Rudolph Fentz என்பவர் நியூயார்கின் பிராதான சாலையில் நடந்து போய் கொண்டு இருக்கிறார்.. அப்போது திடீரென அங்கு வந்த கார், அவர் மீதி ஏறி, சம்பவ இடத்திலேயே இறக்கிறார்..
அதற்கு பிறகு நடந்தது தான் அதிர்ச்சியான சம்பவம்..
சம்பவ இடத்திற்க்கு வந்த போலிசாருக்கு அதிர்ச்சி.. காரணம், அந்த நபர் 1800 ஆம் ஆண்டு வாக்கில் மக்கள் புழங்கிய ஆடையில் இருந்தார்...
சரி பழமை விரும்பி போல என நினைத்து, அவரது உடமைகளை பரிசோதித்ததில் 70 $ கரண்சியும், குதிரைகளை கழுவுதற்க்கு விட்ட டோக்கனும் ( இது 1950 வது வருடம் ), 1876 வருடத்தை சேர்ந்த ஒரு பிஸினஸ் கார்டும் இருந்தது..
எதிலும் அவரது பிறந்த வயது, அடையாளத்தை கண்டறிவதற்கான துப்பு கிடைக்கவில்லை...
அப்படியும் முட்டி மோதி போலிசார் கண்டு பிடித்ததில் 1876 வருடத்திலிருந்து அவர் மாயமாக மறைந்து போனதும் அப்போது அவரது வயது 29 என்பதும் மட்டுமே தெரிந்தது..
அப்படியென்றால் யாரோ ஒருவர் 1800 வாக்கிலேயே டைம்மேஷினை கண்டு பிடித்து விட்டார்களா ? அது உலகிற்கு தெரியாமலேயே போய் விட்டதா ?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.