30/11/2017

அழிக்கப்பட்ட பறவையினமும் விவசாய அழிவும்...


காட்டை அழித்து விட்டு கடவுல் சிலை எதற்கு?

கோட்டான் என்ற ஒரு வகை பறவை நாம் சிறு வயதில் பார்த்து இருப்போம் நினைவில் இல்லாதவர்கள் கூவை என்ற பெயரில் சில இடங்களில் கூறுவார்கள்.

இப்போதெல்லாம் இந்த வகை பறவைகளை நாம் காண்பதே அறிது..

காரணம் நாம தான்.

இந்த கோட்டான் ஆந்தையை விட பெரியது
அதிகமாக சுடுகாட்டில் தான் இது வாழும்.

காரணம் இதற்கு மனிதர்களை  பிடிக்காது அதனால் அமைதியான இடத்தில் வாழும்.

சுடுகாட்டில் இது வாழ்வதால் இதை அபசகுணமான பறவை என்றும் வீட்டில் பின்புறம் உள்ள மரத்தில் உட்கார்ந்தால் வீட்டில் மரணம் ஏற்படும் எனவும் கட்டவிழ்த்து இதற்கு சாக்குருவி  (சாகடிக்கும் குருவி) தான் சாக்குருவி என்று மாறி இதை கண்டால் கொள்ளுங்கள் என்று எவனோ சொண்ணதை நம்பிய நாம்..

கண்ட இடத்தில் எல்லாம் கொன்றோம் விளைவு இந்த இனப்பறவை ஜூவிலும் கண்காட்சியிலும் கூட வைக்கபடுவதில்லை. .

இதன் பயன் என்ன தெரியுமா?

இந்த கோட்டான் என்று சொல்லக்கூடிய இந்த பறவையின் குஞ்சு ஒரு நாளைக்கு 14 எலிகளை தின்றுவிடுமாம்.

இது மற்றுமின்றி தின்ற இடத்தில் சிறிது நேரத்தில் எலியின் சக்கையை உடலை மட்டும் உருட்டி வாய் வழியே கக்கிவிட்டு செல்லுமாம் அதாவது கக்கிய எலியின் உடல் மண்ணோடு மண்ணாகி மழையில் நனைந்து ஊறி வெயிலில் காய்ந்து இத்துப்போய் மக்கிப்போய் மண்ணுக்கு உரமாக ஆகிவிடுகிறது..

எவ்வளவு பெரிய விஷயம்
அல்லவா இது.

இப்போது பயிற்களை நாசப்படுத்தும் எலிகளையும் காணவில்லை கோட்டாரையும் காணவில்லை. ஏன் விவசாயத்தையும் காணவில்லை...

நவீனம் நவீனம் என்று எங்கே போய்க் கொண்டுளோம்...

பாரம்பரியத்தை அழித்து விட்டு பயித்தியம் பிடித்து அழைகின்றோம்..

மரம் வேண்டும் மரத்தில் தான் பறவைகள் கூடு கட்டும் பறவைகள் இருந்தால் தான் நம் விளைச்சல் நிலங்களில் உள்ள பூச்சிகளை சாப்பிடும்..

பூச்சிகளை சாப்பிட்டு தமது எச்சத்தை (கழிவை) நிலத்தில் வெளியிடும்
அந்த எச்சம் தான் 100 % உண்மையான உரம்..

இதற்கு பறவைகள் வாழ மரமும் காடும் தேவை.. காட்டை அழித்து விட்டு மன அமைதிக்கு யோகா கற்றுக் கொடுக்க மண்டபம் கட்டுவதெல்லாம் கேவலத்திலும் கேவலம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.