28/11/2017

திருமந்திரம் கூறும் சத்தியம் இதுவே...


“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே”

திருமந்திரம் கூறும் சத்தியம் இதுவே..

தமிழ் மறையான இதுவே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை ஞானம்.. இறை இரகசியம்..

நம் உடலாகிய கோயிலில் உயிராக தானே வீற்றிருக்கிறான் எல்லாம் வல்ல இறைவன்.. இறைவன் பெருஞ்ஜோதியானவன் எங்கும் நிறைந்தவன்.. இறைவனே ஜீவனாக சிறு ஜோதியாக நம் உடலில் உறைந்துள்ளான்.. என்ன விந்தை இது? அவனே படைத்து, காத்து, அழித்து, எதற்கு இந்த நாடகம்? ஏனிந்த திருவிளையாடல்.?

இன்றுவரை இந்த உலகில் தோன்றிய மதங்களும், மார்க்கங்களும், மகான்கள் அனைவரும் சொன்னதும் ஒப்புக் கொண்டதும் இந்த உண்மை ஒன்றையே..

இறைவன் ஒருவரே அவர் ஜோதி ஸ்வரூபம்.. நம் உடலில் உயிராக இருப்பதும் அவரே.. அவனின்றி ஓர் அணுவும் அசையாது.. இதை மறுப்பவர் யாருமில்லை.. எம்மதமும் இந்த உண்மைகளை மறுத்ததில்லை.. உலகர் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரே உண்மை இது ஒன்றே..

எல்லாம் வல்ல இறைவன் பெருஞ்ஜோதிமயமானவன் என்றும் அவனே சிறுஜோதியாக நம் உடலில் உயிராக இருக்கின்றான் என்பதும் தான் மனிதனாக பிறந்த நாம் அரிய வேண்டிய மாபெரும் இரகசியம்..

இதை அறிந்தவன், தகுந்த குரு மூலம் உணர்ந்தவன் தான் ஞானம் பெறுவான்..

அறிந்தால் மட்டும் போதாது.. குரு மூலம் தீட்சை மூலம் உணரவும் வேண்டும். தவம் செய்யவும் வேண்டும். அப்போது தான் ஞானம் கிட்டும். இறையருள் பெறலாம்..

இந்த ஞான இரகசியத்தை அறியாமல் இந்த உலகில் நீங்கள் வேறு எதை செய்தாலும் ஞானம் கிட்டாது..

தன் உயிரை அறிவதே, உணர்வதே இறைவனை அறிவதும் உணர்வதுமாகும்.. தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும்.. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்..

உயிர் நம் உடலில் எங்கிருக்கிறது? என தெரிந்தால் தானே.. எப்படி இருக்கிறது என்று தெரிந்தால் தானே.. தவம் செய்ய முடியும்?

கடோபநிசத்தில் எமதர்மனிடம் நசிகேசன் உயிர் பற்றி, கடவுள் பற்றி கேட்க அவர் கூறுகிறார்...

இறைவன் மனிததேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் புகையில்லாத ஜோதியாக விளங்குகிறான். என்று..

இதில் உடனே நாம் இரு விசயங்களை தெரிந்து கொள்ளலாம். ஒன்று இறைவன் மனித தேகத்திலும் உள்ளார் என்பது

மனித தேகத்தில் உள்ளார் சரி.. நாம் வெளியே பார்க்கும் ஜோதி – தீ புகையுள்ளது இறைவன் பெருஞ்ஜோதியானவன் – தீ வண்ணன் புகையில்லாத ஜோதிஸ்வருபம் இதுவும் சரி.. நம் உடலில் எங்கிருக்கிறது? அந்த ஜோதி – உயிர் – இறைவன்? சின்முத்திரை அளவான இடம். இதுதான் மாபெரும் இரகசியம். குரு ஊபதேசம் மூலம் அரிய வேண்டியது. அடியேன் இங்கே குரு எங்களுக்கு உபதேசித்ததை எழுதுகிறேன்..

நன்றாக கவனமாக பாருங்கள்..

மனித தேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் உள்ளார்..

சின்முத்திரை பிடித்துக் கொண்டு உட்கார சொல்லவில்லை.. சின்முத்திரை பிடித்தால் அதாவது நமது கை பெருவிரலும் ஆள்காட்டி விரலும் தொட்டுக் கொண்ட நிலை அல்ல.. ஆள்காட்டி விரல் மடக்கி பெருவிரலின் மத்தியிலுள்ள கோடை தொட்ட நிலையில் மற்ற மூன்று விரலும் நீட்டியபடி இருப்பதே சின்முத்திரை..

இப்படி சின்முத்திரை பிடித்தநிலையில் கை பெருவிரல் மத்தியிலுள்ள கோடு வரை உள்ள இடமே நம் கண் அளவு..

வைத்துப் பாருங்கள். சின்முத்திரை – கண்போல தோன்றும்.

அதாவது இறைவன் மனித தேகத்தில் கண்ணில் ஜோதியாக துலங்குகிறான் என்பதே மாபெரும் ஞான இரகசியாமாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.