இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 23,000 ஹெக்டேர் பரப்பு கொண்ட, சிங்கம்பட்டி ஜமீன் காட்டை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிப்பதற்கு தமிழக வனத்துறை முயற்சித்தது.
ஆனால், அந்த முயற்சிக்கு 40 ஆண்டாகத் தடையாக இருந்தது ‘மாஞ்சோலை எஸ்டேட் டீ’ நிறுவனம். தற்போது அந்த நிறுவனத்தைச் சட்ட ரீதியாக வென்றிருக்கிறது வனத்துறை.
சிங்கம்பட்டி காட்டில் சுமார் 8,400 ஏக்கர் நிலத்தை 1929ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (BBTC) நிறுவனத்திற்கு 99 வருடக் குத்தகைக்கு விட்டார் அப்போதைய சிங்கம்பட்டி ராஜா. எதற்காக அப்படி குத்தகைக்கு விட்டார் என்பது ஒரு சோகக்கதை. 1918ம் ஆண்டு அன்றைய சிங்கம்பட்டி ஜமீன் (இன்றைய ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் தந்தை), சென்னையில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு கொலை வழக்கில் சிக்கினார்.
வழக்கிற்கு அதிகச் செலவானதால், அதைச் சமாளிப்பதற்காக சொத்து, பத்துக்களை விற்க ஆரம்பித்தது ஜமீன் குடும்பம். அதன் ஒரு பகுதியாக 23,000 ஹெக்டேர் பரப்பு கொண்ட ஜமீன் காட்டில், 8,400 ஏக்கர் காட்டு நிலத்தை 99 வருடக் குத்தகைக்கு விட்டார் ஜமீன்.
நிலத்தை குத்தகைக்கு எடுத்த அந்நிறுவனம் காட்டை அழித்து, தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியது.
தற்போது இந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ள தமிழக வனத்துறை, இந்த நிலத்தை எல்லாம் மீட்க அரசாணையும் (12.1.2018) பிறப்பித்துள்ளது.
இதற்காக உழைத்த ஓய்வுபெற்ற வன அதிகாரிகள் தொடங்கி, தற்போதைய அதிகாரிகள் வரையில் அனைத்து வனத்துறையினருக்கும் பாராட்டு குவிகின்றன...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.