சங்ககாலத்தில் தமிழகத்தில் இருபத்துநான்கு நாடுகள் இருந்தன. அவற்றில் வட ஆர்க்காடு செங்கல்பட்டு ஆகிய பிரதேசங்கள் அடங்கியது அருவாநாடு.
அதற்கும் வடக்கே இருந்தது அருவா வடதலை நாடு என்பது.
இதற்கும் வடக்கே இருந்தவர்கள் தெலுங்கர். அவர்கள் அறிந்த தமிழர்கள் அருவர்கள் அல்லது அரவர்கள்.
ஆகவே தமிழர்களுக்குப் பொதுவாக அந்தப் பெயர் தெலுங்கில் ஏற்பட்டது.
நமக்கும் வடக்கே இருந்ததனால் அவர்கள் வடுகர். அவர்கள் பேசும் மொழியை 'வடுகு' என்று தமிழர்கள் குறிப்பிட்டனர்.
யாழ்ப்பாணியருக்கு நாம் வடக்கே இருப்பதால் நாம் அவர்களுக்கு வடக்கத்தியார்.
தஞ்சாவூர்க்காரர்களுக்கு மதுரை/திருநெல்வேலிக் காரர்கள் தெங்கணத்தார் - தென்கணத்தார்கள் என்றால் தெற்கில் உள்ளவர்கள்.
மதுரைக் காரர்களுக்குத் தெருநெல்வேலிக்காரர்கள் 'தெற்கத்தியான்'கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.