25/01/2018

பஸ்கட்டண உயர்வு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து 3 வது நாளாக போராட்டம்...

     
பஸ்கட்டண உயர்வை கண்டித்து 3 வது நாளாக தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருவள்ளூர், நாமக்கல், தஞ்சை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.

தஞ்சை கரந்தை உமாமகேஸ்வரனார் கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.

போக்குவரத்து கட்டண உயர்வை கண்டித்து நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் அரசுப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூர் அருகே எசனையில் பொதுமக்கள், மாணவர்கள் சாலை மறியல்  போராட்டம் நடத்தினர்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூர் அருகே குரும்பலூர் பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் இன்றும் நாளையும் வகுப்புகள் ரத்து செய்யப்படுகிறது என  கல்லூரி முதல்வர் மனோகரன் தகவல் தெரிவித்து உள்ளார்.

பழனி: அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 500 பேர் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரிக்கு இன்று, நாளை விடுமுறை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.