ஓகி புயலால் மிகக்கடுமையான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1200க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்றும் பலர் இறந்தும் போயிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு ஆசாதரண சூழலில் இவர்களுக்கு பக்கபலமாக இருந்திருக்க வேண்டிய மத்திய, மாநில் அரசுகள் மீனவர்களின் மீது பாராமுகமாகவே இருந்து வருகிறது.
புயல் வருவதைத் தான் முன்கூட்டியே அறிவிக்காமல் இருந்தீர்கள். குறைந்தபட்டம் புயலுக்கு பின்னாவது கடலில் தத்தளித்து மற்றும் வெவ்வேறு மாநிலங்களில் தஞ்சமடைந்திருக்கும் மீனவர்களையாவது மீட்டு கொடுங்களென்று மீனவர்கள் கோரிக்கை வந்தால் அதையும் செய்யாமல் கள்ள மவுனம் காக்கிறது மத்திய மற்றும் மாநில அரசுகள்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனோ கொஞ்சமும் மனிதத்தன்மையற்று மீனவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுவிட்டாகளென்று ஒரு பச்சை பொய்யை ஊடகங்களுக்கு சொல்லி விட்டு செல்கிறார்.
மாநில அமைச்சர் ஜெயக்குமாரோ மீனவ பகுதிக்கே வர மறுக்கிறார்.
இப்படியான கூத்துகளுக்கு நடுவே சத்தமேயில்லாமல் அரசு ஒரு தூரோகத்தை செய்திருக்கிறது.
அது என்னவென்றால்...
காணாமல் போன மீனவர்களை காக்க போகிறோமென்று 7மீனவர்களை அழைத்துக் கொண்டு கடலுக்கு போன கப்பல்படை கப்பல். மீனவர்களோடு கொஞ்சம் தூரம்மட்டும் போய்விட்டு இதற்கு மேல் செல்ல எங்களுக்கு அரசு அனுமதிக்கவில்லை எனவே போக முடியாதென்று சொல்லி திரும்பியிருக்கிறது.
இதனை எதிர்த்து கேள்வி கேட்ட மீனவர்களை வெளியில் விட்டால் இவர்கள் இதை ஊடகங்களுக்கு சொல்லி விடுவார்களென்று அவர்களை துறைமுகத்தில் ஓர் அறையில் அடைத்து வைத்திருக்கிறது கப்பல் படை.
அரசின் இந்த துரோகத்தை சகித்து கொண்டிருக்க முடியாத மீனவர்கள் ஒன்றாக கூடி தங்கள் உறவுகளை மீட்க போராட்டமே ஒரே வழியென்று திர்மானித்து ஒரு பக்கம் போராட்டமும் இன்னொரு பக்கம் அரசினை இனியும் நம்பிக் கொண்டிருக்க முடியாதென்று தங்கள் உறவுகளை நாமே சேர்ந்து மீட்போமென்று 5படகுகளுடன் மீனவர்களே ஆழ்கடலுக்கு சென்றிருக்கிறார்கள்.
இதில் வருத்தமடைய வேண்டிய செய்தி என்னவென்றால் கடலுக்குள் போயிருக்கிற 5படகுகளும் ஏற்கனவே புயலில் பாதிக்கப்பட்டு கரை திரும்பியிருக்கிற படகுகளே.
அதே படகை எடுத்துக் கொண்டு தங்கள் உறவுகளை மீட்க மீனவர்கள் மீண்டும் ஆழ்கடலுக்கு சென்றிருக்கிறார்கள்.
இவர்கள் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கும் இந்த அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
பேரிடர் வருவதையும் அறிவிக்க மாட்டோம், பேரிடரால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை காக்கவும் வரமாட்டோம். மக்களே தங்களை தாங்களே காத்துக் கொள்ள வேண்டுமென்றால் எதற்காக இங்கு ஓர் அரசு இருக்க வேண்டும் என்ற கேள்வியை நாம் பொதுத்தளத்திலே முன்வைக்க வேண்டிய நேரமிது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.