உலகின் எந்த அணு உலையிலும் எரிபொருளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை என்பதை மத்திய அரசு ஒப்புக் கொள்கிறது. எரிபொருளை மறுசுழற்சி செய்தபின் அங்கு கழிவுகள் என்னவாகும் என்பதை அணுசக்தித் துறை தெளிவுபடுத்தவில்லை.
கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இடத்தை ஆணையம் இதுவரை தேர்வு செய்யவில்லை. அந்த இடத்தைக் கட்டி முடிக்க எத்தனை வருடங்கள் ஆகும்? அங்கு எவ்வாறு அணுக்கழிவுகள் தேக்கி வைக்கப்படும்? அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு என்ன? அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு என்னென்ன பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும்? போன்ற திட்டங்கள் அணுசக்தித் துறையிடம் இல்லை.
கடல் வளம் பாதிக்கப்படும்...
கூடங்குளத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஆறு உலைகள் செயல்படத் தொடங்கியதும் அதில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளைக் குளிரவைக்க கடல் நீர் பயன்படுத்தப்படும். பின்னர் நாள் ஒன்றுக்கு சுமார் 4200 கோடி லிட்டர் சுடு நீர் கடலில் கொட்டப்படும்.
கடல் நீர் ஏற்கெனவே 29 டிகிரி வெப்பநிலையில் இருக்கும்போது அணு உலையில் பயன்படுத்தப்பட்ட 7 டிகிரி வெப்பம் கொண்ட நீரைக் கொட்டுவதால் கடல் நீரின் வெப்பநிலை 36 டிகிரியாக அதிகரிக்கும். இதனால் கடல் வளம் பாதிக்கப்படும்.
கூடங்குளம் அணுஉலைகள் 3, 4, 5 மற்றும் 6 வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி ஆணைகள், கூடங்குளம் அணு உலைகள் 1 மற்றும் 2க்கும் பொருந்தும் என்று கூறி யுள்ளது உச்ச நீதிமன்றம். இந்தச் சுற்றுச்சூழல் அனுமதி பலவித கட்டளைக்கு உட்பட்டதாகும். இவை அனைத்தும் கூடங்குளம் அணுஉலை செயல்படுவதற்கு முன்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உச்ச நீதிமன்றம் மே 2013இல் கூறிய உத்தரவாகும்.
மேற்கூறிய சுற்றுச்சூழல் அனுமதியில் கூறப்பட்டுள்ள கட்டளைகள் பல இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளன. இவற்றில் முக்கியமான கட்டளை அணு உலையிலிருந்து வெளியேறும் அணுக்கழிவுநீர் கடலில் கலக்கும் இடத்தைக் கண்காணிக்க தனி ஆய்வு மையம் அமைக்கப்பட வேண்டும் என்பது. கழிவு நீர் நேரிடை யாகக் கடலில் கலக்கப்படாமல் தனிக் குழாய் மூலம் கடல் மையப்பகுதில் செலுத்தப்பட வேண்டும் என்பது மற்றொரு கட்டளை. இந்தக் கட்டளைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இவை அனைத்தும் அணுஉலை செயல்படுவதற்கு முன்பாக அமல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அதே போல மத்திய வனஉயிரினப் பாதுக்காப்பு ஆணையத் திடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பதும் மற்றொரு கட்டளையாகும். கடல்சார் உயிரினப் பாதுகாப்புக்கும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இந்த அனுமதி மிகவும் அவசியமானது. இதுவும் இன்று வரை பெறப்படவில்லை.
கடலும் நஞ்சுண்டால்.. என்ன செய்வோம் நாம்...
இத சொன்னா நாம anti Indian...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.