21/02/2018

தமிழகத்தில் மீண்டும் ஒரு வாச்சாத்தி சம்பவமா ? பரபரப்பின் உச்சத்தில் கொடைக்கானல்… அத்துமீறிய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத வனத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வலுக்கும் கண்டனம்…


ஆங்கிலேயர் பிடியில் இருந்து இந்தியா விடுதலை பெற்றாலும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து கொடைக்கானல் விடைபெற வில்லை என்பதே நிதர்சனமான உண்மை… மெல்ல மெல்ல கோடை வாசிகளின் பிடி வனத்துறையினரின் கடிவாளத்தில் சிக்க ஆரம்பமாகியுள்ளது…

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவையே உலுக்கிய வாச்சாத்தி கிராம சம்பவம் இன்னும் மலை வாசுத்து தலங்களில் உள்ளவர்களின் மறையாத வடுவாக உள்ளது…

கடந்த 1992 ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் சந்தன் மரங்களை தேடி கிராமத்திற்க்குள் சென்று அங்கு வாழ்ந்தவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியும்… பெண்களை கற்பழித்த சம்பவம் வனத்துறை அதிகாரிகள் மீது மிக பெரிய அதிர்ப்தியை ஏற்ப்படுத்தியது…

அவ்வப்போது வனத்துறை சார்ந்த பிரச்சனை வந்து செல்வது வழக்கமாக மாறியது இதற்க்கு கொடைக்கானலும் விதி விலக்கல்ல கொடைக்கானலில் உள்ள பல சுற்றுலா தலங்கள் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது வனத்துறையினர் சார்ந்த பிரச்சனைகளும் காணல் நீராக மாறி மறந்து விடும்…

ஆனால் கடந்த 12 ஆம் தேதி நடந்த சம்பவம் மிக பெரிய பரபரப்பை ஏற்ப்படித்தியுள்ளது…

கொடைக்கானலில் இருந்து மன்னவனூருக்கு கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் இருந்து ஊழியர்கள் 5 பெண்கள் உட்பட 20 பேர் சுற்றுலா சென்றுள்ளனர்…

சுற்றுலா சென்றவர்கள் அங்குள்ள புல்வெளிகளில் கூட்டாம அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு ஆடல் பாடலுடன் உற்சாகமாக இருந்துள்ளனர்…

சுற்றுலா முடியும் தருவாயில் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது…

லஞ்சம் தர மறுத்த போது வனத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் கைகலப்பு ஏற்ப்படுகிறது..

இறுதியில் வனத்துறை அதிகாரிகள் சுற்றுலா சென்றவர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்க்கு வைக்க வனத்துறை தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளது…

அபராதம் விதிக்கதான் அழைத்து செல்கின்றனர் என நினைத்து தனியார் ஊழியர்களும் செல்ல வனத்துரையினர் பெண்களை மட்டும் ஊருக்கு திருப்பி அனுப்பி விட்டு மீதமுள்ள ஆண்கள் அபராத தொகையை செலுத்திய பிறகு வருவார்கள் என கூறுகின்றனர்…

இரவு பொழுதில் 11 ஆண்களை தங்கள் விடுதியில் வைத்து பூட்டி தங்கள் கொடுர தாக்குதலை அரங்கேற்றினர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்…

இரவு முழுவதும் மூங்கில் குச்சிகளாலும், தண்ணீரில் நனைத்து தங்கள் ஷூ கால்களால் முட்டியில் ஏறி நின்று 11 பேரை 30 க்கும் மேற்ப்பட்டோர் சேர்ந்து கொடுர தாக்குதலை நடத்தினர்…

விடிந்ததும் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி வாகனத்தில் ஏற்றி மனித நடமாட்டம் எப்போதாவது தென்படும் பேரிஜம் ஏரியில் உள்ள விடுதிக்கு அழைத்து சென்று 13 ஆம் தேதி முழுவதும் தங்களை ஆசை தீர கடுமையாக தாக்கிவிட்டு 14 ஆம் தேதி விடியற் பொழுதில் அவர்கள் உறவினர்களிடம் தகவலை கூறி 75000 ஆயிரம் அபராதம் செலுத்த கூறி செலுத்திய பிறகு அவர்களை விடுவித்தனர்….

பலத்த காயங்களுடன் 14 ஆம் தேதி தனியார் விடுத்திக்கு சென்ற அவர்கள் விடிந்தவுடன் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்…

அதில் படுகாயமடைந்து கை மற்றும் கால் முறிவு ஏற்ப்பட்டு 3 பேர் தேனீ அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பட்டனர்...

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு பல அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் ஆதரவு அளித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் வனத்துறை பிரச்சனை விஸ்வருபம் எடுத்து வருகிறது…

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் மற்றும் குற்றச்சாட்டுகள் உண்மையாகும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என இழுத்து கொண்டிருக்கிறது  வனத்துறை…

தாமதமாகும் நீதி மறுப்படும் நீதியாகவே கருதப்படும் என அனைவரும் கருதிகின்றனர்….

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.