31/03/2018

இமயமலையை விட்டுவிட்டு, ஏன் தேனியில் அமைக்கிறார்கள் எனக்கேட்டால்...


இமயமலை-இளையமலை, அங்கிருப்பது படிமப்பாரை, ஆனால் தனி பொட்டிபுரத்தில் இருப்பதோ கடினப்பாறை, எனவே தான் இப்பகுதியை தேர்வு செய்தோம் என்கிறார்கள்.

படிமப்பாறையை காஸ்மிக் கதிர்கள் ஊடுருவிவிடும் என்பதற்கு எந்த அறிவியல் சான்றுமில்லை. படிமப்பாறை கதிர் வடிகட்டியாக, பாதுகாப்பு கவசமாக இருக்காது என்பதற்கு உறுதியான சான்றெதுவும் இல்லை.

சரி கடினப்பாறை தான் வேண்டும், அதற்க்கு மேற்கு தொடர்ச்சி மலை தான் பொருத்தமானது என்றால், இந்த மேற்கு தொடர்ச்சி மலை தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடகத்தை கடந்து கோவா வரையிலும் உள்ளது. அங்கு இதே வகை பாறை தான் உள்ளது.

அந்த இடங்களை எல்லாம் விட்டுவிட்டு, தமிழகத்தை இந்திய அரசு தேர்ந்தெடுத்திருப்பதற்கு அடிப்படைக் காரணம் இனப்பகை தான்.

-தோழர் கி.வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.