சென்னை மாநகர நில ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலில்
ஒருபகுதி மட்டுமே...
ஆளுநர் மாளிகை 30 ஏக்கர்.
ஜேகே பவுண்சேசன் 250ஏக்கர். தமிழ்நாடு குதிரைப் பந்தைய சங்கத்துக்கு 112 ஏக்கர்.
இதற்கான வாடகை மாதம் ஒன்றுக்கு ரூபாய் 600 மட்டுமே வாடகை. குத்தகை காலம் 99ஆண்டுகளுக்கு.
இந்தியா சிமென்ட் சீனிவாசன் ஜிம்கானா கிளப் நடத்த 99ஆண்டு குத்தகைக் பலநூறு ஏக்கர் நிலங்கள்.
தியாகிகள் சொசைட்டிக்கு ஒதுக்கப்பட்டு முழுவதும் இப்போது பார்ப்பனர் சமூக மேட்டுக்குடிகளின் ஆளுமையில் உள்ள நிலம்1500 ஏக்கர்.
ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவி நடத்தும் கலாச்சார. மயிலை கபாளீலீசுவர் கோயில் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் நிலங்கள் கட்டிடங்கள் முழுவதும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் குஜராத்தி செட்டுகளில் ஆக்கிரமிப்பில் உள்ளது.
சர்.பி.இராமசாமி ஐயர் சாலையில் நூறுகோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள வணிகவளாகம் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட சுமார் 15பேருக்கு மாதம் ஒன்றுக்கு 3000-முதல் 5000ரூபாய் வாடகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ராசா அண்ணாமலைபுரம் மாநகராட்சி வணிக வளாகம் 20 பணக்காரர்களுக்கு ரூபாய் 500 முதல் 1000 ரூபாய் வாடகையில் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கடன்சுமை நிதிநெருக்கடி பற்றி வாய்கிழிய பேசும் திமுக அதிமுக வினர் இதையும் பங்குபோட்டுக் கண்டுள்ளனர். இப்படியாக பட்டியல்கள் நீள்கின்றன.
உண்மையான ஆக்கிரமிப்பாளர்கள் விட்டுவிட்டு மாநகர சேரி ஏழைகளை ஆக்கிரமிப்பாளர்கள் என்று வழக்குப் பதிவு செய்ய ஒரு கூட்டம்..
அதற்காக வழக்காட ஒரு வழக்கறிஞர் கூட்டம்..
அதற்கு ஆதரவாக தீர்ப்புச் சொல்ல ஒரு நீதிபதிகள் கும்பல்..
அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஒரு அடிமை அரசு அதிகாரிகள் மற்றும ஊழியர்கள் கூட்டம்..
இடிப்பதை எதிர்த்துப் போராடுகிறவர்களை ஒடுக்க காவல்துறை என்ற அடியாள் கூட்டம்..
போராட்டத்தை பலவீனப்படுத்தி மக்களை ஒன்று சேரவிடாமல் கலைக்கும் உளவுப்படை கூட்டம்..
இதுக்கு எதுக்குடா நாடு?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.