முதல் கட்டமாக அதிகாலை 3.00 மணிக்கு எழுந்து 3.00 மணி 5 நிமிடத்திற்குள் புருவ மத்தியில் தீபம் எரிவது போன்ற பாவனா தியானத்தைப் பழக வேண்டும். அதன்பின் மூச்சுப் பயிற்சியோடு காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். காயத்ரி மந்தரம் மூச்சுப் பயிற்சியுடன் ஜெபிக்கும் விதம் சற்று சிரமமானது. சிரமத்தைப் பாராது இப்போது சொல்கிறபடி பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.
பஞ்சபாத்திரத்தில் உத்ரணியில் இருந்து மூன்று முறை தீர்த்தம் எடுத்து சாப்பிட்டபின் கண்களையும் இடது நாசியையும் மூடி மனதிற்குள் ஓம் ஓம் ஓம் என மூன்று முறை ஜெபிக்க வேண்டும். இதில் ஒவ்வொரு முறை பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் போதும் கொஞ்சம் கொஞ்சமாக சுவாசத்தை உள் இழுக்க வேண்டும்.
உள் இழுத்த சுவாசத்தை கும்பகம் செய்து ஓம்பூ – ஓம்பூவ – ஓம்ஸ்வ – ஓம்மஹ – ஓம்ஜன – ஓம்தவ – ஓம்ஸத்யம் – தத்ஸவித்வரேன்யம் – பார்கோ தேவஸ்ய - தீமஹி - தியோன - பிரசோயாத் – ஒம் ஆபோஜ் யோதி - ரயோங் கிருதம் – ப்ரக்ம – பூர்பூவ- ஸ்வரோம் என்று மனதிற்குள் முழுமையாகச் சொல்லி முடிக்கம் வரையில் மூச்சை நிறுத்த வேண்டும்.
பின்பு வலது நாசியை மூடி உள்ளிருக்கும் காற்றை இடது நாசி வழியாக வெளியிட வேண்டும். அதன் பின்னர் வலது நாசியை மூடி முன்பு சொன்னபடி காற்றை உள் இழுத்து மேலே சொன்ன சூட்சம காயத்ரியை முழுமையாக மனதிற்குள் சொன்னவுடன் பழையபடி இடது நாசியை மூடி வலது நாசியில் காற்றை வெளியிட வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக ஒன்பது முறை செய்ய வேண்டும். இதுவே வேதகால சந்தியாவந்தனம் ஆகும். இதை செய்யும்போது கண்டிப்பாகக் கழுத்தில் ருத்ராட்சம் அல்லது துளசி மாலை இருக்க வேண்டும். கிழக்கு நோக்கி அமர்ந்து சூரியனை வரவேற்பது போல் இந்தப் பயிற்சியை வெட்ட வெளியிலோ மொட்டை மாடியிலோ செய்வது சாலச்சிறந்தாகும்.
இதைச் செய்து முடித்தபின் 10 நிமிடம் உடலைத் தளர்த்தி இலகுவான முறையில் அமரவும். அதன்பின் பத்மாசனத்தில் அமர்ந்து முதுகை நிமிர்த்தி விழிகள் இரண்டையும் மூக்கின் நுனியைப் பார்ப்பதாக வைத்து ஆழமாக மூச்சை உள் இழுக்க வேண்டும். அப்படி உள் இழுக்கும் போது ஹோ என்ற ஒலியை மனதிற்குள் உச்சரிக்க வேண்டும்.
பின்னர் நிதானமாக முழுமையான காற்றையும் வெளியிட வேண்டும். நிதானமாக காற்று மூக்கு வழியாக வெளிவருமபோது ஹம் என்ற ஒலியை எழுப்ப வேண்டும். இப்படிச் செய்வதற்கு ஹோ ஹம் செய்தல் என்ற பெயர். இப்படி 27 முறை செய்ய வேண்டும். இதைச் செய்து முடித்த பின் மந்திர சித்தியும் அமானுஷ்ய சித்தியும் தரும் மந்திரத்தை அதாவது ஓம் யத் ரத் ஸத் வஷீட் ஸ்வாஹா என்ற பீஜத்தை 1008 முறை மனதிற்குள் உரு ஏற்ற வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக 2 மண்டலங்கள் செய்து வரவேண்டும். இப்படிச் செய்யும் போது மட்டும்தான் முடிறப்படியான மீடியமாக ஒருவன் உருவாக முடியும். இப்படி உருவான பின்னர் ஆவிகளை அழைத்துப் பேசுவதை நடைமுறைப் படுத்த வேண்டும். அப்போதுதான் தீய ஆவிகள் அருகில் வராமல் நாம் அழைத்த புண்ணிய ஆவிகள் மட்டுமே வந்து பேசும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.