27/03/2018

பிரம்மத்தை நோக்கி - 4...


இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருள்களையும் போல நீங்களும் ஒரு பொருள்தான். ஆம் இந்த பிரபஞ்சத்தினுடைய பொருள்.

உங்களில் வாழ வேண்டும் என்ற விருப்பமே மனமாக விருத்தியாகி செயல்படுகிறது. இந்த மனம் உருவான வரலாறு, தன் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவது எது? தன் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பது எது? என்பதை பற்றிய தகவல் தொகுப்பே மனம்.

மனம் இதன் அடிப்படையிலேயே செயல்படுகிறது. உங்களின் மனதில் எழும் எல்லா சிந்தனைகளும் நினைவுகளும் உங்களின் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டே செயல்படுகிறது.

வாழ வேண்டும் என்கிற ஆசை இல்லாத போது உங்கள் மனம் செயல்பட மறுப்பதை நீங்கள் உணர்வீர்கள். வாழும் ஆசை இருக்கும் வரை மனதின் ஓட்டத்தை நிறுத்துவது கடினம்.

நாம் வாழும் ஆசையே மனமாக செயல்படுகிறது. நான் யார்? நான் என்பது இந்த உடலை உயிரை பாதுகாக்கும் ஒரு தன்முனைப்பு இயக்கம்.

மனிதர்களுக்கு மரங்களுக்கு புழு பூச்சுகளுக்கு என எல்லாவற்றிற்கும் இந்த தன்முனைப்பு இயக்கம் உள்ளது. சரி இந்த உடல் உயிர் சுமார் பத்து வருடங்களுக்கு தாங்கும் என வைத்து கொள்வோம்.

அதுவரைக்கும் உண்டான பாதுகாப்பிற்கு தேவையான பொருளாதார நிலை, குடும்ப நிலை, சமூக நிலை எல்லாம் சரி செய்தாகிவிட்டது, பாதுகாப்பு சூழல் நிறைவாகிவிட்டது.

இனி இவன் இங்கு வந்த நோக்கத்தை கவனிக்க வேண்டும். இவன் இங்கு வந்தது இவன் விரும்பி அல்ல. இங்கு இவனாக வந்தது பிரபஞ்ச சக்தியே. இந்த இயற்கையோ நிறைவை நோக்கியே செயல்படுகிறது.

சரி நான் அடுத்து செய்ய வேண்டியது என்ன? முன்று நிலைகளான பிரபஞ்ச நிலை நமது மனநிலை நமது மனநிலையை தண்டிய பூரண நிலை.

இவற்றில் நாம் தியானத்தில் அடைவது நிறைவான பூரண நிலை. இவற்றை எல்லாம் கடந்து நாம் பூரண சமநிலையில் லயிப்போம். பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.