்றே கப்பல் 54மணி நேரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கைதிகள் ஒருவருக்குமேல் ஒருவர் படுத்து உறங்கினார்கள். சிலர் கப்பலில் இறந்தனர். உடல்கள் கடலில் வீசப்பட்டன. பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இறந்தனர்.

போர் முடிந்து ஜப்பான் படைகள் சரண்புகுந்த பிறகு அவுஸ்திரேலியப் படைகள் அவர்களுக்குச் சொல்லொணாத் துன்பத்தைக் கொடுத்தனர். நீதி விசாரணை என்ற பெயரில் நாளொன்றுக்கு சராசரி ஏழு ஜப்பான் படையாட்கள் தூக்கிலடபட்டனர். விசாரணை இல்லாமல் பலர் சுட்டும், வெட்டியும் கொல்லப்பட்டனர்.

வெறி அடங்கியதும் நட்புறவுகள் ஆரம்பித்தன. சில அவுஸ்திரேலியப் போர் வீரர்கள் ஜப்பான் பெண்களைத் திருமணம் செய்தனர். இன்னும் சிலர் ஜப்பான் சென்று பழைய படையினரோடு நற்புறவு பூண்டனர். இந்த நடவடிக்கைகள் வெள்ளை அவுஸ்திரேலியா நிறவெறிக் கொள்கையை உடைக்க உதவின.

இன்று ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் வர்த்தகப் பங்காளிகளாகி விட்டனர். மன்னிப்போம் மறப்போம் என்ற கட்டம் தொடங்கிவிட்டது.

ஆனால் ஈழத்தமிழர்களால் ஜப்பான் ஆடிய கபட நாடகத்தை மன்னிக்க முடியவில்லை.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக உலகத் தமிழர்களின் குரலாக ஒன்றிணைவோம்...

ரூ40 லட்சத்தை ஒப்படைத்த திருமங்கலம் இன்ஸ்பெக்டர்...


SHEL எண்ணெய் நிறுவனம் செய்த படுகொலை.. மறைக்கப்பட்ட கொடூர வரலாறு...


5 இலட்சம் விவாசிகளின் உயிரை குடித்த ஒரு நிறுவனத்தின் மரண போராட்ட பதிவு ..

இப்பதிவு அந்நிய நாட்டில் என்று யோசித்தாலும் நாளை நமக்கும் இதான் நிலை. பதிவின் இறுதியில் இது புரியும்..

நைஜீரியாவில் கறுப்பர்கள் என்பதை தாண்டி என்னை வளம் என்ற ஒரு விஷயம் உள்ளது.

இதைப்பற்றி யாரும் வாய் திறப்பதும் இல்லை எந்த ஊடகமும் இதை பற்றிய செய்தியை வெளியிடவும் இல்லை.

காரணம் அவர்களுக்கு தான் தெரியும்.. நைஜீரியா ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள முக்கியமான பெரிய நாடு தொழில் வளம் என்பதை தாண்டி பாரம்பரியமும் இங்குள்ளவர்களுக்கு உண்டு.

நைஜீரியாவில் என்னை வளம் என்பது எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுகளான மத்திய கிழக்கு நாடுகளை போன்று இங்கும் எண்ணெய் வளம் கொட்டி கிடக்கின்றது.

போன நூற்றாண்டு வரைகும் எண்ணைக்காக உலக முதலாளித்துவ நாடுகள் பண்ணிய அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல.

நமக்கு ஷெல் [SHELL] என்ற  பெட்ரோலியம் நிறுவனம் பற்றி நமக்கு தெரியும் தானே..

இந்தியாவில் கூட ஆங்காங்கே இந்த நிறுவனங்களை நீங்கள் பார்க்கலாம்..

இந்த ஷெல் நிறுவனம் நெதர்லாந்தின் அரச குடும்பத்திற்கு சொந்தமானது இதில் பிரிட்டனுக்கும் பங்கு உண்டு..

உலக பொருளாதாரத்தை இவனுக
சுரண்டுவதற்கு ஒரு பெயர் அது தான் SHELL..

பெட்ரோலிய நிறுவனம் என்று சொல்லி கொண்டு நைஜீரியாவில் உள்ள அமைச்சர்கள் ஆட்சியாளர்களை கையில் போட்டு கொண்டு அடிக்கும் கூத்துக்கள் ஏராளம் ...

எடுக்கும் எண்ணையை ஷெல் நிறுவனத்தாரிடம் மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்ற கட்டாய ஒப்பந்தம் போடப்பட்டுக் கொண்டு கிட்டத்தட்ட 110 வருடங்களாக சுரண்டி கொண்டுள்ளது ..

இதன் பாதிப்பு எண்ணையை எடுக்க கூடிய நைஜீரிய நாடு தமது எண்ணையை ஷெல் நிறுவனத்தாரிடம் கொடுத்துவிட்டு..

தமது தேவைக்கு அந்நிய நாட்டில் இருந்து பெற்றுக் கொண்டு இருக்கிறது..

[நம்பினால் நம்புங்கள் இதான் உண்மை]

இது நாள் வரைக்கும் இதான் நிலை நைஜீரியாவில்.

நைஜீரிய ஆட்சியாளர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து தமது சுரண்டலை சுரண்டி கொண்டு உள்ளது இந்த ஷெல் நிறுவனம்..

இதில் பங்குதாரராக பிரிட்டிஷுக்கு 40 % சதவீதமும் 60% அரச குடும்பத்திற்காகவும் கிட்டத்தட்ட 100 வருடங்களாக திருடி கொண்டுள்ளது.

இதை உணர்ந்த நைஜீரிய வாலிபர்கள் இதை தட்டி கேட்டால் புரட்சியாளன் என்ற முத்திரை குத்தி அவனை சிறையில் அடைப்பதாக இருந்தது..

பொறுத்துப் பார்த்த மக்கள் எண்ணெய் கடந்து செல்லும் குழாய்களை அடித்து நொறுக்கி தங்களது தேவைக்கு எடுத்து கொண்டனர் .

சில நேரங்களில் குழாய்களை சேதப்படுத்தி விட்டு அந்நிறுவனத்தின் ஆட்கள் வந்து சரி செய்ய வரும் வரை மறைந்து இருந்து..

ஷெல் நிறுவனத்தின் ஆட்களை சிறை பிடித்து அரசுக்கும் ஷெல் நிறுவனத்திற்கும் பலமுறை எச்சரிக்கை செய்து விட்டார்கள் நைஜீரிய பொது மக்கள்..

இருப்பினும் பணத்தாசை பிடித்த கார்ப்பரேட் நிறுவனமான ஷெல்லும் இவனுக்கு வழியமைத்து கொடுக்கும்  உள்ளூர் ஆட்சியாளர்களும் மதிக்கவோ கண்டு கொள்ளவோ இல்லை ..

இதன் உச்சக்கட்டம் என்னவாக இருந்தது தெரியுமா ?

SHEL நிறுவனத்தின் அதிகாரிகள் உயிருக்கு ஆபத்து என்று கத்தி கூப்பாடு போட்டு இவர்களுக்கென்று தனியார் பாதுகாப்பு படை துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பதற்கு உருவாக்கப்பட்டது ...

நினைத்து பாருங்கள் என் நாட்டை சுரண்டி விவசாயிகளின் உயிரை மாய்க்க வைத்து என் அரசுக்கு பணத்தாசை காட்டி விலைக்கு வாங்கி என் மக்களால் உனக்கு ஆபத்து என்று தனி இராணுவம் அமைத்துக்கொள்ளும் அளவுக்கு திராணி வந்து விட்டது என்றால் இதற்கெல்லாம் காரணமான நைஜீரிய மண் சார்ந்த நாங்கள் என்ன செய்வோம் ?

என்று பலரது கேள்வி ?

இந்நிலையில் தான் நைஜீரிய எழுத்தாளர் கென் சரோ விவா என்பவர் இந்த விஷயத்தை கையில் எடுத்தார்..

இவர் சுற்றுசூழல் ஆய்வாளர் கவிஞர் மற்றும் ஆப்பிரிக்காவின் மிகப்பழமை வாய்ந்த ஓகோனி பழங்குடி இன மக்களின் தலைவராகவும் இருந்தார்.

இவர் சுற்றுச் சூழல் சீர்கெட்டது என்றும்  எண்ணெய்க் கசிவாலும் அமில மழையாலும் வளம் கொழித்த நிலங்கள் சத்து இழந்தன என்றும்..

இந்த ஷெல் நிறுவனத்தால் எண்ணெய் எடுக்கிறேன் என்ற பெயரில் விவசாய நிலங்களை அழித்ததால் கடந்த 100 ஆண்டுகளில் ஏறக்குறைய 5 இலட்சம் விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் மாண்டனர் என்ற ஆய்வு உண்மையை உலகிற்கு போட்டு உடைத்தார்..

இனியும் சரிவராது என்று உணர்ந்த ஷெல் நிறுவனம் . நைஜீரிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து Ken Saro Wiwa மற்றும் இவரது கூட்டாளிகள் 8 அப்பாவி மக்களையும் 1995 வருடம் தூக்கிலிட்டது ..

இதோடு ஒரு நூற்றாண்டுக்கான போராட்டம் வெற்றியடையாமலே முடிந்தது....

இன்றுவரைக்கும் தொடர்ந்து தங்களது வயிற்றை நிரப்பி கொண்டு தான் உள்ளது..

ஒரு 100 வருடத்தில் 5.5 இலட்சம் விவசாயிகளை காவு வாங்கிக்கொண்டு தமது வியாபாரத்தை நடத்தி கொண்டுட்டு தான் இருக்கிறது இந்த SHEL நிறுவனம்....

நான் ஆரம்பத்தில் சொன்னது போன்று இதையெல்லாம் மக்களிடம் சொல்லவோ விவாதம் செய்யாவோ ஊடகங்களுக்கு நேரம் இருக்காது சமூக ஊடகங்கள் நமது கையில் உள்ளது .

நைஜீரிய மக்களது 100 வருட போராட்டம் தமிழகத்திற்கும் பொருந்தும்..

சிந்திப்பவர்கள் கிரகித்து கொள்ளட்டும்...

இலவசத்தை மட்டுமே நம்பியதால், இன்று, தமிழினம் தல்லாடி நிற்கின்றது...


மாணவர்களே, இளைஞர்களே கோபம் கொள்ளுங்கள்.. திமுக, அதிமுக கொள்ளையர்களை தமிழகத்தை விட்டு விரட்டுங்கள்...

அமானுஷ்ய உண்மைகள்... தற்கொலை செய்ய தூண்டும் பாடல்.. யாரும் முயற்சிக்க வேண்டாம்...


ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து நிராகரிக்கும் இபிஎஸ் ஆதரவாளர்கள், மதுரை கூட்டத்தில் வெளிநடப்பு செய்த ஏ.கே.போஸ்...


மதுரையில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் துணை முதல்வர் OPS திடீரென பங்கேற்றதால், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் கூட்டத்தை விட்டு பாதியில் வெளியேறினார்...

தொடரும் கவர்னரின் ஆய்வு...


தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், டிசம்பர் மாதம் 7-ம் தேதி, கன்னியாகுமரியில் அரசு திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய இருக்கிறார்...

உலகின் திகில் கிளப்பும் தீவு...


கிளிப்பர்டன் தீவு (Clipperton Island)...

1914-ம் ஆண்டு... மெக்சிகோவின் தென் - மேற்குப் பகுதியில் இருக்கும் இந்தத் தீவை  பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து பாதுகாக்க 100 பேரை குடியமர்த்துகிறார், அன்றைய மெக்சிகோ அதிபர். ஒரு கலங்கரை விளக்கத்தையும் அமைக்கிறார். இவர்களுக்கான உணவுகள் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை கப்பலில் அனுப்பப்பட்டு வந்தது.

திடீரென மெக்சிகோவில் உள்நாட்டு கலவரம் வெடிக்க, இந்தத் தீவையும், இந்த 100 பேரையும் மறந்து போயினர். உண்ண உணவில்லாமல் போராடி, ஒவ்வொருத்தராக செத்து மடிய ஆரம்பித்தனர். 

கடைசியாக லைட் ஹவுஸ் வாட்ச்மேன், அல்வாரிஸும் , 15 பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே உயிர் பிழைத்திருந்தனர்.

பித்துப் பிடித்து போன அல்வாரிஸ், அந்தப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கொல்ல ஆரம்பிக்கிறான்.

ஒரு கட்டத்தில், தன் குழந்தைகளைக் காக்க டார்ஸா ரென்டன் என்கிற பெண்மணி அவனை கொலை செய்கிறார்.

இரண்டாண்டுகள் உயிர் பிழைத்திருந்த 4 பெண்கள் மற்றும் 7 குழந்தைகளை 1917-ல், அந்த வழி வந்த அமெரிக்காவின் ஒரு கப்பல் காப்பாற்றியது.

அன்று முதல், இன்று வரை மனித கால் தடம் பதியாமல், மர்ம பூமியாகத் திகழ்கிறது கிளிப்பர்டன் தீவு...

வெந்நீர் குடிப்பதின் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்...


சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.

அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்...

அழிக்கப்பட்ட பறவையினமும் விவசாய அழிவும்...


காட்டை அழித்து விட்டு கடவுல் சிலை எதற்கு?

கோட்டான் என்ற ஒரு வகை பறவை நாம் சிறு வயதில் பார்த்து இருப்போம் நினைவில் இல்லாதவர்கள் கூவை என்ற பெயரில் சில இடங்களில் கூறுவார்கள்.

இப்போதெல்லாம் இந்த வகை பறவைகளை நாம் காண்பதே அறிது..

காரணம் நாம தான்.

இந்த கோட்டான் ஆந்தையை விட பெரியது
அதிகமாக சுடுகாட்டில் தான் இது வாழும்.

காரணம் இதற்கு மனிதர்களை  பிடிக்காது அதனால் அமைதியான இடத்தில் வாழும்.

சுடுகாட்டில் இது வாழ்வதால் இதை அபசகுணமான பறவை என்றும் வீட்டில் பின்புறம் உள்ள மரத்தில் உட்கார்ந்தால் வீட்டில் மரணம் ஏற்படும் எனவும் கட்டவிழ்த்து இதற்கு சாக்குருவி  (சாகடிக்கும் குருவி) தான் சாக்குருவி என்று மாறி இதை கண்டால் கொள்ளுங்கள் என்று எவனோ சொண்ணதை நம்பிய நாம்..

கண்ட இடத்தில் எல்லாம் கொன்றோம் விளைவு இந்த இனப்பறவை ஜூவிலும் கண்காட்சியிலும் கூட வைக்கபடுவதில்லை. .

இதன் பயன் என்ன தெரியுமா?

இந்த கோட்டான் என்று சொல்லக்கூடிய இந்த பறவையின் குஞ்சு ஒரு நாளைக்கு 14 எலிகளை தின்றுவிடுமாம்.

இது மற்றுமின்றி தின்ற இடத்தில் சிறிது நேரத்தில் எலியின் சக்கையை உடலை மட்டும் உருட்டி வாய் வழியே கக்கிவிட்டு செல்லுமாம் அதாவது கக்கிய எலியின் உடல் மண்ணோடு மண்ணாகி மழையில் நனைந்து ஊறி வெயிலில் காய்ந்து இத்துப்போய் மக்கிப்போய் மண்ணுக்கு உரமாக ஆகிவிடுகிறது..

எவ்வளவு பெரிய விஷயம்
அல்லவா இது.

இப்போது பயிற்களை நாசப்படுத்தும் எலிகளையும் காணவில்லை கோட்டாரையும் காணவில்லை. ஏன் விவசாயத்தையும் காணவில்லை...

நவீனம் நவீனம் என்று எங்கே போய்க் கொண்டுளோம்...

பாரம்பரியத்தை அழித்து விட்டு பயித்தியம் பிடித்து அழைகின்றோம்..

மரம் வேண்டும் மரத்தில் தான் பறவைகள் கூடு கட்டும் பறவைகள் இருந்தால் தான் நம் விளைச்சல் நிலங்களில் உள்ள பூச்சிகளை சாப்பிடும்..

பூச்சிகளை சாப்பிட்டு தமது எச்சத்தை (கழிவை) நிலத்தில் வெளியிடும்
அந்த எச்சம் தான் 100 % உண்மையான உரம்..

இதற்கு பறவைகள் வாழ மரமும் காடும் தேவை.. காட்டை அழித்து விட்டு மன அமைதிக்கு யோகா கற்றுக் கொடுக்க மண்டபம் கட்டுவதெல்லாம் கேவலத்திலும் கேவலம்...

குஜராத்தில் பாஜக முதலமைச்சருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லையாம்...


ஆனால் கட்சி தாவுன காங்கிரஸ் MLA க்கள், பாஜக சார்பாக போட்டியிட வாய்ப்பாம்...

அரசின் செயல்பாடுகளை பற்றி மக்கள் அவ்வப் பொழுது ஒரு தீர்மான செய்தியை மனதிற்குள் இட்டு கொள்ள வேண்டும்...


அரசியல்வாதிகள் மக்களிற்கு பணியாற்றும் ஒரு  ஊழியர் என்பதை மறந்து பல வருடங்கள் ஆகி விட்டது...

தமிழகத்தில் விரைவில் ஆளுநர் ஆட்சி , எதையும் தட்டிக் கேட்காமல் அடிமையாக நடந்து கொண்ட ஒரே காரணம் , ஆட்சி அசிங்கபடுகிறது ? இதை போல ஒரு கேவலமான நிலையை எந்த மாநில அரசும் பெற்றது இல்லை...


நேற்று (நவம்பர் 28) இரவு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாடு ஆளுநருக்குக் கூடுதல் தலைமைச் செயலாளர் என்ற பதவி புதிதாக உருவாக்கப்பட்டு அப்பதவியில் ராஜகோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்படுகிறார். இவர் ஒரு வருட காலத்துக்கு இப்பதவியில் இருப்பார். ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி எனப்படுவது தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு நிகரானதாகும்.

இதுவரை தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது...

முக்தியும் மனமும்...


ஆன்மாவாகிய நாம் முதல் பிறப்பில் இருந்து சேர்த்த எண்ணப் பதிவுகளே நம்மை மறுபிறவிக்கு அழைத்து செல்கிறது.

அதை நாம் மனதின் கர்மம் என்கிறோம். இந்த கர்ம வினைகளை ஒருகாலும் நாம் அழிக்கவே முடியாது.

பிரபஞ்சத்தின் உருவான தகவல் ஒருபோதும் அழியாது என தற்போது வாழும் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாங்கிங்கே ஒப்புக் கொண்டார்.

ஆம் நாம் தகவலை அழிக்கவே முடியாது. ஆனால் அந்த கர்மத்தில் இருந்து மனதை பிரிக்க முடியும்.

நாம் பற்றற்ற நிலையில் எல்லா ஆசைகளையும் துறந்தால் நம் ஆன்மா எண்ணப் பதிவுகளில் இருந்து படிப்படியாக விலகும்.

பாவம்-இரும்பு விலங்கிட்டும், புண்ணியம்- பொன் விலங்கிட்டும், நம்மை மறுபிறப்பிற்கு அழைத்து செல்லும்.

எனவே சித்த நிலைக்கு முயல்பவன் மனித வாசனைகள் அல்லாத காடுகளுக்கு சென்று குகைகளில் மறைந்து தனித்து வாழ்கிறான்.

இன்னும் சில உண்மைகளை நான் இங்கு சொன்னால் அது கசக்கும் என்பதால் வேண்டாம் என விட்டு விட்டேன்...

6 மாதத்தில் தமிழகத்தில் உள்ள மணல்குவாரிகளை மூட வேண்டும், புதிய மணல் குவாரிகளை திறக்கக் கூடாது - தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...


தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பபட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்...

தமிழகத்தில் உள்ள கிரானைடு குவாரிகளை மூட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு...


நாவல் பழம் (நவ்வா பழம் )...


நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்...

கும்பிட்டே ஒருவரை கல்லறைக்கும் இன்னொருவரை ஜெயிலுக்கும் அனுப்பி, தம்மை எப்போதும் வளமாக்கி கொண்ட சரித்திரம் படைத்த, கோமாளிகள் போல உலகிற்கு காட்டி கொண்டு, மக்களிடம் நடிக்கும் படு பயங்கரமானவர்கள்...


இராமாயணம் என்கின்ற புழுகு மூட்டை...


சுகேசன் என்ற அரசன் குமரிக் கண்டத்தில் ஒரு பெரிய மலையில் இருந்து ஒரு பேரரசை ஆண்டான் இவன் மகேந்திர மலை அல்லது மணி மலை என்று சொல்லப்படுகின்ற நாகர்களின் அரச பரம்பரையில் தெய்வவதி என்ற பெண்ணை திருமணம் செய்தான்.

இவர்களுக்கு மாலியவான், சுமாலி என இரண்டு புத்திரர்கள். இவர்களில் பராயம் வந்ததும் மாலியவான் ஈழத்துக்கு அரசன் ஆனான். இவனே பத்து நாடுகளை வென்று முதலில் தனது கிரீடத்தில் பத்து நாடுகளின் முடியையும் பதித்து ஒரு கிரீடத்தை அணிந்து இருந்தான்.

இவனே இராமாயணம் வர்ணனை செய்ததை விட மேன்மையான இலங்கா புரியை அமைத்து இருந்தான். இவனது ஆட்சியின் முடிவில் இவன் தம்பி சுமாலி நாட்டை ஆண்டான். சுமாலி மாதோட்ட நாகர் குல இளவரசி கேது மதியை திருமணம் செய்தான்.

இவர்களுக்கு ஆண்பிள்ளை இல்லை ஒரே ஒரு மகள் அவள் பெயர் கை கேசி. (தசரதன் மனைவி கைகேயி அல்ல) இதனால் மாதோட்ட அரசை ஆண்ட புலஸ்தியர் குணவதி ஆகியோரது மகனும் கேது மதியின் அண்ணனும் ஆகிய வச்சிர வாகு என்பவன் நாட்டை ஆண்டான்.

வச்சிர வாகு அழகா புரி இயக்கர் குல தேவ கன்னி என்ற இளவரசியை திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான் அவனே வச்சிர வாணன் இவன் தந்தைக்கு பின் அழகாபுரியையும் இலங்காபுரியையும் ஆண்டான்.

இவன் நாட்டில் பெருமளவு செல்வம் இருந்த தாலும் பூமியின் மிகப்பெரிய தேசத்தை ஆண்டதாலும் இவனுக்கு காலப்போக்கில் குபேரன் என்ற புகழ் பெயர் வரலாயிற்று.

இவனே முதன் முதலில் சூரிய பிரகாசம், என்றும் புட்பக விமானம் என்று இரு கடல் விமானங்களை வைத்திருந்தான். குபேரனுக்காக மண்டோதரியின் தந்தை மாயன் என்பவரே இவ்விரு விமானங்களையும் வடிவமைத்தான்.

குபேரன் காலத்திலேயே மயனின் தொழில் நுட்பத்தில் ஈழத்தில் முதன் முதலில் கோபுரங்களை கொண்ட சிவாலயங்கள் கட்டப்பட்டதாகவும் அறியப்படுகின்றது..

இவன் ஆட்சி புரிந்த காலத்திலேயே அழகா புரியில் இருந்து இயக்கர் குலத்தவர் ஈழத்துக்கு வந்ததாகவும் வரலாறு உண்டு. இவன் தந்தை வச்சிர வாகு சுமாலி கேதுமதியின் மகள் கைகேசியையும் இரண்டாம் தாரமாக திருமணம் செய்தான்.

இவர்களுக்கு பிறந்த பிள்ளைகளே. இலக்கிய ரசனைக்காக ஆரியர் தம்மை உயர்வாய் காட்ட அரக்கர்களாய் சித்தரிக்கப்பட்ட இராவணன், கும்மகர்ணன், விபூசணன், சூர்ப்பனகை..

இவர்களுக்கு பெற்றவர்கள் இட்ட பெயர் முறையே சிவதாசன், பரமன், பசுபதி , உமை அம்மை..

சிவதாசன் வளர்ந்ததும் குபேரன் அதாவது வச்சிர வாணன் வம்சத்தில் தம்பிக்கே உரிமை உள்ள ஈழதேசத்தை கொடுத்து விட்டு, புட்பக விமானம் என்ற ஆகாய ஊர்தியையும் கொடுத்துவிட்டு தான் அழகா புரி அரசை ஆள செல்கின்றான்.

கால ஓட்டத்தில் ஆரியர்கள் தென்னிந்தியர்களை ஏமாற்றி அவர்களை தங்கள் கைபோம்மைகள் ஆக்கி ஈழத்தின் மீது படை எடுத்து பத்து தேசங்களுக்கு முடிக்கு உரிய அரசனாய் இருந்த சிவதாசனை வஞ்சகமாய் அவன் தம்பி பசுபதியையே தங்களுக்கு சாதக மாக்கி அவனது போரியல் நுணுக்கங்களையும் படை பல. இரகசியங்களையும் அறிந்து சிவாதாசன் என்கின்ற உலக மகா வீரனை வென்றார்கள்.

அன்பான உறவுகளே உங்களுடன் இன்னும் சில நிமிடம்.. ஈழத்தவர்களை அழிப்பதற்கு பல்வேறு வழிகளில் தென் இந்தியர்களை ஆரியர்கள் பயன்படுத்தினார்கள்.

தென்னிந்தியர்களின் உதவியே சிவதாசன் என்கின்ற இராவணனின் ஈழதேசம் வீழ்சி அடைய காரணம். அவர்களே பசுபதி ஆகிய விபூசணனையும் ஆரியர்கள் பக்கம் மாற்றினார்கள்.

திராவிட மாயையில் தெளிவில்லாமல் மயங்கி நிற்கும் தென்னிந்திய உறவுகளே.. இராமாயணம் உண்மை என்று உணர்ச்சி போங்க வாதிடும் உறவுகளே..

இராமாயணம் கடைசியில் உங்களை குரங்குகள் என்றும் எங்களை அரக்கர்கள் என்றும் தான் சொன்னதே தவிர உயர் குல அரசுகள் என்று சொல்லி மாலை போடவில்லை...

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் பெயர் பலகை இந்தி மொழிக்கு முக்கியத்துவம் தந்து நடுவில் உள்ளது...


அரிய கண்டுபிடிப்பு.. இதுவே வெளிநாட்டிலோ அல்லது இந்தியாவிலோ நடந்திருந்தால் அது உலக செய்தி...


நெல்லிக்குப்பம் அருகே உள்ள கோவிலில் மூன்று சித்தர்கள் அமர்ந்த நிலையில் அப்படியே சீவ சமாதி ஆகியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அரிதான கண்டு பிடிப்பு.

தமிழர்கள் இப்படியான சமாதி நிலையில் பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் தங்கள் உடலை அழியாமல் பாதுகாக்கும் உத்தியை அறிந்து வைத்துள்ளனர்.

இது குறித்து சில நூல்களில் நாம் படித்திருந்தாலும் நேரடியான தடயங்கள் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது நேரடியான சான்று கிடைத்துள்ளது.

இருப்பினும் இந்த செய்தி வெளிவராமல் பார்த்துக் கொள்வார்கள் என்றே கருதுகிறோம். காரணம் அனைவருக்கும் தெரியும்...

http://www.dailythanthi.com/News/State/2016/11/29022430/The-discovery-of-the-cellar.vpf

அதிமுக ஜெயக்குமார் கலாட்டா...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் தேர்தல் களம்...


யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடு... ஆனால் நாங்கள் தான் ஜெய்போம்...

உலகின் திகில் கிளப்பும் தீவு...


கன்கஞ்சிமா தீவு (Gunkanjima Island)...

ஜப்பானின் நாகசாகி அருகே இருக்கும் ஒரு தீவு.

இந்தப் பகுதியில் 1800 களில்  நிலக்கரிச் சுரங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

பிரபல மிட்சுபிஷி நிறுவனத்தின் இந்த சுரங்கத்தில் வேலை செய்ய மக்கள் தீவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

16 ஏக்கர் பரப்பரவிளான தீவு முழுக்க, காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டு அவர்களுக்குத் தேவையான மருத்துவமனைகள், வீடுகள், பள்ளிக் கூடங்கள் என அனைத்தும் கட்டப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் முடியும் வரை பணியாளர்கள் அனவரும் கொத்தடிமை முறையிலேயே பணி புரிந்து வந்தனர்.

1960களின் முடிவில் சுரங்கம் மூடப்பட்டது.

மக்கள் அனைவரும் சுதந்திர காற்றை சுவாசித்தவாறு வெளியேறினர்.

ஒரு வரலாற்றுத் துயரத்தின் சாட்சியாக நீலக் கடலின் நடுவே கான்கிரீட் தீவாக நின்று கொண்டிருக்கிறது கன்கஞ்சிமா...

பாஜக வும் போட்டோசாப் அரசியலும்...



முகத்தில் படந்திருக்கும் கரும்புள்ளிகள் போக...


ரோஜா இதழ்களுடன், பாதாம் பருப்பை ஊற வைத்து, அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும்.

வாழைப்பழம் அல்லது பப்பாளி பழத்துடன், சிறிது தேன் கலந்து குழைத்து, முகத்தில் பூசி வரலாம்.

வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.

உருளைக்கிழங்கை ரெண்டாக வெட்டி, தடவவும்.

ஜாதிக்காய் அரைத்துப் போடலாம்.

முகத்தில் வெண்ணெய் தடவி, எலும்பிச்சைச் சாறு கலந்த வெந்நீரால் ஆவி பிடித்து, துண்டால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, கரும்புள்ளி மறையும்.

பன்னீர், விளக்கெண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளி உள்ள இடங்களில் தடவவும். பின், டவலை சூடான நீரில் நனைத்து பிழிந்து, முகத்தில் வைத்து பஞ்சினால் துடைத்து எடுத்து விடவும்.

வெள்ளரிச்சாறு, போரிக் பவுடர், தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளிகளில் தடவி, ஐந்து நிமிடம் ஊறவிடவும். பின், லேசாக மசாஜ் செய்து துடைத்தால், உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும்.

கோதுமை தவிடு, பால் இரண்டும் தலா ஒரு மேஜைக்கரண்டி கலந்து, கரும் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். கொஞ்ச நாட்களில் கரும் புள்ளிகள் வலுவிழந்து உதிர்ந்து விடும்...