05/04/2018

அமானுஷ்யம் - டுமாஸ் கடற்கரை, குஜராத் இந்த புகழ்பெற்ற சுற்றுலாத்தளமும் ஆவி திரிகின்ற இடமாக கருதப்படுகிறது...


இரவு நேரத்தில் இந்த கடற்கரைக்கு செல்வதை தவிர்க்கவும். காரணம், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, பலர் இங்கே தொலைந்து போயுள்ளனர். இந்த கடற்கரையை முன்பொரு காலத்தில் மனித சடலங்களை எரிக்க இந்துக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

டவ் மலை, மேற்கு வங்காளம் குர்சியாங் என்ற இடத்தில் உள்ள இந்த மலையில் உள்ள பள்ளியிலும், காட்டிலும் பேய் நடமாட்டம் இருக்கிறது என நம்பப்படுகிறது. இங்கே நடந்துள்ள பல கொலைகளும் அமானுஷ்யங்களும், இங்கே உள்ள மக்களிடம் பீதியை கிளப்பியுள்ளது.

செயின்ட் மார்க்ஸ் சாலையில் உள்ள பேய் வீடு, பெங்களூரு இந்தியாவில் ஆவி நடமாடும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கே மர்மமான முறையில் கொலை செய்யப்பட சின்னப்பெண் மற்றும் அங்கே நடக்கும் அமானுஷ்ய செயல்கள் இந்த இடத்தைப் பற்றி பல கதைகளை கிளப்பியுள்ளன.

டெல்லி கண்டோன்மென்ட், டெல்லி டெல்லியில் ஆவி நடமாடும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கே உள்ள அடர்ந்த பச்சை பசுமையான காட்டில் பேய் நடமாட்டம் உள்ளதென்று நம்பப்படுகிறது. காரணம், அங்கே வெள்ளை நிற சேலையில் ஒரு பெண் உடன் பயணிக்க உதவி கோருவதை பலர் கண்டுள்ளனர். அப்பெண் உங்கள் பின்னாலேயே ஓடி வந்து உங்களை முந்தியும் செல்வாளாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.