31/03/2018

காவேரி எப்படி தமிழர்களின் வணிக வரலாற்றுக்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது என்று தெரியுமா ?


கிபி முதலாம் நூற்றாண்டு முதல் 1500 ஆம் நூற்றாண்டு வரை உலக வணிக வல்லாதிக்கமாக இருந்தவர்கள் யார் தெரியுமா ? 

இவையனைத்திற்கும் விடைகள் கிடைக்க வேண்டுமா ?

அவினாசியில் 2.4.2018. திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டம்...


அவினாசியில் 2.4.2018. திங்கள்கிழமை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் நமது பகுதியில் உள்ள அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை  வெளிப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டு கொகொள்கிறோம்...

நமது உரிமையை மீட்க அவநாசியில் ஒன்றுகூடி வென்றிடுவோம்.

வாரீர்.. வாரீர்.. இவன் பொது மக்கள் நலன் கருதி சமூக உணர்வோடு வெளியிடுவோர் சிவக்குமார் சமூக ஆர்வலர்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய இளைஞர்கள் அனைவரையும், கைது செய்யும் அடக்கு முறைகளை செய்து வருகிறது மக்கள் விரோதத்துறை எனும் காவல்துறை...


மெரினாவில் போராட்டத்தை துவக்கிய இளைஞர்கள் , மெரினாவில் பரபரப்பு...


10 பேரில் துவங்கிய கூட்டம் நூற்றுகணக்காக அதிகரிப்பு...

ஸ்டெரேலைட் ஆலையை ஏன் தமிழகத்தில் அமைத்தது இந்தியா..?


மீண்டும் ஒரு புரட்சி விவசாயிக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கபடாததைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம்...


முடிந்தளவு சென்னையில் உள்ள நண்பர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்....

வைகோ நாயுடுவின் திருட்டு அரசியல் ஆரம்பம்...


திருட்டு திராவிடம்.. திமுக - அதிமுக வின் ஏமாற்று வேலைகள்...


ஐம்பது வருடங்களாக மாறி மாறி ஆட்சியில் இருந்தது இரண்டு கழகங்கள் மட்டுமே.

அப்படி இருக்க தமிழகத்தின் எந்தபிரச்சனையானாலும் அவர்கள்தான் பொறுப்பே தவிர மூன்றாம் நபர் யாருமே இல்லை.

இது இந்த முட்டாள் தமிழனுக்கு உறைப்பதில்லை...

கட்சத்தீவிலிருந்து காவேரி வரைக்கும் கை எழுத்துபோட்டது இந்த இரண்டுபேர்.

தன்னைதான் ஏமாற்றி பிழைக்கிறான் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் ஏமாற்றியவனையே ஆட்சியில் உக்காரவைக்கும் முட்டாள் தான் இந்த தமிழ்மக்கள்...

சீனா வால் பூமிக்கு ஆபத்து...


மக்களுக்கு குடிக்க தண்ணி இல்லாத போது எதுக்கு எனக்கு எம்பி பதவி , யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சரி நான் ராஜினாமா செய்யப் போகின்றேன் - அதிமுக எம்பி முத்துக்கருப்பன் அதிடிர அறிவிப்பு...


மக்களுக்கு ஒன்றை செய்ய முடியாவிட்டால் எதற்கு அம்மா கொடுத்த பதவி நமக்கு ? - மற்றவர்களை நோக்கி சரமாரி கேள்வி...

2 3 நாளில் பாராளுமன்றம் கூடும் அப்போது துணை ஜனாபதி வெங்கைய்யா நாயிடுவிடம் நான் எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து விடுவேன் - எம்பி முத்துக்கருப்பன்...

அமானுஷ்யம் - ஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்...


அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி.. இப்ப நான் எங்கிருக்கேன்பா? என்று பேச ஆரம்பித்து வாக்கிங் கிளம்பி
விடும்.

அதன் பிறகு மீண்டும் 60 வயசுக்கு ஆயுட்காலம் இது புதிய ஹாலிவுட் படக்கதை அல்ல..

உலகம் முழுக்க சோடாப்புட்டி கண்ணாடியை மாட்டிக் கொண்டு 100க்கணக்கான விஞ்ஞானிகள் இரவு, பகலாக பிணங்களுடன் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிற சர்வமகா நிஜம்.

மனித உடலில் எது ஊன மடைந்தாலும் செயற்கை கருவி, பைபாஸ் சர்ஜரி வரை சரி செய்து விட முடிகிறது.

விலங்குகளின் குளோனிங், டெஸ்ட் டியூப் பேபி என பிறப்பின் ரகசியத்தைக் கூட நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள்.

ஆனால், ஆதாம்-ஏவாள் காலம் முதல், உயிர் பிரிவதை மட்டும் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஒரு வேளை, அப்படி கண்டு பிடித்து விட்டால்… வெரி சிம்பிள் இப்பத்தான் உங்களை நினைச்சேன். ஆயுசு ஆயிரம் சார் என்று சொல்ல வேண்டியதிருக்கும்
உலக விஞ்ஞானிகள் நடத்தி வரும் பகீர் ஆராய்ச்சி களை ஹார்ட் அட்டாக் வராத வகையில் சர்வ ஜாக்கிரதையாக மேலும் படிக்க ஆரம்பியுங்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிலிக்கர் என்பவரது புகைப் படங்கள் தாம் உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகளை மரணத்தை வெல்ல முடியும் என்று உஷார் படுத்தியது.

ஏராளமான விலங்குகளின் ஆவி பிரிவதை கடைசி நொடிகளில் கிளிக் செய்து வைத்திருக்கிறார் பிலிக்கர்.

இவரது கூட்டாளியான விஞ்ஞானி பி.டபுள் போத்தா.. கண்ணுக்குத் தெரியும் இந்த ஆவியை ஒரு டெஸ்ட் டியூப்பில் பிடித்து விட்டால் போதும். அக்குவேறு, ஆணி வேறாக ஆராய்ச்சி செய்து மரண ரகசியத்தை கண்டு பிடித்து விடுவோம் என்கிறார்.

வாஷிங்டன், கோமாவில் உள்ள ஐ.ஏ.என்.டி.எஸ் எனப்படும் இன்டர்நேஷனல் அசோசியேகன் பார் நியர் டெத் ஸ்டடீஸ் என்ற அமைப்பு மரணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது.

டாக்டர் ஜெப் தலைமையில் பலர் இதன் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு வேலைப யாராவது சாகப் போவதாக கேள்விப்பட்டால் அவருடன் கடைசி வரை இருந்து, கண்காணித்து, ஆராய்ச்சி செய்வது தான்.

வயிற்றுவலி முதல் ஹார்ட் அட்டாக் வரை மருந்து கண்டுபிடித்த நாம் மூளைச்சாவுக்கும் மருந்து கண்டு பிடிப்பது அவசியம் என்கிறார்கள் இவர்கள்.

சாவு என்பது ஒருசாதாரண நிகழ்வு. தேவையில்லாமல் இதன் மீது நமக்கு பீதி ஏற்பட்டு விட்டது மரணத்திற்கு முன்னதாக முதுமைக்கு மருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து.

இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் மிக்கேல் சபோம் நான் மரணத்துக்கு மருந்து கண்டு புடிச்சுட்டேன் என்று கத்துகிறார்..

ஒருவரது மரணம் எப்போது தள்ளிப் போனதோ, அப்போதே மரணத்தை வென்று விட்டதாகத்தான் அர்த்தம். வேண்டுமானால் இது தொடக்கமாக இருக்கலாம் என்கிற அவர் பாம் ரெனால்ட்ஸ் என்கிற சாகக் கிடக்கிற பெண்மணிக்கு உயிர் பாலித்தவர்.

இருதயமும், மூளையும் முற்றிலும் செயலிழந்து பெரிய, பெரிய டாக்டர்களால் கைவிடப்பட்டு, உடல் டெம்பரேச்சர் 60 டிகிரிக்கும் குறைவான பாம் ரெனால்ட்சை தனது நவீன அறுவைசிகிச்சை மூலம் உயிர் பிழைக்க வைத்திருக்கிறார் மிக்கேல்.

முழுவதுமாக மரணித்துப் போன எனது மூளையில் முதன் முதலாக ஒரு சின்ன சத்தத்தைக் கேட்டேன். புர்ர்ர்ர்… என்ற அந்த சத்தம் தான் மெல்ல எனக்கு உயிர் கொடுத்தது. சர்வ நிச்சயமாக நான் மரணத்தை உணர்ந்து திரும்பி இருக்கிறேன் என்கிறார் பாம் ரெனால்ட்ஸ்.

இவர்களைப் போலவே கெவின் வில்லியம்ஸ், பெத்தார்ட்ஸ் பெட்டி, ஆன்டர்சன் ஜார்ஜ், சிட்டிசன் ஹெரால்டு, டர்ட் சார்லஸ், என உலகம் முழுவதும் ஏகப்பட்ட விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

உயிர் பிரியும் போது வலிக்குமா என்றால் வலிக்காது என்கிறார்கள் இவர்கள் ஒட்டு மொத்தமாக.

உடல் உபாதைகளால் ஏற்படுவது தான் வலியே தவிர, மரணத்துக்கு வலி கிடையாது என்கிறார்கள்.

செத்துப்போன உடலை ரோபோ போல் நவீன எந்திரங்கள் மூலம் இயங்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் கடந்த 18 ஆண்டுகளாக நூதன தயாரிப்புகள் மூலம் போராடிக் கொண்டிருக்கிறார் டாக்டர் பி.எம்.எச். அத்வதார் என்பவர்.

இதெல்லாம் நடக்கிற விஷயமா டாக்டர் என்றால், எதையும் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னால் நம்புவது கஷ்டம் தான். ரெயில், விமானம், செல்போன்களை எல்லாம் நீங்கள் நம்பவா செய்தீர்கள் என்கிறார்.

இந்த அதிர்ச்சி விஞ்ஞானிகள் உடற்பயிற்சி, உணவு முறை, ஆரோக்ய வாழ்க்கை மூலம் மனித வாழ்வை நீட்டிக்க முடியுமா என்பது பற்றியும் இயற்கை ரீதியிலான ஆராய்ச்சி செய்யவும் தவறவில்லை.

ஒரு சிலரால் மட்டும் எப்படி 110 வயது வரை வாழ முடிகிறது என்கிற கேள்விக் குறிக்கும் இவர்கள் ஒருபுறம் விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கடைசி மூச்சு வரை மருத்துவ கருவிகளை கண்டு பிடித்து விட்ட விஞ்ஞானிகளின் அருமை பற்றி உங்களுக்குத் தெரியவில்லை. நிச்சயம் ஒரு நாள் மரணத்தின் சூட்சுமம் வெளியே தெரிய வரும் என்கிற ரஷ்ய விஞ்ஞானி ஆன்ஸ்டின்பெராக் வெளி உலகுக்கு தெரியாமல் வேறொரு ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.

இறந்து போன பிணங்களுக்கு ஊசி போட்டு, உடலைப் பிரித்து உள்ளுக்குள் மருந்து, மாத்திரைகளை வைத்து தைத்து, நவீன கருவிகள் மூலம் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து, என்றாவது ஒரு நாள் இது எழுந்து நடமாடும் என்கிற ரீதியில் கடந்த 20 ஆண்டுகளாக இருட்டுக் கூடத்திலேயே தனது பகல் வாழ்க்கையையும் கழித்து வருகிறார்.

இவர்கள் சொல்வதைப் போல் ஒரு வேளை உயிர் ரகசியம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டால்… பூமி பிதுங்கி வழியும் ஜனத்தொகை, அத்தனை பேருக்கும் உணவு, இருப்பிடம் குடிதண்ணீர் வசதி என மேலும் எழும் ஆயிரக்கணக்கான பூலோக பிரளயங்களுக்கு மேலும் நாம் விடை தேட வேண்டிய திருக்கும்.

அடேங்கப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே...

விழித்துக்கொள் தமிழா...


அதிமுக துரோகிகளே... இனி வார்டு உறுப்பினர் தேர்தலில் கூட வெல்ல முடியாது... நினைவில் கொள்ளுங்கள்...


ஸ்டெர்லைட் விவகாரம் திசை திருப்ப படுகிறதா? காவேரி விவகாரத்தில் ?


அனைத்து பிரச்சினைகளுக்கும்
ஒரே தீர்வு- நம்பிக்கை இல்லா தீர்மானம் மட்டுமே இதற்கு எல்லாம் ஒரு நல்ல தீர்வு....

நம் தமிழ்நாடு புதையல் பூமி...


மலையாள அதிகார வர்க்கம் ஈழத்துக்கு எதிராக இருப்பது ஏன்?


பொதுவாகவே மலையாள அதிகார வர்க்கம் தமிழர்களை மதிப்பதில்லை. தமிழர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதை அவர்களுக்கு உண்டு.

தமிழர்களை ‘பாண்டி’ என்று இழிசனர்களாக சுட்டும் இடுகுறிப் பெயரால் அழைக்கும் வழக்கம் கேரளாவில் பொதுவாக உள்ளது.

மலையாள மொழி என்பதே தமிழுடன் சமஸ்கிரதம் சேர்ந்து உருவான மொழி. அவர்கள் அதை சமஸ்கிரதத்தோடு தமிழி என்ன ஆதித் தமிழ் மொழி சேர்ந்து உருவானது என்று தான் சொல்வார்கள்.

பண்டைய சேர நாடு தான் இன்றைய கேளரா என்பதைக் கூட சேர நாடு தமிழர்களுடைய நாடு என்று சொல்ல மாட்டார்கள்.

தமிழி என்ற தமிழுக்கு முந்திய மொழி பேசியவர்களின் நாடு என்று தான் சொல்வார்கள்.

இத்தனைக்கும் பாண்டியர்களும் சோழர்களும் மோதிக்கொண்ட அளவுக்கு சேரர்களும் பாண்டியர்களும், சேரர்களும் சோழர்களும் மோதிக் கொண்டது குறைவு.

தமிழர்கள் மலையாளிகளுக்கு போட்டியாக இருந்ததும் கிடையாது.

கேரளாவுக்குத் தேவையான இறைச்சி முதல் கொண்டு மரக்கறி அரசி வரையிலான உணவுப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து தான் செல்கின்றன.

ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கியதில் சிங்கள அதிகார வர்க்கத்தின் பங்கை விட மலையாள அதிகார வர்க்கத்தின் பங்கு மிக முக்கியமானது.

வட இந்திய அதிகார வர்க்கத்துக்கு எப்படி சோழர்களையும் அவர்களது புலிச்சின்னத்தையும் பிடிப்பதில்லையோ அது போல இந்த மலையாள அதிகார வர்க்கத்துக்கு ஈழம் என்ற சொல் எட்டிக்காயை விட கசப்பானதாக இருக்கிறது.

அதற்குக் காரணம் மலையாள அதிகார வர்க்கத்துக்கு ஈழவர்களை பிடிக்காது. அதனால் ஈழத்தையும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதேயாகும்.

ஈழவர்கள் என்பது கேரளாவில் வாழும் ஒரு பிரிவு மக்களாகும். இவர்கள் மொத்த கேரள மக்கள் தொகையில் 23 வீதமாகும்(73 இலட்சம் பேர் ).

ஒரு 60 முதல் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கேளர ஆதிக்க சாதியினரான நம்பூதிரிகள் வீதியில் வரும் போது இவர்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

நாயர்கள் விதியில் வந்தால் இவர்கள் அவர்களுக்கு 15 அடி தள்ளியே ஓரமாக நடந்து செல்ல வேண்டும் என்று பணிக்கப்பட்டிருந்தார்கள்.

ஒரு நம்பூதிரி அல்லது நாயரை ஈழவன் தொட்டுவிட்டால் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்ற அளவு கொடிய ஒடுக்குமுறை இருந்தது.

இந்த ஈழவர்கள் சேரர் பரம்பரையை சேர்ந்த வில்லவர்கள் என்ற இனத்தின் வழித் தோன்றல்கள் என்றும் ஈழத்தை சேர்ந்த ஈழவா அல்லது திய்யா என்ற மன்னர் பரம்பரையை சேர்ந்தவர்களும் அவர்களது குடி மக்களும் என்றும் இவர்களின் பூர்வீகம் பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன.

கேரள அதிகார வர்க்த்தைச் சேர்ந்த நம்பூதிரிகளினதும் நாயர்களினதும் ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையில் இருந்து இந்த ஈழவர் சமூகம் விடுதலை பெறுவதற்கு காரணமாக இருந்தவர் நாராயண குரு.

அவர் அறிவு ஒன்றுதான் மனித குலத்துக்கு உரியது என்றும் அதைக் கொண்டு முன்னேற்றம் காண்பதுதான் வாழ்க்கை என்றும் சொன்னார்.

இந்த அறிவுக்கு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை என்றும் எதையும் நிராகரிக்காமல் அனைத்தையும் நேர்வழியில் பயன்படுத்தி அறிவைக் கொண்டு முன்னேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆலயங்களுக்குள் ஈழவர்கள் செல்லக் கூடாது என்று என்று அதிகார வர்க்கம் சொன்ன போது அவர் ஈழவர்களுக்கான ஆலயங்களை நிறுவினார்.

1888 ம் ஆண்டு திருவனந்தபுரத்துக்கு அருகிலுள்ள அருவிப்புரம் என்ற இடத்தில் அவர் முதலாவது சிவன் கோவிலை நிறுவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து அவர் சிவன், விஷ்ணு, சுப்பிரமணியர் முதலான தெய்வங்களுக்கான கோவில்களை உருவாக்கியதுடன் வள்ளலாரின் வழியில் இறைவன் ஒயிமயமானவன் என்பதை விளக்குவதற்காக விளக்கை கருவறை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்து கோவில்களை அமைத்தார்.

பின்பு சத்யம்-தர்மம்-தயவு எனும் சொற்களை கருவறை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்தும் கோவில்களை அமைத்தார்.

அதன் பின்னர் மனிதனது மனச்சாட்சி தான் மிகப்பெரிய தெய்வும் என்பதை வலியுறுத்தும் வகையில் களவங்கோடு எனும் பகுதியில் நிலைக் கண்ணாடியை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்து புதிய கோவில் ஒன்றை அமைத்தார்.

அத்துடன் இந்தக் கோவில்களை ஒட்டி பாடசாலைகளும் களரி முதலான பாரம்பரிய விளையாட்டுகளை பழகும் இடங்களையும் அவர் அமைத்தார்.

ஈழவர்களால் மரபுரீதியாக செய்யப்பட்டு வந்த ஆயுர் வேத மருத்துவத்தை வளப்படுத்துவதற்காக ஆயுர் வேத மருத்துவமனைகளையும் அதை முறையாகக் கற்பதற்கான கல்விக் கூடங்களையும் அவர் அமைத்தார்.

இந்த நடவடிக்கைகள் காலாகாலமாக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த ஈழவர் சமூகத்தை அந்த ஒடுக்கு முறையில் இருந்து விடுவித்தது.

அந்த சமூகத்தை கல்வி அறிவும் முற்போக்கு சிந்தனையுமுள்ள ஒரு சமூகமாக மாற்றியது.

நாராயண குரு ஈழவர் சமூகத்தில் இந்த மாபெரும் பாச்சலை உருவாக்க உந்து சக்தியாக இருந்தவர் ஒரு தமிழர்.

திருவனந்தபுரத்தில் அப்போதைய பிரித்தானிய அரசாங்கப் பணியாளராகப் பணிபுரிந்த தைக்காடு அய்யா என்ற தமிழரே அவராகும்.

சிலம்பு, யோகக் கலைகள் போன்றவைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும் திகழ்ந்த அவரிடம் நாராயண குரு தியானம், யோகா போன்ற கலைகளுடன் தமிழில் ஆழமான அறிவையும் பெற்றார்.

திருமூலரின் திருமந்திரம் திருக்குறள் போன்ற தமிழ் நூல்களையும் கற்று அறிந்தார்.

தைக்காடு அய்யாவை தான் சந்தித்ததும் திருமூலரின் திருமந்திரமும் தான் தனது வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியதாக நாராயண குரு கூறியிருக்கிறார்.

இது காலாகாலமாக கேரளத்தில் வானளாவிய அதிகாரங்களை கொண்டிருந்த நம்பூதிரிகள் மற்றும் நாயர்களை உள்ளடக்கிய மலையாள அதிகார வர்க்கத்துக்கு கோபத்தை எற்படுத்தியதுடன் தமிழர்கள் மீதான வன்மத்தை வளர்க்கவும் காரணமாக அமைந்தது.

1980 களின் ஆரம்பத்தில் நான் கேரள இடதுசாரி தோழர்களோடு அரிவிப்புரம், நெய்யாற்றின் கரை, கொட்டாரக்கரை, காயங்குளம், கோட்டயம் சங்கணாஞ்சேரி முதலான முன்னாள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளிலுள்ள ஈழவர் கிராமங்களில் களப்பணியாற்ற சென்ற போது எனக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.

இந்த கிராமங்களின் அமைப்பு முறை குறிப்பாக ஒழுங்கைகள் வேலிகள் குடிசைகள் மற்றும் கல் வீடுகளின் அமைப்பு முறை தோட்டம் கிணற்றடி அமைப்பு முறை மா பலா தென்னை கமுகு முதலான மரங்கள் வளர்ப்பு கோவில்கள் அவற்றின் பூசை முறை என்பன அச்சொட்டாக எமது தென்மாரட்சி பகுதி(மீசாலை எழுதுமட்டுவாள் பளை பகுதி) கிராமங்களைப் போலவே இருந்தன.

உணவு முறையும் கூட புட்டு அப்பம் கழி சொதி குளம்பு என்பன கூட எமது உணவு முறையைப்போலவே இருந்தது. தோங்காய் பாலை பிரதானமாக பயன்படுத்தி குழம்பு சொதி வைப்பது மாங்காய் போட்டு தீயல் வைப்பது இவையெல்லாம் அச்சொட்டாக எங்கள் சமையல் முறையைப் போலவே இருந்தது. (தமிழகத்தில் இந்த சமையல்முறை கிடையாது). பேச்சு வழக்கிலே கூட மோனே! மோளே! வெய்யலத்தை போகாதை! மழையத்தை போகாதை! பறையாம இரு!!எவட போற! உறைப்பு கூட! இப்ப பல சொற்கள் நாங்கள் யாழ்ப்பாணத்தில் பேசுகின்ற சொற்களை அதே உச்சரிப்புடன் இந்த ஈழவ மக்கள் பேசுவதை கேட்கக் கூடியதாக இருந்தது.

எமது வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள நாகர்கோவில் குடத்தனை மாமுனை குடாரப்பு முதலான ஊர்களில் ‘பார் அவரை’ என்பதை ‘பேப்பார்’ என்றுற சொல்வார்கள்.இதை நான் யாழ்ப்பாணத்தில் வேறெந்த பகுதியிலும் கேட்டதில்லை.

ஆனால் தமிழக கேரள எல்லையிலுள்ள களியக்காவளை பகுதியில் இதைக் கேட்டபோது எனக்கு அளவுகடந்த ஆச்சரியமாக இருந்தது.

அதைப் போலவே பண்பாட்டு அடிப்படையிலும் அவர்கள் எம்மைப் போல தாய் வழி சமூகக் கூறுகளை முதன்மையாக கொண்டவர்களாக இருந்தார்கள்.

தாய் வழி சொந்தங்களுக்கு முன்னுரிமை. பெண் திருமணமாகி கணவனோடு தாய் வீட்டில் இருப்பது (தமிழகத்தில் இது வீட்டோடு மாப்பிளை என்று இழிவாகக் கருதப்படுகிறது).

தொழில் ரீதியாக தென்னந்தோட்டங்களில் அலவாங்கில் தேற்காயை குத்தி உரிப்பது தென்னோலை ஊற வைத்து கிடுகு பின்னவது. பாய் பெட்டி மூடல்கள் இழைப்பது எல்லாமே எங்கள் ஊரைப் போன்றது தான்.

இந்த ஒற்றுமைகள் நாயர்கள் நம்பூதிரிகள் வாழும் கிராமங்களில் கிடையாது என்பது தான் இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.

ஆனால் இதேவேளை மலபார் என்று சொல்லுகின்ற வட கோரளத்திலுள்ள ஈழவர் கிராமங்கள் மாத்தறை தங்காலை கதிர்காமம் முதலான பகுதிகளிலுள்ள சிங்களக் கிராமங்களை போல இருந்தன. அந்தப் பகுதிப் பெண்கள் சிங்கள கிராமியப் பெண்களைப் போலவே உடையணிந்தார்கள்.

தென்னம் பொச்சை நிர்நிலைகளில் ஊறவைப்பது. பின்னர் அதிலிருந்து தும்பு எடுப்பது. அதன் பின் கயிறு திரிப்பது என்று இந்தத் தொழில் சிங்களக் கிராமங்களில் நடைபெற்ற அதே பாணியிலேயே நடைபெற்றது.

இது இந்த மக்களின் வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தை எனக்கு எற்படுத்தியது.

எனது இந்த முயற்சிக்கு உதவுவதற்கு கேரளாவின் புரட்சிகர பொதுவுடமை இயக்கத்தை சோந்த 4 தோழர்கள் முன்வந்தனர்.

அதில் முக்கியமானவர் அப்போது திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் கல்வி கற்று வந்த தோழர் எமிலியாசாகும்.

நாங்கள் திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், திருவனந்தபுரத்திலிருந்த நாராணாய குரு மன்றம் திருவிதாங்கூர் சமஸ்தான நூலகம் என்பவற்றிலிருந்து ஈழவர்கள் பற்றிய வரலாற்று தகவல்களை திரட்டியதுடன் நெய்யாற்றின் கரையில் இருந்து ஆரம்பித்து மேற்குத் தொடர்ச்சி மலையேரக் கிராமங்கள் மற்றும் வடக்கே காசர் கோடு வயநாடு ஈறாக நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் 18 மாதங்கள் பல்வேறு ஈழவர் சமூக பெரியார்களை சந்தித்து தகவல்களை திரட்டி கள ஆய்வு செய்ததில் ஈழவர்களுக்கும் ஈழத்திற்கும் தொடர்பிருந்ததை உறுதி செய்ய முடிந்தது.

முக்கியமாக சேரர்களுடைய ஆட்சிக்காலத்தில் படைவீரர்களாகவும் படைதளபதிகளாவும் மெய்காப்பாளர்களாவும் வணிகர்காகவும் இருந்த இவர்கள் ஈழத்திலும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள். கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் கோவில் கட்டியதாக சொல்லப்படும் காலத்தில் ஈழத்திலும் இவர்களே கண்ணகிக்கு கோவில் கட்டியிருக்கிறார்கள் (கண்ணகிக்கு இலங்கையில் கோவில் கட்டப்பட்ட செய்தி சிங்கள் வரலாற்று நூல்களிலும் உள்ளது) தமிழகத்துடன் மண உறவுகளை வைத்துக்கொண்ட ஈழத்து மன்னர்கள் (ஈழம் என்பது அப்போது முழு இலங்கைத் தீவையும் குறித்தது) இவர்களையே படைத்தளபதிகளாகவும் மெய்காப்பாளர்களாகவும் நிமித்திருக்கிறார்கள்.

ஆச்சரியப் படத்தக்க விதத்தில் இவர்களில் ஒரு பகுதியினர் சிறு தெய்வ வழிபாட்டை மேற்கொள்பவர்களாகவும் மற்றொரு பகுதியினர் தமிழகத்தில் நிலவிய மாகாயான பௌத்தத்தை கடைப்பிடிப்பவர்களாகவும் இருந்தார்கள்.

ஈழத்திலும் இவர்களே தேரவாத பௌத்தத்துக்கு எதிரான மகாயான பௌத்தத்தை கடைப்பிடிப்பவர்களாக இருந்தார்கள்.

கி.பி 6ம் நூற்றாண்டில் ஆதிசங்கரருடைய எழுச்சி தமிழ் நாடான சேரநாட்டை ஆரிய சமஸ்கிரத கலப்புக்குள்ளாக்கி லிங்ங வழிபாடு பத்தினி தெய்வ வழிபாடு (கண்ணகி வழிபாடு) முதலான தமிழ் வழிபாட்டு மரபுகளை அழித்து அறுவகை சமையம் என்ற வைதீக கட்டுக்குள் கொண்டு வந்தது.

சேரநாடு பரசுராமர் தன்னுடைய ஆயுதமான கோடரியை கடலுக்குள் எறிந்ததால் உருவான நாடு விஷ்ணுவால் ஆட்கொள்ளப்பட்ட வாமண மன்னரால் ஆளப்பட்ட புனித பூமி என்பது போன்ற ஆரியம் சம்பந்தப்பட்ட புராணக் கதைகள் முதன்மைப்படுத்தப்பட்டன.

சேரர்களுடைய ஆட்சிக்காலத்தில் அதிகார முடையவர்களாக இருந்த வில்லவர்கள் எனப்படும் இந்த ஈழவர்கள் சமஸ்கிரத மேலாதிக்க அலையில் அதிகாரம் இழந்து அடிமைகளாக்கப்பட்டார்கள். அதேநேரம் தமிழகத்தில் சைவ நாயன்மார்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சமண பௌத்த மதங்களுக்கு எதிரான இயக்கம் சோழ பாண்டிய மன்னர்களின் ஆதரவைப் பெற சமண பௌத்த மதத்தினரை கழுவேற்றிக் கொலை செய்யும் அளவுக்கு வெறி கொண்டதாக மாறுகிறது.

இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் மாகாயான பௌத்தம் (சமணமும் கூட) துடைத்தழிக்கபடுகிறது. அந்த மதத்தை சேர்ந்த விகாரைகள் இடித்தழிக்கப்பட்டு அங்கிருந்த பிக்குகள் கழுவேற்றிக் கொல்லப்பட அந்த மதத்தை கடைப்பிடித்த ஏனையோர் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டவர்களில் ஒரு சிறு தொகையினர் ஈழத்துக்கு தப்பியோட ஏனையோர் அந்த காலத்தில் வலுவிழந்த அரசை கொண்டிருந்த வேளிர் நாட்டுப் பகுதிக்கு (பின்னாளிள் திருவிதாங்கூர்) சென்று தஞ்சமடைகின்றனர்.

ஈழத்திலும் இந்த மதப் போர் சைவ பௌத்தப் போராகவும் மாகாயான தேரவாதப் போராகவும் வெடிக்கிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் கந்தரோடை என்ற கதிரமலையில் இருந்த தமிழ் பௌத்த(மகாயான) தலைநகரம் கைவிடப்படுகிறது.

அந்த நகரத்தின் கடைசி மன்னனான உக்கிரசிங்கன் சோழ இளவரசியான மாருதப்புர வல்லி (மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவிலை கட்டியவள்)யை மணம் புரிந்து சைவ சமயத்தக்கு மாறியதுடன் தனது மனைவியின் பேரால் வல்லிபுரம் என்ற நகரத்தையும் உருவாக்கி தனது அரசை அங்கு மாற்றுகிறான்.

தெற்கே மாகாயான பௌத்தத்தை கடைப்பிடித்த (அனுராதபுரத்திலிருந்த அபயகிர விகாரை உட்பட) அனைத்து விகாரைகளும் தேர வாத பௌத்த பிரிவினரால் அழித்தொழிக்கப்படுகிறது.

தேரவாத பௌத்தமானது தமிழ் எதிர்ப்பு தமிழ்நாட்டு எதிர்ப்பு ஆரிய தூய்மைவாதம் என்ற முழக்கங்களை முதன்மைப்படுத்தி தன்னை இலங்கையின் ஆதிக்க மதமாக நிறுவிக் கொள்கிறது.

தென் இலங்கை முழுவதும் பரவி வாழ்ந்த மகாயான பௌத்தத்தை கடைப்பிடித்த வில்லவர்கள் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர். மகாயான பௌத்தமும் துடைத்தளிக்கப்படுகிறது.

இவ்வாறு அன்று ஈழம் என்று அழைக்கப்பட்ட இலங்கைத் தீவு முழுவதிலும் இருந்து விரட்டியடிக்கப்பட்ட வில்லவர்கள் அன்றைய சேரநாட்டில் தஞ்சமடைகிறார்கள். அவர்கள் ஈழத்தில் இருந்து வந்தவர்கள் என்கின்ற படியினால் அப்போது சேரநாட்டில் தலையெடுத்த ஆதிக்க சாதியனரான (ஆரிய வம்சாவழி) நம்பூதிரிகளும் நாயர்களும் அவர்களை ஈழவா அல்லது ஈழவர் என அழைத்தனர். இதுவே பின்னர் அவர்களது சாதிப் பெயராக ஆகிவிட்டது.

இதிலே முக்கியமான விடயம் இந்த ஈழவர்கள் அல்லது வில்லவர்களில் ஈழத்தில் ஒரு அரச பரம்பரையை சோந்தவர்களும் இருந்திருக்கிறார்கள். அது எந்த அரச பரம்பரை என்பதற்கு உரிய சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லலை.

திய்யா என்று அழைக்ப்படும் இந்த மன்னர் பரம்பரை மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் அனுராதபுரத்தை ஆண்ட சேனன் குந்திகன் பரம்பரையின் வழித்தோன்றல்களா? அல்லது யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆண்ட உக்கிரசிங்கனின் அரச வம்சத்தை சோந்தவர்களா? அல்லது வேறெந்த அரசும் அவர்களுக்கு இருந்ததா? என்பது அராயப்பட வேண்டும்.

நாங்கள் இந்த வரலாற்று கள ஆய்வை மேற்கொண்ட காலத்தில் நவீன தொழில் நுட்ப வசதிகளோ இணைய வசதிகளே ,உரிய போக்குவரத்து வசதிகளோ எமக்கு இருக்கவில்லை.

கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்த பல கிராமங்களுக்கு நாங்கள் கால்நடையாகவே சென்றிருக்கிறோம்.

இன்று நவீன தொழில் நுட்ப வசதிகளும் இணயத்தின் வருகை உலகை கணனியின் விசைப்பலகைக்குள் அடக்கும் அளவுக்கு சுருக்கிவிட்ட நிலையில் தமிழர்களின் வரலாறு பற்றிய ஆர்வமுள்ளவர்கள் இந்;த ஈழவர்களின் வரலாறு பற்றிய ஆய்வை துறைசார் ரீதியில் மேற்கொள்ள வேண்டும்.

1983ல் நாங்கள் இந்த கள ஆய்வை முடித்த போது தோழர் எமிலியாஸ் சொன்னார் ‘தோழர் ஈழவிடுதலைக்காக போராடும் உங்களுக்கு சிங்கள அதிகார வர்க்கம் மட்டும் எதிரியல்ல, இன்னொரு 10 வருடம் பொறுத்திருந்து பாருங்கள் இந்த மலையாள அதிகார வர்க்கமும் உங்களை எதிர்க்கும். அவர்களுக்கு ஈழவர்களை பிடிக்காது. அதனால் ஈழத்தையும் பிடிக்காமல் போகும் கவனமாய் இருங்கள்’என்று.

அவர் சொன்னது இன்று நூற்றுக்கு நூறு வீதம் உண்மையாகி இருக்கிறது...

தகவல் - நண்பர்

50 US டாலர் விலை போற கச்சா எண்ணெய்க்கே உலக நாடுகள் மூர்க்கமா சண்டை போடுதுன்னா.., விலைமதிப்பற்ற ஒரு பொக்கிஷ புதையலையே வெச்சிருக்க நம் தமிழ்நாட்டை...?


புலன்கடந்த ஆற்றல் என்றால் என்ன?


நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும் போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம்.

உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக்கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.

இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை. நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது...

அதை எப்படி வளர்த்துக் கொள்வது?

எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகரித்து கொண்டே போகும்.

Extra Sensory Perceptionஐ எல்லோராலும் வளர்த்து கொள்ள முடியும் ஆழ்ந்த தியானத்தால்.

ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?

நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம் நாம் படுத்தபின்  உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள் தான் அவை.

அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.

தயவுசெய்து இனி படுத்தபிறகு அந்த நேரத்தில்  பிரச்சனைகளை பற்றி யோசித்துவிடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகிவிடும்.

உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்துவிட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்.

ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?

நாம் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது. அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்.

வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே.

ஆம் நாம், பூமி,  இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும். பிரம்மம் பூமியில் கலக்கும் அதாவது முகூர்த்தம் ஆகும் நேரமே பிரம்ம முகூர்த்தம்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா திவாலாகி பல மாதங்கள் ஆகிவிட்டது...


மரமும் மனிதனும்...


அற்புதப் பலன்களைக் கொண்ட ஆவி மரம்...

மரம் செய விரும்பு - சுற்றுச்சூழல்மரம் செய விரும்பு - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம்!பூமியைக் காக்கும்... மழை மேகத்தை இழுக்கும்... - அற்புதம் செய்யும் ஆலமரம்!உணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்!இரும்பு மரம் ‘ஈட்டி’!மரம் செய விரும்பு! - இயற்கை ஷாம்பூ உசிலை மரம்!மரம் செய விரும்பு! - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்!மரம் செய விரும்பு!  - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்!மரம் செய விரும்பு! - 9 - மலைகளைக் காக்கும் ஊசியிலை மரங்கள்!மரம் செய விரும்பு! - 10 - விஷத்தை முறிக்கும் எட்டி!மரம் செய விரும்பு! - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'மரம் செய விரும்பு! - 12 - தீக்குச்சியாகும் பெருமரம்... 4 ஆண்டுகளில் நல்ல வருமானம்!மரம் செய விரும்பு! - 13 - ஆடுகளுக்கு உணவு... மனிதர்களுக்கு விறகு... - சூழலைக் காக்கும் குடைக்கருவேல்! மரம் செய விரும்பு! - 14 - சூழலைச் சமன்செய்யும் சதுப்பு நிலக்காடுகள்!மரம் செய விரும்பு! - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...மரம் செய விரும்பு! - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்!மரம் செய விரும்பு! - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்!மரம் செய விரும்பு! - 18 - மரக்கன்று நடவுக்கேற்ற மழைக்காலம்!மரம் செய விரும்பு! - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிசு நிலங்களைப் பசுமையாக்குங்கள்! மரம் செய விரும்பு! - 20 - பனை கொடுக்கும் பயன்கள்!மரம் செய விரும்பு! - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...மரம் செய விரும்பு! - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்...  மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்!மரம் செய விரும்பு! - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்!

சுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்.

இந்த இதழில் நாம் பார்க்கப்போகும் மரம் ‘ஆவி மரம்’. இதன் பெயரை வைத்து வேறெதுவும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். உங்கள் கற்பனைக்கும் இம்மரத்துக்கும் துளிகூடச் சம்பந்தமில்லை. இம்மரங்களைச் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளின் ஓரத்தில் அதிகளவில் காண முடியும். முந்தைய காலங்களில் ரயில்வே துறையின்மூலமாக நாடு முழுவதுமுள்ள ரயில் தண்டவாளங்களின் ஓரத்தில் இம்மரக்கன்றுகள் நடப்பட்டன. அதற்குக் காரணம் உண்டு. இம்மரங்கள் புகையை உறிஞ்சும் ஆற்றல் கொண்டவை. தொடர் வண்டிகளில் எரிபொருளாகக் கரி பயன்படுத்தப்பட்டபோது வெளியேறும் கரும் புகையை உறிஞ்சிக் கொள்வதற்காகத்தான் இம்மரங்கள் நடப்பட்டன. 

மேலும், ‘பிளைவுட்’ தயாரிக்க, கடைசல் வேலைப்பாடுகள் செய்ய, கட்டில்கள் செய்ய, மாட்டு வண்டிகள் செய்ய... எனப் பல விதங்களில் இம்மரம் பயன்படுகிறது. வட மாநிலங்களில் இம்மரத்தின் இலைகளைக் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. எரிபொருள் மற்றும் மரக்கரியாகவும் இம்மரக்கட்டைகள் பயன்படுகின்றன.

இந்த மரம் வெப்பமண்டலத் தாவரம். இது விதை மூலமாகப் பரவிப் பெருகுகிறது. இதன் விதைகள் மிகவும் மெல்லியவை. அரச இலையில் சிறிய  விதையை ஒட்டி வைத்தாற்போல தோற்றமளிக்கும். விதைகளைச் சுற்றிலும் மெல்லிய படலம் படர்ந்திருக்கும்.

விதை முதிர்ந்ததும் காற்று மூலமாக விதைப்பரவல் ஏற்பட்டு... தென்மேற்குப் பருவமழைக் காலங்களில் (ஜூன்-செப்டம்பர்) இயற்கையாகவே முளைத்துவிடும். 

அனைத்து உயிர்களுக்குமான எண்ணிக்கையைச் சமமாகப் பராமரிக்கும் இயற்கை, இம்மரத்துக்கும் ஒரு கட்டுப்பாட்டை வைத்திருக்கிறது. காற்றின் மூலமாகப் பரவுவதால், இந்த மரங்கள் அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்துக் கொள்ள வாய்ப்பு உண்டல்லவா... அதனால்தான் அந்தக் கட்டுப்பாடு. விதை முளைக்கும் காலங்களில், அந்த இடத்தில் மழைநீர் தேங்கினால் வேரழுகல் ஏற்பட்டு, இளம் செடிகள் இறந்துவிடும். அதில் தப்பிய விதைகள்தான் மரங்களாகின்றன. ஆவி மரங்கள் செடிப்பருவத்தில் மிதமான வளர்ச்சியும் முற்றிய பிறகு விரைவான வளர்ச்சியும் கொண்டவை. இம்மரங்களில் வறட்சிக்காலத்தில் இலைகள் உதிர்ந்து சில நாள்களில் மீண்டும் துளிர்க்கும். இம்மரத்தின் பலகைகள், மஞ்சள் கலந்த சாம்பல் நிறமாகவும் மிதமான கடினத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். இமயமலைத்தொடரின் வெளிப்பகுதிகளிலிருந்து திருவிதாங்கூர் (கேரளா) வரை பரவியுள்ள இந்த மரம், ‘ஆயா மரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இலையுதிர் காடுகளிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழைக்காடுகளிலும் இம்மரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. 

கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் மீட்டர் உயரமான பகுதிகளிலும் வளரும் தன்மையுடையது. கரிசல் மண்ணில் இம்மரங்கள் வளர்வதில்லை. மற்ற மண் வகைகளில் நன்றாக வளரும். ஆண்டுக்கு 300 மில்லிமீட்டர் அளவு மழை கிடைக்கும் இடங்களில்கூட இம்மரம் உயிர் வாழும். ஆண்டுக்கு 500 மில்லிமீட்டர் அளவுக்குமேல் மழை கிடைக்கும் பகுதிகளில் இம்மரங்கள் சிறப்பாக வளர்கின்றன. நல்ல சூழ்நிலை அமைந்தால் நூறடி உயரம்கூட வளரும்.

இம்ரமர மண் கண்டம் (மண்ணின் ஆழம்) அதிகமான பகுதிகளில் செழிப்பாகவும், குறைவான பகுதிகளில் குட்டையாகவும், மணற்பாங்கான பகுதிகளில் படர்ந்ததாகவும் காணப்படும். இது மண் வகைக்கேற்ப தன்னை நீட்டி, சுருக்கி, மாற்றிக்கொள்ளும் இயல்புடையது. நிலத்தில் மண்ணின் ஆழம் (மண் கண்டம்) அதிகமாக இருக்கும்போது மரத்தின் உயரமும் பருமனும் அதிகரிக்கிறது. இதன் இலைகள் அடர்த்தியாக இருக்கும் என்பதால் அதிக இலையுரம் (பயோமாஸ்) கிடைக்கும். இம்மரம் வாஸ்து சாஸ்திரங்களுக்குக் கட்டுப்படாதது என்பது இதன் தனிச்சிறப்பு.

சுவீடன் நாட்டு நிதியுதவியுடன் தமிழ்நாடு வனத்துறை மூலமாகச் செயல்படுத்தப்பட்ட ‘சமூகக்காடுகள் திட்ட’த்தில் மலைக்குன்றுகள், கண்மாய்க் கரையோரங்கள், சாலையோரங்கள், ரயில்பாதை ஓரங்களில் இம்மரங்கள் பெருமளவில் நடப்பட்டு, தற்போது நன்கு வளர்ந்து செழுமையுடன் காணப்படுகின்றன. ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் செயல்பட்டுவரும் ‘தமிழ்நாடு பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பசுமையாக்கல் திட்டம்’ மூலமாக ஆவி, வெப்பாலை, ஆச்சா போன்ற மரங்கள் அதிகளவில் நடப்பட்டுவருகின்றன. 

‘ஹோலோப்டெலியே இன்ட்டெகரிஃபோலியா’ (Holoptelea Integrifolia) என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஆவி மரத்தைச் சாகுபடி செய்ய நினைப்பவர்கள், நேரடி விதைப்பு மற்றும் நாற்று மூலம் நடவுசெய்யலாம். ஒரு கிலோ அளவில் சுமார் 27 ஆயிரம் விதைகள் இருக்கும். நன்கு முற்றிய நெற்றுகளைச் சேகரித்து உலர்த்தி, விதைகளைச் சேமிக்க வேண்டும். இந்த விதைகளை நீண்ட நாள்கள் இருப்பு வைக்கக் கூடாது. அப்படி இருப்பு வைத்தால் முளைப்புத்திறன் குறையும்.

-வளரும்...

மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற மரம்.

இம்மரத்தை நடவுசெய்து சில மாதங்கள் வரை தண்ணீர் கொடுத்தால் போதும். அதன் பிறகு தன்னால் வளர்ந்துவிடும். வறட்சியைத் தாங்கி வளரும் வகையில் படர்ந்து பரவும் வேர் அமைப்பைக் கொண்டது.

இம்மரங்களால்  அருகிலுள்ள பயிர்களுக்குப் பாதிப்பிருக்காது. எனவே தோட்டங்களிலும் ஆவி மரங்களை நடவுசெய்து வளர்க்க முடியும். மழைக்காலத்தில் மானாவாரி நிலங்களில் விதைத்தால், மழைத்தண்ணீரைக்கொண்டே வளர்ந்துவிடும். சாலையின் இரு பக்கத்திலும் இம்மரக் கன்றுகளை நடவு செய்தால், சில ஆண்டுகளில் சாலையே சோலையாக மாறிவிடும்...

நன்றி வணக்கம்.. பெருசங்கர்...
ஈரோடு  மாவட்டம்...

இது ஆரம்பம் தான்... அமெரிக்க வாழ் உறவுகளுக்கு நன்றி...


எங்கள் ஊர் விஞ்ஞானிகள...


பெரிய சாலையை விழுங்கிய சிறிய பாலம்...

அரியலுர் இரயில் நிலையம் செல்லும்  வழி...

புதிய சாலை அமைக்கும் போது பாலத்தை விரிவாக்கம் செய்யாமல் சாலையை மட்டும் குறுக்கிய எம் ஊர் பணியாளர்கள்...

கார்பரேட் அரசியலை புரிந்துக் கொள் தமிழா...


பாஜக மோடிக்கும் அமித்ஷாக்கும் கூட இருக்கிறவனே ஆப்பு வைக்கிறானா பார்த்துக்கோங்க மக்களே... பாஜக எவ்வளவு கேவலமான கட்சி என்று...


பிரதமர் மோடி தலித்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஏழை மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. பிரதமர் மோடி நாட்டை பலவீனப்படுத்தி விட்டார்- கர்நாடக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமித்ஷாவின் பேச்சை தவறுதலாக மொழி பெயர்த்த பிரகலாத் ஜோஷி என்பவர்...

தமிழா விழித்துக்கொள்...


இந்தியத்தின் சதி திட்டத்தில் இருந்து தமிழகம் தப்ப ஒரே வழி...


காமன் வெல்த் மாநாடு..
ஐ.நா மன்றம்..

இந்த இரண்டிலும் தனி தமிழ்நாடு கோரிக்கை வைத்து..

தனி  தமிழர்நாடு பெற்றால் மட்டுமே தமிழினத்திற்கு வாழ்வு...

இல்லையேல் மண்ணோடு புதைவது நிச்சயம்...

மும்பையில் வெண்புறா மகளிர் குழுவினர் சார்பில் ஸ்டெர்லிட் sterlite எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது...


போராட்டத்தில் தலைமை ஏற்று நடத்தி கொடுத்த branch manager Ajay Jadhav அவர்களுக்கும்...

ஆர்வமுடன் கலந்து கொண்ட அனைத்து வெண்புறா மகளிர் குழுவினருக்கும்..

நிகழ்ச்சி நடக்க உதவியாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த  நன்றிகள்...

உலக அரசியலும் - உலக போரும்...


மொரிசியஸ் தீவு தமிழர்கள்...


மொரிசியஸ் தீவில் போஜ்பூரி பேசும் மக்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சமுதாயமாகத் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

அடிமைகளாக இந்த நாட்டுக்குத் தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள்.

இதன் விளைவாக அவர்கள் தங்கள் மொழியின் மீது கொண்டிருந்த பற்றினைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்கள்.

பிரஞ்சு, கிரியோலி, மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றால் மட்டுமே பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும், தாய் மொழியான தமிழ் மூலம் அது கிடைக்காது என்பதை உணர்ந்த தமிழர்கள் மேற்கண்ட மொழிகளுக்குத் தாவினார்கள்.

மொரிசியஸ் தீவில் தமிழர்கள் குவியலாக ஓர் இடத்தில் வாழவில்லை. தீவு முழுவதும் பரவிக் கிடந்தார்கள். அவர்களுடைய மொழி இழப்புக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

கிராமப்புற பகுதிகளில் குடியேறிய தமிழர்கள் ஓரளவிற்குத் தங்களுடைய மொழி உணர்வைக் காப்பாற்றிக் கொண்டார்கள். நகர்ப்புறங்களில் குடியேறிய தமிழர்கள் அங்கு பெரும்பான்மையோர் பேசிய மொழியிலேயே பேசி வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த தமிழ்க் குழந்தைகள் தங்கள் தாய் மொழியை அறவே இழந்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும். மேலும் மொரிசியஸ் தலைநகரான போர்ட் லூயிஸ் நகரைக் கட்டுவதில் புதுச்சேரி தமிழர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் கிறித்துவர்கள். கிறித்துவ தமிழர்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் குடியேறினார்கள்.

மொலாட்டோ இனத்தவரும் கிரியோலி இனத்தவரும் கிறித்துவ தமிழர்களுடன் இரண்டறக் கலந்ததாலும் அவர்கள் தங்கள் மொழியை இழந்தனர். மேலும் ஆரம்பப் பள்ளிகளில் கீழ்த்திசை மொழி அல்லது கிறித்துவ மதப் படிப்பு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.

கிறித்துவத் தமிழர்கள் தங்கள் குழந்தைகள் மதப் படிப்பை படிக்க வேண்டும் என்றே விரும்பினார்கள். எனவே, தமிழ் அந்த குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படவில்லை. மேலும் தமிழ்ர் பாட நூல்களில் பெரும்பாலும் இந்துக் கடவுள்கள், துறவிகள், கோயில்கள், சிற்பங்கள் ஆகியவை பற்றிய படங்கள் இருந்தன. மதசார்பற்ற தன்மையில் அந்த பாட நூல்கள் அமையவில்லை. கிறித்துவ குழந்தைகள் இதைக் கற்க விரும்பவில்லை. இதன் விளைவாக கிறித்துவ தமிழர்களில் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்துத் தமிழர்களிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்களாகக் கருதத் தொடங்கினார்கள்.

இதைப் போலவே இந்துத் தமிழர்களும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மொழியை இழந்தார்கள். வீடுகளில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

மொரீசியஸ் தீவில் தமிழர்களின் எண்ணிக்கை 6.1 சதவீதம் ஆகும். ஆனால் வீடுகளில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 0.6 சதவீதம் மட்டுமே. 53832 பேர் தமிழ் தங்கள் மூதாதையர்களின் மொழி என்பதை அறிந்தவர்கள். ஆனால் இவர்களில் 6,943 பேர் மட்டுமே தமிழை வீடுகளில் பேசுபவர்கள். இது போன்ற தமிழர்களின் எண்ணிக்கை குறித்து பல விவரங்களை நூல் ஆசிரியர் அளித்துள்ளார்.

தமிழ் மொழி - இலக்கியம் - பண்பாடு ஆகியவற்றின் சிறப்பு குறித்து மொரிசியஸ் தமிழர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். தங்களுடைய தமிழ்ப் பரம்பரை குறித்து அவர்களுக்கு பெருமிதம் உண்டு. மொரிசியசில் அனைத்துலகத் தமிழ் மாநாட்டினை அவர்கள் வெற்றிகரமாக நடத்தி உள்ளார்கள். மொரிசியஸ் நாணயங்களில் தமிழ் இடம் பெற்றுள்ளது. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றிலும் தமிழ் நிகழ்ச்சிகள் உண்டு.

சுமார் 200 தமிழ் பள்ளிக்கூடங்களும் 200 தமிழ் ஆசிரியர்களும் மொரிசியசில் உள்ளனர். மொரிசியஸ் தமிழர்கள் குறித்த வரலாறு அவர்களின் நாட்டுப்புற இலக்கியம் இவைகளைப் பற்றிய நூல்களும் உண்டு. மொரிசியஸ் தமிழர்களுக்கிடையே எழுத்தாளர்களும் கவிஞர்களும் உண்டு. தொடக்கப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. ஆனால் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கற்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். தமிழர் பண்பாட்டோடு மொழி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் ஆசிரியர்களே தங்கள் கருத்துக்களை முழுமையாகத் தமிழில் வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர். மிகச் சிலரே பிழை இல்லாமல் தமிழ் எழுதுகின்றனர். இதன் காரணமாக மொழிச் சிதைவு ஏற்பட்டுள்ளது. மொரிசியஸ் தமிழர்களிடையே தாய்மொழி இழப்பு குறித்து அவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலைமை நீடிக்குமானால் பிஜித் தமிழர்களைப் போல இவர்கள் நிலைமை ஆகிவிடும் என்பதில் ஐயமில்லை.

1840- களில் மொரிசியசு நாட்டு கரும்புத் தோட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழ்மக்களின் எண்ணிக்கை இன்று பன்மடங்காகப் பெருக்கம் கண்டுள்ளது. இந் நாட்டில் தமிழிய மரபுவழியானவர் 22,000 (1993 Johnstone) பேர் வாழ்கின்றனர். இற்றைநாளில் மொரிசியசின் மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் தமிழர்களே. இவர்களின் பேச்சுமொழியாக இருப்பது கிரியோல்மொழியும் (Creal Morisyen), ஆங்கிலமொழியுமாகும். பெயரளவில் தமிழாய்ந்த பெயரினை வைத்துக்கொண்டு தமிழர் என்ற சூழலுக்குள் தம்மை இருத்திக்கொண்டு வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வு, கறுத்த முகத்திற்கு வெளுத்த உடல் இணைத்தாற்போல் உள்ளது.

மொறிசியஸ் தீவில் உள்ள பதினொரு இலட்சம் குடிமக்களில் 75.000 பேர் தமிழ் மக்கள். இவர்களில் 52 சதவீதம் இந்து மதத்தவர்கள் உள்ள அந்த நாட்டில் முஸ்லிம்கள் சீன-மொறிசியர்கள் நாட்டின் பூர்வீக குடிகள் என எல்லோரும் இன- மத- மொழி வேறுபாட்டால் பிளவுபடாமல் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.

1730களில் இத்தீவை ஆண்ட பிரெஞ்சுக்காரர்,இந்தியாவில் தமது ஆதிக்கத்தின் கீழிருந்த புதுச்சேரியிலிருந்து தமிழர்களை கட்டடக் கைத்தொழில் - நுண்கலைத் தொழிலாளராக அழைத்து வந்தனர். 1810 இல் சென்னையிலிருந்து அழைத்து வரப்பட்ட பெருந்தொகையான தமிழ்ப் போராளிகளின் உதவியுடன் பிரித்தானியர் இத்தீவை பிரெஞ்சுக்காரர்களிடமிருந்தது கைப்பற்றினர். மொறிசியசில் இன்று ஏறத்தாள 100 சைவ ஆலயங்கள் உள்ளன. அங்கே சைவப் பண்டிகைகளும் கோவில் அனுட்டானங்களும் செவ்வனே நடைபெற்று வருகின்றன. அங்கே சைவம் தழைத்து நிற்கிறது.

195 ஆரம்ப பாடசாலைகளிலும் 12 உயர்தரப் பாடசாலைகளிலும் தமிழ் ஆசிரியர்களால் தமிழ் மொழிக் கல்வி போதிக்கப்படுகிறது. எல்லாமாக 215 தமிழ் ஆசிரியர்கள் மொரிசியசில் உள்ளனர். ஆனால் அங்கே கட்டாய தமிழ் மொழிக்கல்வி கிடையாது. தமிழ்ப் பாடத்தில் அடையும் சித்திகள் உயர்கல்விக்கோ அல்லது தொழில் வாய்ப்பிற்கோ உதவுவதில்லை. பெரும்பாலான தமிழ்ப் பிள்ளைகள் வீட்டிலே தமிழ் பேசுவதில்லை. கிறியோல் மொழிதான் பேசுகிறார்கள். மேலும் அரசமொழிகளான ஆங்கிலத்தையும் பிரெஞ்சு மொழியையும் அனைவரும் நன்கு பேசுகின்றனர். மொரிசியஸ் தமிழர்களுக்கு சுமாராக தமிழ் வாசிக்கத் முடியும். எழுதவும் வரும். ஆனால் தமிழ் பேசவராது.

தமிழிலிருந்து உக்கிரத் திரிபு அடைந்த பெயர்களை இங்குள்ளவர்கள் வைத்துள்ளனர். பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதற்கு பிறந்த நட்சத்திரம் பார்த்து, தமிழ்ப் பெயர் அடி எடுத்துக் கொடுப்பது கோவில் குருக்கள். மொரிசியசில் சைவ சமயமே வாழ்க்கையின் அடிப்படைக் கலாச்சாரத்தைப் பேணுகின்றது. சமய,விரத நாட்களை மக்கள் அறியும் வண்ணம் ஆண்டு தோறும் பஞ்சாங்கம் ஒன்று பிரெஞ்சு மொழியில் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. தமிழர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள். அழுவதா சிரிப்பதா என தெரியாத இன்னொரு விடயமும் உண்டு. பிறப்புச்சாட்சிப் பத்திரம் திருமணப்பதிவுப்பத்திரம், குடிசனமதிப்புப் பத்திரம் போன்ற அரச ரீதியான பதிவேடுகளிலெல்லாம் மொரிசியசின் தமிழ் மக்கள் தமது மதத்தை - தமிழ் என்று பதிந்து வருவது வழக்கம்! இங்கே சைவமும் தமிழும் ஒரு பொருட் கிழவிகள் போல் பாவனையில் இருந்து வருகின்றன. ' மெல்லத் தமிழ் இனிச்சாகும் " என்று பாரதியார் எச்சரித்தது இதைத்தானோ?

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு...


பாஜகவும் அரசியலமைப்பு ஒதுக்கீட்டு திள்ளுமுள்ளும்...



பிராமணர்கள் SC, ST மற்றும் OBC அரசியலமைப்பு ஒதுக்கீட்டில் படையெடுத்த இடங்களைக் காண்க...

1- ஜனாதிபதி செயலகத்தின் மொத்த இடுகைகள் 49..

இவர்களில் 39 பிராமணர்கள்.
SC'ST-4...  ஓ.பி.சி.-06..

2- துணை ஜனாதிபதி செயலகத்தின் 7 பதவிகள்...

இங்கே 7 பிராமணர்கள் இருக்கிறார்கள்.
-00 எஸ்சி.. எஸ்டி -00.. ஓ.பி.சி. -00..

3. கேபினட் செயலாளர் பதிவுகள் 20...

17 பிராமணர்கள். SC'ST-1... ஓ.பி.சி.-002..

4. பிரதமரின் அலுவலகத்தில் மொத்தம் 35 பதிவுகள்...

31 பிராமணர்கள்.. SC'ST-02.. OBC - 02...

5. விவசாயத் திணைக்களத்தின் மொத்த இடுகைகள் - 274...

259 பிராமணர்கள்... SC'ST-5... ஓ.பி.சி.-10..

6. மொத்த அமைச்சின் பாதுகாப்பு அமைச்சு 1379...

1300 பிராமணர்கள்... SC'ST-48.. ஓ.பி.சி - 31..

7. சமூக நல மற்றும் சுகாதார அமைச்சின் மொத்த இடுகைகள் 209..

132 பிராமணர்கள்.. SC'ST-17.. ஓ.பி.சி. -60..

8. நிதி அமைச்சின் மொத்த இடுகைகள் 1008..

942 பிராமணர்கள்.. SC'ST-20.. ஓ.பி.சி.-46..

9. பிளானட் அமைச்சில் மொத்தம் 409 பதிவுகள்..

327 பிராமணர்கள்.. SC'ST-19.. ஓ.பி.சி.-63..

10. தொழில் அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 74...

59 பிராமணர்கள்.. நேரங்களில் SCST- 4.. ஓ.பி.சி. -9..

11. கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 121...

91 பிராமணர்கள்.. SC,ST - 9.. ஓ.பி.சி. -21..

12. கவர்னர் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் 27...

25 பிராமணர்கள்.. SC,ST - 0.. ஓ.பி.சி. -2..

13. தூதுவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர் 140..

140 பிராமணர்கள்.. SC'ST-00.. ஓ.பி.சி.-00..

14. மத்திய அரசு பல்கலைக்கழக துணைவேந்தர் 108...

100 பிராமணர்கள்... SC'ST -03.. OBC- 05..

15.. மத்திய பொதுச் செயலாளர் பதிவுகள் 26...

18 பிராமணர்கள்... SC'ST-1.. ஓ.பி.சி.-7..

16. உயர் நீதிமன்ற நீதிபதி 330...

306 பிராமணர்கள்... SC'ST-4.. ஓ.பி.சி. -20..

17. உச்ச நீதிமன்ற நீதிபதி 26...

23 பிராமணர்கள்.. SC'ST-01.. ஓ.பி.சி.-02..

18. மொத்த ஐஏஎஸ் அதிகாரி 3600...

2750 பிராமணர்கள்.. 300 essiest.. 350 ஓ.பி.சி..

கோயில்கள், ஜோதிடம், எதிர்காலம் போன்றவை ஒரே பிராமணர்களில் 100% ஆகும்.

நாட்டின் மக்கள் தொகையில் 3% க்கும் குறைவான பிராமணர்கள் எவ்வாறு 90% பதவிகளைப் பெற்றனர்? கடவுள் மதத்தின் பெயரா? மன்சுரிமியின் பெயர் என்ன? அல்லது அது நம்முடைய காரியமா? அதை யோசி..

சகோதரனே, அதை முடிந்த அளவுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்...

பிராமணர்களின் நிறத்தை விளக்குங்கள். அரசியலமைப்பு ஒதுக்கீட்டை பாதுகாக்கவும்.

(டெலினை அடிப்படையாகக் கொண்ட நிறுவனம், 'யங் இந்தியா' எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் கிடைக்கிறது).

Thanks: Sriram Mamundi

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் லட்சனம்...


யாரும் சிரிக்க கூடாது...


நேற்று பணியிலிருந்த காவலரை தாக்கி வெட்டிய ரவுடிகள், தி.நகர் போலீஸ் நிலைய பாத்ரூமில் தவறுதலாக வழுக்கி விழுந்து தங்கள் கை கால்களை உடைத்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தகவல்...

பாஜக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது... மக்கள் புரட்சி மட்டுமே ஒரே வழி...


இமயமலையை விட்டுவிட்டு, ஏன் தேனியில் அமைக்கிறார்கள் எனக்கேட்டால்...


இமயமலை-இளையமலை, அங்கிருப்பது படிமப்பாரை, ஆனால் தனி பொட்டிபுரத்தில் இருப்பதோ கடினப்பாறை, எனவே தான் இப்பகுதியை தேர்வு செய்தோம் என்கிறார்கள்.

படிமப்பாறையை காஸ்மிக் கதிர்கள் ஊடுருவிவிடும் என்பதற்கு எந்த அறிவியல் சான்றுமில்லை. படிமப்பாறை கதிர் வடிகட்டியாக, பாதுகாப்பு கவசமாக இருக்காது என்பதற்கு உறுதியான சான்றெதுவும் இல்லை.

சரி கடினப்பாறை தான் வேண்டும், அதற்க்கு மேற்கு தொடர்ச்சி மலை தான் பொருத்தமானது என்றால், இந்த மேற்கு தொடர்ச்சி மலை தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடகத்தை கடந்து கோவா வரையிலும் உள்ளது. அங்கு இதே வகை பாறை தான் உள்ளது.

அந்த இடங்களை எல்லாம் விட்டுவிட்டு, தமிழகத்தை இந்திய அரசு தேர்ந்தெடுத்திருப்பதற்கு அடிப்படைக் காரணம் இனப்பகை தான்.

-தோழர் கி.வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்...

பாஜக மோடியும் தமிழின அழிப்பு திட்டமும்...


மணிப்பூர் மோரே - ஒரு குட்டி தமிழ்நாடு...


செம்மொழியான தமிழ் மொழியாம்... தமிழ் மொழியாம்... இன்பத் தமிழ் மொழியாம்...

தமிழின் புதிய கீதம் ஒலித்த இடம் தமிழகம் அல்ல. மோரே..

மணிப்பூர் மாநிலம் சாண்டல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் கிழக்கு எல்லைக் கிராமம்தான் மோரே. இது ஒரு மலைக்கிராமம். பூர்வீகக் குடிகளான குக்கீஸ்களுடன் தமிழர்கள், நேபாளிகள், பஞ்சாபிகள் என வசித்து வருகின்றனர். இங்கு தமிழர்கள் அதிகம் வசித்து வருவதால் சரளமாகத் தமிழ் புழக்கத்தில் உள்ளது. மோரேவின் பூர்வீகக் குடிகளும் எல்லைப்பகுதியைச் சேர்ந்த பர்மியர்களுமே தமிழில் பேசிக் கொள்வது ஆச்சரியம்.

தமிழர்கள் வந்த கதை...

இங்கு தமிழர்கள் வந்த கதை சோகம் கலந்த சுவாரஸ்யம்.அதற்குள் இந்திய சுதந்திரப்போரின் சுவடுகளும் பதிந்திருக்கின்றன. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசியப்படையில் மோரே தமிழர்களும் இணைந்திருந்ததை இங்குள்ள பாட்டிகள் கதைக்கதையாகக் கூறிவருகிறார்கள். மோரேவையும், சூரஜ்சந்த்பூரையும் இந்திய தேசியப்படை வீரர்கள் பயன்படுத்தி பிரிட்டிஷ் படையை எதிர்த்து நாகலாந்து வரை வந்து ஐ.என்.ஏ. கொடியை நாட்டியிருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது பர்மாவும் இந்தியாவின் அங்கமாகத்தான் இருந்தது. பர்மாவின் தலைநகர் ரங்கூன் வரை வியாபாரத்துக்காக இந்தியர்கள் சென்றுவர மோரே ஒரு முக்கியக் நுழைவாயிலாகச் செயல்பட்டது. இவ்வாறு வியாபாரத்துக்குச் சென்றுவரும் இந்தியர்களுக்காக மோரே தமிழர்கள் வாடகை வீடுகள் மற்றும் உணவகங்கள் நடத்தி தங்கள் வருவாயை ஈட்டிக் கொண்டார்கள். காலப்போக்கில் மோரே கிராமமாக உருவெடுத்தது.

1960களில் இங்குள்ள குக்கி பழங்குடியின மக்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் மோரே இருந்து வந்ததாக்கவும், ஷொலிம் பெயிட் என்பவர் கிராமத் தலைவராக இருந்ததாகவும் கூறுகிறார்கள் இப்பகுதி மக்கள்.

1962 களில் மியான்மரில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு இந்தியர்கள் அகதிகளாக அனுப்பப்பட்டனர். இதில் பர்மாவில் வசித்த தமிழர்கள் பெரும்பாலானோர் மோரேவில் தஞ்சம் அடைந்தனர். சென்னைக்கு கப்பல்களில் அனுப்பப்பட்ட இந்தியத் தமிழர்களிலும் பெரும்பாலோர் தங்களின் பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறைக்கு அனுகூலமான மோரேவை நாடி குடும்பம் குடும்பமாகச் செல்லத் தொடங்கினர்.


இப்படி வந்தவர்களுக்கு ஷொலிம் பெயிட் உதவிகரமாக இருந்தார். காரணம் இங்குள்ள தமிழர்கள் செலுத்திய மண் வரிதான். இந்த வரியில் குறிப்பிட்ட பங்கை அவர் எடுத்துக் கொண்டு மீதியை அரசுக்கு செலுத்தியது தனிக்கதை.

தமிழர்கள் இங்கு குடியேறிய காலகட்டத்தில், அருகில் உள்ள நாம்ப்லாங் சந்தையில் சிறிய அளவில் பண்டமாற்று வியாபாரம் நடந்து வந்தது. அங்கு தொழிலாளர்களாகப் பணிபுரியத் தொடங்கிய தமிழர்களுக்கு அவர்களது புத்திசாலித்தனமும், உழைப்பும் புதிய கதவுகளைத் திறந்தன.

கூப்பிடுகிற தொலைவில் உள்ள மியான்மரில், ஆடைகள் முதல் மளிகைப் பொருட்கள் வரை இந்திய உற்பத்திகளுக்கு ஏக கிராக்கி இருந்தது. எனவே தமிழர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினார்கள். துணிவகைகள், பாத்திர பண்டங்கள், மளிகைப் பொருட்கள் எனத் தொடங்கி மின்சாதனங்கள் உள்பட பல்வேறு பொருட்களும் வணிகம் செய்யப்படுகிறது.

மோரே ஸ்மால் டவுண் கமிட்டி...

சமீபத்தில் மோரே - மியான்மர் எல்லையில் தடையற்ற வர்த்தக மையம் அமைக்கப்பட்டது. காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரை இங்கு இருநாட்டினரும் வணிகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மியான்மரின் டம்மு பகுதிக்குள்ளும் வணிகத்துக்காக சென்று வர அனுமதி தரப்பட்டுள்ளது. 1980 ல் 'மோரே ஸ்மால் டவுண் கமிட்டி’  அமைக்கப்பட்டது.

மோரே நகரத்தின் அளவு 7.38 சதுர கிலோமீட்டர் அளவுதான். மோரேவின் மக்கள்தொகை சுமார் 30ஆயிரம். இதில் 17ஆயிரம் பேர் வரை தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நானூறு குடும்பங்கள் அடங்கிய பகுதி ஒரு வார்டாக கூறப்படுகிறது. தற்போது மோரே ஒன்பது வார்டுகளைக் கொண்டுள்ளது. 2,3,4,5,6,7 வார்டுகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.

பெண் வீட்டாருக்கு கண்டிப்பாக திருமண சீர்...

திருமண விஷயத்தில் பெண் வீட்டார்களுக்கு வரதட்சணை உள்பட எந்தப்பிரச்னையும் கிடையாது. பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்தால் மட்டுமே திருமணம். பெற்றோர்கள் கட்டாயம் செய்வது கிடையாது. அதேபோல் காதலர்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டாலும் இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமான திருமணம் நடைபெறும். மேலும் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கு கண்டிப்பாக திருமண சீர் கொடுக்க வேண்டும். திருமணம் முடிந்த அன்றே மணப்பெண் மாப்பிள்ளை வீட்டுக்கு சென்று விடுவார்.

மணிப்பூர் மாநிலத்தில் வாழும் உள்ளூர் பெண்கள் வெளிமாநிலத்திலிருந்து மணிப்பூரில் அரசாங்க வேலை, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் வேலை, மற்ற துறைகளில் வேலை செய்பவர்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவார்கள். அப்படியான திருமணங்களும் நடந்துள்ளது. இவர்கள் நமது இந்திய கலாசாரத்தைத் தழுவி நல்லவிதமாக வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக பஞ்சாபிகளும், மலையாளிகளும், தமிழர்களும் இங்குள்ள பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

மோரே மலைவாசிகள் ஆண்டுதோறும் அறுவடை நேரத்தில் அதாவது நவம்பர் மாதம் முதல் தேதியில் ‘கூட் திருவிழா’ கொண்டாடுவார்கள். ஆடிபாடி நடனம் ஆடுவார்கள். அவர்கள் சமூகப் பெண்களுக்கு அழகிப்போட்டிகளும் நடத்தப்பட்டு அழகி தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்குவார்கள்.

இதே போல் தமிழர்கள் தைத்திங்கள் நாளில் பொங்கல் விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடிவருகிறார்கள். அப்போது பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்கள். தமிழர்களின் விழாக்களின் போது மலைவாழ் மக்களின் கலாச்சார நடனமும் நடத்தப்படுகிறது. இவை தவிர தமிழர்களின் அத்தனைப் பண்டிகைகளும் இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன.

மோராவில் மலைவாழ் மக்கள் சிறிய அளவிலான 29 கிறிஸ்தவ கோவில்களை கட்டியுள்ளனர். 20 அல்லது 30 குடும்பத்தினருக்கு ஒரு கோவில் என்ற அளவில் இருக்கிறது. இவர்கள் ஒரு கோத்திரத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு என்று பிரார்த்தனை தலைவர்களும் தனித்தனியாக இருக்கிறார்கள்.

இயற்கையோடு இணைந்து வாழும் இம்மக்களின் சுவாரஸ்யமான வாழ்க்கைக்கு இடையே பிரச்னைகளும் இல்லாமல் இல்லை. இப்பகுதியின் மற்றொரு பூர்வீகக்குடிகளான நாகாக்கள் மோரே தங்களுக்குத்தான் என்று போர்க்கொடி பிடித்ததில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளது. தமிழர்களுக்கும், குக்கீஸ்களுக்கும் இடையே கூட மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. தற்போது இவை மறக்கப்பட்டு எல்லோரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றன.

மோரே தமிழ்ச்சங்கம்...

தமிழர்கள் பெருகத் தொடங்கியதும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி 1967ல் தமிழர் நலச்சேவா சங்கம் தொடங்கப்பட்ட நிலையில், மூன்று மாதம் கழித்து ஜூலை 15 ம் தேதி புதிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, மோரே தமிழ்ச்சங்கமாக செயல்படத் தொடங்கியது.


மோரே தமிழ்ச்சங்கத்தின் கீழ் வார்டு வாரியாக முத்தமிழ் மன்றம், சன்ரைஸ் யூத் கிளப், பேச்சுலர் வெல்ஃபர் யூத் கிளப், லிப்ரா பீபுள் கிளப் ஆகிய அமைப்புகள் உருவாக்கப்பட்டு பொதுப்பணிகளை தமிழ் இளைஞர்கள் செய்து வருகின்றனர். பெண்களுக்கு இலவச தையல் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.  இவர்களின் முயற்சியில் பள்ளிக்கூடத்துக்காக ஒரு இடம் வாங்கப்பட்டு நேதாஜி நினைவு ஆங்கில உயர் நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு இன்று வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டபோது மோரே தமிழ்ச்சங்கம் சார்பில் ரூ.3.60 லட்சம் வழங்கப்பட்டது. 2008-ல் பர்மாவில் நர்கீஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண உதவி அளித்துள்ளனர்.

எப்படி செல்வது மோரேவுக்கு?

மணிப்பூர் மாநிலத்தின் கடைசி எல்லைக் கிராமம் தான் மோரே. அங்கு நாம் செல்ல முதலில் மணிப்பூர் தலைநகர் இம்பால் செல்ல வேண்டும். விமானம் மூலமாகவும், ரயில் மூலமாகவும் இம்பால் செல்ல முடியும். விமானத்தில் செல்வதானால் கல்கத்தாவுக்கு முதலில் செல்ல வேண்டும். சென்னை - கொல்கத்தா 2 மணிநேரம் விமானப்பயணம். கொல்கத்தாவிலிருந்து இம்பாலுக்கு பயண நேரம் ஒன்றரை மணிநேரம்.

இம்பாலிலிருந்து மோரே 110 கி.மீட்டர். இதற்கு தனியார் வாகனத்தில் தான் செல்ல முடியும். ரயிலில் செல்ல சென்னையில் இருந்து செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் நாகாலாந்து மாநிலத்தின் டிமாப்பூர் வரை ரெயில் (திப்ருகர் எக்ஸ்பிரஸ்) இயக்கப்படுகிறது. அங்கிருந்து இம்பாலுக்கு பஸ் உள்ளது. இம்பாலிலிருந்து மோரேவுக்கு தனியார் வாகனங்களில் செல்லலாம்.

வாய்ப்பு உள்ளவர்கள் ஒருமுறை மோரே போய் வரலாமே...

மேற்கு வங்காளத்தில் ரத யாத்திரை என்ற பெயரில் பாஜக மதக் கலவரம்.. விபச்சார ஊடகங்கள் மூடி மறைக்கும் செய்தி...


பாஜக மோடியும் தமிழின அழிப்பு திட்டமும்...


தமிழா.. தனித் தமிழர்நாடு மட்டுமே தீர்வு... விழித்துக்கொள்...


எதிர்காலத்தில் இந்திய ஒன்றியத்தில் இருந்து தனி நாடு கேட்கப் போகும் முதல் இனமாக தமிழினம் தான் இருக்கும் என்பதை மத்திய ஆட்சியாளர்கள் ஊகித்து விட்டார்கள்...

அவனுக்கு அப்படி தனிநாடு கிடைத்து விட்டால் அதன் பிறகு இந்தியாவின் மற்ற தேசிய இனங்களும் தனி நாடு கேட்பார்கள், அதற்கு தமிழர்களும் துணை செய்வார்கள்..

ஆதலால், தமிழனுக்கு இப்போதே நாடு இல்லாமல் செய்து விட வேண்டும்.

தமிழ்நாட்டை அவனிடம் இருந்து மொத்தமாக வளர்ச்சி என்ற பெயரால் கபளீகரம் செய்து ஆக்கிரமித்து , அவனை உள்நாட்டிலேயே அகதியாகி, மற்ற மாநிலத்துக்குள் தஞ்சம் பிழைக்க ஓட செய்து விட வேண்டும்.

நாடற்று போனால் பின்பு எதை தனி நாடு என்று அவன் கேட்க முடியும் ?

அதனால் தான் தமிழனின் விவசாயத்தை, பெரு நிலத்தை, கடலை, மண்ணை எல்லாம் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரால் கைப்பற்றிக் கொண்டு தமிழ் மக்களை விரட்டி அடிக்க  இந்திய அரசு முனைப்புடன் இறங்கி இருக்கிறது.

தமிழர்கள் இதை உணர்ந்துக் கொள்ள வேண்டும். இந்திய அரசை  எதிர்த்து களமாட முன்வர வேண்டும். இல்லையேல் அழிந்தோம், அழிந்தோம், அழிந்தோம். இது உறுதி...

இந்த கப்பலை நியாபகம் இருக்கிறதா..?


போருக்கு தயாராகி வரும் ரஷ்யா...


ஏதேன் தோட்டம் எங்கே..?


விவிலியத்தில் ஏதேன் தோட்டம்...

ஏதேன் தோட்டம் மனிதனுக்கு இறைவன் கொடுத்த முதல் தங்குமிடம்; அங்கு அவர்களுக்கு அனைத்தும் கிடைத்தது; அது மண்ணக சொர்க்கம்; இறைவன் மனிதனோடு வாழ்ந்த இடம்.

ஏதேன் தோட்டம் - ஏதேன் தோட்டத்தில் எல்லாவகையான உயிரினங்களும் மரங்களும் கொடிகளும் இருந்தன. அங்கு தான் இறைவன் முதல் மனிதனான ஆதாமை மண்ணிலிருந்து உருவாக்குகிறார்; அவனிலிருந்து பெண்ணை உருவாக்குகிறார். அங்கே மிக முக்கியமான இரு மரங்கள் இருந்தன.

நல்லது தீயது அறியும் மரம்
வாழ்வின் மரம்.

நல்லது தீயது அறியும் மரத்தின் கனியை உண்ணக்கூடாது என "எல்" கூறியிருந்தார். எல் என்றால் இறைவன்; ஆனால் பாம்பு ஏவாளை ஏமாற்றியது; இறைவனை போல ஆகலாம் என ஆசை வார்த்தை காட்டியது; அவள் அந்த மரத்தின் கனியை உண்டாள்; அவளது துணைவனான ஆதாமுக்கும் கொடுத்தாள் அவனும் உண்டான்.

மனிதனின் கீழ்படியாமையை கண்ட இறைவன் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டிவிட்டார்.

மனிதன் மீண்டும் வந்து வாழ்வின் மரத்தில் கைவைத்துவிட கூடாது என்பதற்காக , இரு சேராபீம்களை காவலுக்கு வைத்தார்; சேராபீம் வானதூதர்களில் ஒரு வகையினர்.

விவிலியத்திற்கு முன்பு...

இக்கதை ஏதோ கிறித்தவருக்கோ, யூதருக்கோ , இசுலாமியருக்கோ சொந்தமான கதை அல்ல. இவை இவற்றிகெல்லாம் முந்தையது; சுமேரியாவில் இதை போன்ற ஒரு கதை உள்ளது; ஒவ்வொரு சமூகமும் இச்செவி வழிக்கதையை தங்களது வாழ்க்கையோடு பொருத்து திரித்துக் கொண்டனர்.



உண்மையில் இது என்னவாக இருக்கும்?

மெய்யியல் - உடலியல் பாதை இதற்கு பதில் தரும்.

மறுபடியும் விவிலியம்..

தொடக்கத்தில் ஏதேன் தோட்டத்தில் மனிதனோடு இருந்த இறைவன்; இசுராயேல் மக்களின் வரலாற்றில், பின் உடன்படிக்கை பேழையில் வழியாக உடன் இருந்தார்.

ஆண்டவருடன் பேசும்படி மோசே சந்திப்புக் கூடாரத்தினுள் சென்றார். இரு கெருபுகளிடையே உடன்படிக்கை பேழையின் மேலிருந்த இரக்கத்தின் அரியணையிலிருந்து பேசிய குரலை அவர் கேட்டார்; ஆண்டவர் அவருடன் பேசினார்.

எண்ணிக்கை 7:89.

கெருபு தான் சேராபீம். இந்த உடன்படிக்கை பேழை படத்தை பாருங்க.

உடன்படிக்கை பேழை.

சரி. எப்படியோ இரு வானதூதர்களுக்கு இடையில தான் இறைவன் மறைந்திருக்கிறார்.

இந்த கெருபு (அ) சேராபீம் (அ) வானதூதர் இவற்றை போன்றே எகிப்துல ஒன்று உள்ளது அதுதான் ஆமென் கொம்பு, கிப்போகம்பசு.


ஆமென் கொம்பு..

கிப்போகம்பசு என்பது என்பது நமது தலையில் இருக்கும் ஒரு உறுப்பு. படத்தை பாருங்க இரு சேராபீம், ஆமென் கொம்பு தெரியுதா என..

இதற்கு நடுவுல என்ன இருக்கு ? எப்படி அதில் இறைவன் பேசுவார் ?

இந்த இரு சேராபீம்களும் தான் ஏதேன் தோட்டத்தை , வாழ்வின் மரத்தை பாதுகாக்குறாங்க.

அது தான் பீனியல் சுரப்பி என்ற மூன்றாம் கண்.

மூன்றாம் கண்... மூன்றாம் கண்ணை திறப்பதின் வாயிலாக நாம் பிரபஞ்ச நினைவுடன் தொடர்பு கொள்ள முடியும் ; அது  தான் இறைவன்; இதை வரை உலகம் அனுபவித்த அனைத்தும் அந்த நினைவில் தான் உள்ளது. அதில் நாம் இணைந்தால் அந்த முழு அறிவும் நமக்கு சொந்தமாகும்.


வாழ்வின் மரத்தை அடைவதன் வாயிலாக மரணமில்லாமல் வாழலாம்.

நமது நாட்டில் இது போன்ற நிறுவன மாக்கபட்ட தத்துவங்கள் சமண மதத்தால் தான் வந்தன.

பழங்குடிகளில் இது இயல்பாக காணப்படும் அறிவு; ஒவ்வொரு குழுவிலும் ஒரு இறைவனோடு பேசுபவர் இருப்பார்.

பழங்குடிகள் வாழ்வியலுக்கு பின் திணிக்கபட்ட மதங்கள் அந்த இறைவனோட பேசுபரின் இடத்தை பிடித்தன; அப்பழங்குடிகளுக்கு துரோகம் செய்தனர். 300 பருத்தி வீரர்கள் படத்தில் இதை பற்றி காணலாம்.

அதோடு இலுமினாட்டிகள் ஒரே உலக மதத்தின் கருவாகவும் இதை போன்ற மெய்யியல் கருத்துக்கள் தான் இருக்க போகின்றன.

மூன்றாம் கண்ணை பற்றி விரிவாக அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்...

30/03/2018

இதோ அடுத்த போராட்டம் தொடங்கியது...



ஸ்டெர்லைட்.ஐ தொடர்ந்து தூத்துக்குடி dcw ரசாயன தொழிற்சாலை...

திருச்செந்தூா் அருகில் ஆறுமுகநோியில், ஆசியாவிலேயே இரண்டாவது பொிய (ஆசிட்) ரசாயன நிறுவனமான (DCW) தாரங்கதாரா செயல்பட்டுவருகிறது,.



இதன் ரசாயன கழிவுகளை மேற்படி நிறுவனம் 30 க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நிலத்தில் தோட்டம் அமைத்து அவற்றில் தேக்கி வருகிறது...

இதன் விளைவு, சுற்றுபுற கிராமங்களில், குடிதண்ணீா், வீட்டு உபயோகம் மற்றும் விவசாயத்திற்கு எங்கு கிணறு தோண்டினாலும் மேற்படி ரசாயனம் இலவசமாக பொங்கி வருகிறது,.



மேற்படி நிறுவனத்தின் சட்ட விரோத ரசாயன தொட்டங்களை, தடைகளை தாண்டி கிராமத்தாா்களின் உதவியோடு நோில் சென்று பாா்வையிட்ட போது எடுத்த படம்...