02/12/2017

ஏன் தனி தமிழ்நாடு தேவை? பகுதி 1...


இந்திய துணை கண்டம் அங்கிலேயேன் ஆதிக்கத்தில் இருந்து பிரிந்தது. அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும். என்பதற்காகவே இந்த் பதிவு..

இந்திய துணைகண்டம் அடிமை சிறையிலிருந்து விடுபட்டது 1947ல். அன்று இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் தமிழர்களும் தான் வட இந்தியர்களும் தான். ஆனால் இங்கு நினைவில் கொள்ளப்படுபவர்கள் யார்? யார்?

இந்தியாவின் முதல் சுதந்திர போராக ஜான்சி ராணி கலந்து கொண்ட 1857 வருடம் நடந்த போரே நினைவு கொள்ளப்படுகிறது. இதை சிப்பாய் கலகம் என்று வர்ணித்தார்கள் ஆங்கிலேயேர்கள்.

ஜான்சி ராணியின் குழந்தை இறந்து விட்டது, இவர் மற்றொரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தார். அன்று தத்து எடுப்பது என்பது இந்திய துணைகண்டத்தில் காலகாலமாக இருந்து வந்த நடைமுறை ஆனால் ஆங்கிலேயனிடம் அப்படி ஒரு நடைமுறை இருந்ததா இல்லை வேண்டும் என்றே வாரிசு இல்லாத அரசு என்று அறிவித்து ஜான்சியில் ஆங்கிலேயேன் உரிமை கொண்டாடினானா என்பது தேவை இல்லை. அதுவரை ஆங்கிலேயேனுக்கு கப்பம் கட்டிதான் வந்தது ஜான்சி அரசு.

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் தனது சொத்தை காப்பாற்ற வாள் ஏந்தினார். சொத்தை காப்பாற்ற களம் கண்டவர் முதல் சுத்ந்திர போராட்ட வீராங்கனை. சொத்தை காப்பாற்ற இன்று இந்தியா என்று என்ன என்பதை பற்றி சுத்தமாக ஒன்று தெரியாதவர் எல்லாம் கட்சி தலைவியாக இருந்து கைப்பொம்மையை வைத்து ஆட்சி செய்யும் போது இதெல்லாம் சகஜமப்பா.. என்று தான் சொல்லுவீர்கள்.

ஆனால் இன்று இந்த லக்ஷ்மி பாய் குமரியில் இருந்து காஷ்மீரம் வரை அனைவரும் பாடத்தில் படித்து வருகிறோம். இதுவே உண்மையான ஒன்றாக நிலைநாட்டப் பட்டுவிட்டது.

ஆங்கிலேயேனை எதிர்த்து பிரஞ்சு படை உதவியுடன் போராடினார் மைசூர் புலி திப்பு சுல்தான். இவரின் ஆதரவைப் பெற்று தென்கோடியில் இராமநாத புரத்தில் பிறந்த வீரமங்கை வேலுநாச்சியார், சொத்தை காப்பாற்றவா களம் கண்டார். இவரின் கணவன் ஆங்கிலேயேனை எதிர்த்தார் கப்பம் கட்ட மறுத்தார், நாங்கள் அடிமை இல்லை என்பதை கூறி ஆங்கிலேயேனிடம் சண்டையிட்டார். போரில் இவர் கணவன் இறந்தவுடன். தனது ஒரே மகளை விட்டுவிட்டு வாள் ஏந்தி போராடினார் தன் கணவன் இடத்தில் இருந்து. இவர் போராடியது தனது சிவகங்கை சீமையை காப்பற்றதான் ஆனால் ஆங்கிலேயேன் வாரிசு இல்லாத சொத்து என்று அபகரிக்க நினைத்த பொழுது இல்லை.

நாங்கள் உங்களுக்கு அடிமை இல்லை என்று ஆங்கிலேயேனுக்கு உணர்த்த. இவர் இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் முதல் வீராங்கனையா ஜான்சி ராணியா. வேலு நாச்சியார் போராடியது 1780 ம் வருடம் அதாவது 77 வருடங்களுக்கு முன்.

ஜான்சி சொத்துகாக போராடினால் அது சுதந்திர போர், ஆங்கிலேயேனுக்கு அடி பணிய மாட்டேன் என்று போராடியவருக்கு ஒன்றும் இல்லை. ஒரு வீராங்கனை. ஒருவர் பெயர் இந்தியா முழுமைக்கும் தெரியும். மற்றவர் பெயர் சொந்த இனத்துக்கே தெரியாது..

இப்படி சுதந்திரத்திற்காக தமிழகத்தில் இருந்து போராடிய என்னற்ற வீரர் வீராங்கனைகளின் பெயரை மறைத்து. ஏன் நமது பக்கத்து மாநிலம் சென்று கேட்டு் பாருங்கள் வீரபாண்டிய கட்டபொம்மனை தெரியுமா என்று. உதட்டை பிதுக்குவார்கள்.

சேர்ந்தே போராடினோம் சேர்ந்தே சுதந்திரம் பெற்றோம். ஆனால் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று கேட்டால் திலகரும், காந்தியும், நேருவும் என்று சொல்லுகிறார்கள் இங்கு செக்கிழுத்தவன் மாடாகி போனான் வருபவனுக்கெல்லாம் தலையாட்டும் பொம்மையாய்.

தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.