மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 28.02.2018-ம் தேதியன்று காவல்துறை சார்பில் குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் விதமாக காவல்துறை துணை தலைவர் திரு.பிரதீப்குமார் IPS., அவர்கள், "COPS EYE" என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.
வாகனசோதனையின் போது சந்தேகத்திற்குரிய நபர்கள் பிடிபட்டால் அவர்களை காவல்நிலையம் அழைத்துச்சென்று புகைப்படம் எடுத்து கைரேகையை பதிவு செய்து அவற்றை ஒப்பிட்டு பார்த்து குற்றப்பதிவேடுகளில் சரிபார்த்து குற்றவாளிகளை உறுதிசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த COPS EYE என்ற செயலியின் மூலம் சந்தேகத்திற்குரிய நபர்களின் புகைப்படங்களை பதிவிட்டால் அவர் குற்றவாளியா என்பதனை 93% உறுதிசெய்து விடும்.
மேலும், காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இச்செயலியில் 16 வகையான குற்றச்செயல் புரிந்தோரின் விபரங்களை உள்ளடங்கியுள்ளது. காவல் சோதனைச்சாவடிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனுடன் இந்த செயலியை இணைத்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை எளிதாக அறிந்து கொள்ளலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.