ஐநா அமைப்பு புலம்பெயர் மக்கள் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. ஒவ்வொரு நாடுகளிலும் அந்த நாட்டை சேராத மக்கள் எவ்வளவு பேர் வசிக்கிறார்கள் என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. உலகிலேயே இந்தியர்கள்தான் வெளிநாட்டிற்கு அதிகம் புலம்பெயர்ந்து இருப்பதாக ஐநா அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி 1.5 கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள் வளைகுடா நாடுகளிலும் மற்ற பிற வெளிநாடுகளிலும் வசிப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வெளிநாடு செல்லும் இந்தியர்கள் அதிகமாக சவுதி, குவைத், துபாய், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளையும், அமெரிக்காவையும், ஆசியாவிலேயே இருக்கும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளையும் அதிகம் விரும்புவதாக இதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மொத்தம் 6 சதவிகிதம் 2015ன் படி உலகம் முழுக்க 243 மில்லியன் மக்கள் வெளிநாட்டில் வசிப்பதாக கணக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதில் மொத்தம் 6 சதவிகித மக்கள் இந்தியர்கள். 2010ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2015ல் வெளிநாட்டிற்கு குடியேறியவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. இதன்படி வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் 30 பேரில் ஒருவர் அந்த நாட்டை சேராதவர்.
உலகத்தில் இருக்கும் புலம்பெயர் மக்களில் 50 சதவிகிதம் மக்கள் ஆசியாவை சேர்ந்தவர்கள்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் மெக்சிகோ இருக்கிறது.
அதற்கு அடுத்தபடியாக ரஷ்யா, சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் இருக்கின்றது. இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு சென்றவர்கள் சதவிகிதம் 2010ல் 3.2 சதவிகிதமாக இருந்தது. 2015ல் அதேபோல் 3.3 சதவிகிதமாக மாறாமல் இருக்கிறது.
புலம்பெயர் மக்களில் 72 சதவிகிதம் பேர் 25ல் இருந்து 60 வயதிற்குள் உள்ளவர்கள் ஆவர். இதில் பெரும்பாலான மக்கள் வேலை தேடியே வெளிநாடு செல்கின்றனர். இதில் 40 சதவிகிதம் மக்கள் அந்த நாட்டில் குடியுரிமை பெற்று இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. மிக முக்கியமாக சிலர் சுற்றுலா சென்று அப்படியே வெளிநாட்டில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா மக்களின் முதன்மை விருப்பம் இவர்களின் முதன்மையான தேர்வு அமெரிக்காவாக இருக்கிறது. 1970ல் இருந்து மக்கள் அதிகமாக அமெரிக்கா செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 46.6 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்து உள்ளனர். இதில் 2 மில்லியன் மக்கள் இந்தியர்கள். இது ஐநா 9 வது முறையாக புலம்பெயர் மக்களை குறித்து வெளியிட்டு இருக்கும் அறிக்கை ஆகும். சென்ற வருடமும் இந்த பட்டியலில் இந்தியாவே முதல் இடத்தில் இருந்தது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.