30/06/2018

யாரிடமும் சொல்லக்கூடாது.. மிரட்டி மிரட்டியே பெண் போலீஸ் மகளை 5 மாதமாக பலாத்காரம் செய்த துணை கமிஷனர்...


மகாராஷ்டிராவில் பெண் போலீஸ் ஒருவரின் மகளை துணை கமிஷனரே மிரட்டி மிரட்டி 5 மாதங்களாக மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் நாள் அதிகரித்து வருகிறது. சிறுமிகள், இளம் பெண்கள், மூதாட்டிகள் என்ற பாகுபாடின்றி பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன.

உலகில் பெண்களுக்கு சற்றும் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது. இதனை மத்திய அரசு மறுத்துள்ளபோதும் காவல்துறையில் பணியாற்றுபவரின் குழந்தைகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. துணை கமிஷனர்மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் துணை கமிஷனராக பணியாற்றி வருபவர் ராகுல் ஸ்ரீராம். இவருக்கு பெண் போலீஸ் ஒருவர் பழக்கமானார். சகஜமாக பழகிய பெண்இந்நிலையில் மகளின் வேலை தொடர்பாக ராகுல் ஸ்ரீராமிடம் பேசிய அந்த பெண் போலீஸ் தனது 23 வயது மகளை அவருக்கு அறிமுகம் செய்துள்ளார். அம்மாவுக்கு தெரிந்தவர்தானே என துணை கமிஷனருடன் சகஜமாக பழகியுள்ளார் அந்த 23 வயது போலீஸின் மகளை அடைய திட்டமிட்ட துணை கமிஷனர் உனக்கு வேலை வாங்கி தருகிறேன் என உறுதியளித்துள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும் அவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். மிரட்டி பலாத்காரம்தனது ஆசையை நிறைவேற்ற எண்ணிய துணை கமிஷனர் ராகுல் ஸ்ரீராம், கடந்த பிப்ரவரி மாதம் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தனது அம்மா உட்பட வேறு யாரிடமுடம் இதுகுறித்து மூச்சுவிடக்கூடாது என மிரட்டியுள்ளார்.

மிரட்டி மிரட்டியே...

இதனால் மிரண்டு போன அந்த பெண்ணும் யாரிடமும் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே நொந்துள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட ராகுல் ஸ்ரீராம் தேவைபடும் போதெல்லாம் அந்த பெண்ணை மிரட்டி மிரட்டியே தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கதறிய மகள்கடந்த 21ஆம் தேதியும் துணை கமிஷனர் ராகுல் ஸ்ரீராம் தனது காம வேட்டையை அரங்கேற்றியுள்ளார். ஒரு கட்டத்துக்கு மேல் இந்த வேதனையை தாங்க முடியாத மகள் இதுகுறித்து தனது தாயாரிடம் கூறி கதறியுள்ளார். துணை கமிஷனர் மீது வழக்குப்பதிவு இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் போலீஸ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசாரும் துணை கமிஷனர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். லீவில் எஸ்கேப் இதனையறிந்த ராகுல் ஸ்ரீராம் விடுப்பு எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் இந்த புகார் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்...

சேலம் கலெக்டர் ரோகினி வரிசையில் ஸ்டாலினும் - எடப்பாடியும்...


பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்...


மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்?

தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது.

ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.

இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது.

அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்.

அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?

தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே.

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "புவிக்குஇணை" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது.

இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு...

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது. சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்...

திருந்தாத மக்கள்...


திமுக சொம்பு சுப.வீ யும் சாதி ஒழிப்பும்...


சாத்தான் வேதம் ஓதுகிறது...

சுபவீ என அன்போடு அழைக்கப்படும் வீரபாண்டிய கட்டபொம்மன் செட்டியார், தன்னை ஜெயலலிதா சிறைக்கு அனுப்பிய காழ்ப்பிலும், வெளியே எடுக்க கருணாநிதி உதவிய செஞ்சோற்றுக் கடனுக்காகவும், கருணாநிதிக்கு ஜால்ரா போட ஆரம்பித்தார்...

அப்போதைய ஜால்ரா சத்தம் எதுவரை போனது என்றால், தலைவர் பிரபாகரனின் அன்னை பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது, அவரை சிகிச்சை பெற விடாமல் இந்திய அரசும், கருணாநிதியும் திருப்பி அனுப்பினார்கள்... அப்போது, புலம் பெயர் தமிழர்கள் சிலர் இவரிடம் தொலைபேசியில் கருணாநிதியின் மூலம் பார்வதி அம்மாவுக்கு உதவி செய்யுங்கள் எனக் கேட்டபோது, இப்போது தான் என்னை கண் தெரிகிறதா எனக் காட்டமாகக் கேட்டாராம்..

இதே புலம்பெயர் தமிழர்கள், உன்னை ஈழ ஆதரவாளன் என்று நம்பி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் அழைக்கவில்லையா? அவர்கள் வீட்டுச் சோற்றை நீ தின்றதில்லையா? அப்போது இனித்ததா? இப்போது மட்டும் கசக்கிறதா சுபவீ?

தனிப்பட்ட பிரச்சனைகளையும் இன நலனுக்கான பிரச்சனைகளையும் பிரித்தறிந்து பார்க்கத் தெரியாத சுயநலமி சுபவீ. இனநலன் குறித்தும் சாதி ஒழிப்பு குறித்தும் ஒயாமல் ஓதிக்கொண்டிருக்கிறது.

வேட்டியோடு என்ன விரோதம்?

நந்தன் வழி இதழில் இவர் ஆசிரியராக இருந்த போது. தான் ஏன் வேட்டி கட்டுவதில்லை? ஏன் மீசை வைத்துக் கொள்கிறேன்? என்பதற்கு விளக்கம் கொடுத்தார்.

அதாவது, வேட்டி கட்டிக் கொள்வதும், மீசை மழித்து இருப்பதும், இவர் சாதியான நாட்டுக்கோட்டை செட்டியாருக்கான அடையாளங்களாம்.

அதனால் சாதி ஒழிப்பு போராளியான இவர் அடங்க மறுத்து. மீசை வைத்துக் கொண்டும். பேண்ட் போட்டுக்கொண்டும் இவர் சாதி ஒழிப்பை காட்டுவாராம்.
சுபவீயின் சாதி ஒழிப்பு வீரம் மீசை மயிரோடு நின்று விட்டது.

ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு தன் பெண்ணை கொடுத்தோ, பெண் எடுத்தோ காட்ட முடியாத சாதி ஒழிப்பு போராளி சுபவீ..

அடுத்தவன் வீட்டுப் பெண்களை மட்டும் கொடுக்கச்சொல்லும் புரோக்கர் வேலைகளை இனி விட்டுவிட வேண்டும்...

கன்னட ஈ.வே. ராமசாமியின் தமிழ்த் துரோகம்...



வீரப்பனார் எனும் எல்லைக் காவல் தெய்வம்...


சுள்ளி பொறுக்க காட்டிற்குள் சென்று வழி தெரியாமல் போய்விட்ட பெண்களை பார்த்தால்...

நீ ஏம்மா இங்க எல்லாம் வர? பொலிசுகாரனுங்க கண்ணுல பட்டுட போற...

ஏதாவது ஆடு வளத்து பொழச்சிக்கோ
என்று கையில் இருக்கும் காசை கொடுத்து காட்டு எல்லை வரை வந்து விட்டு விட்டு போவாராம் வீரப்பன்..

வீரப்பன் அவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள்...

1. காவிரிப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து முடிவுகூற வேண்டும்.

2.வாச்சாத்தி, சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆகியோருக்குநஷ்டஈடு தரவேண்டும்.

3. தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கானசட்டம் இயற்ற வேண்டும்..

4. பெங்களூரில் மூடப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டும்.

5.தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு உறுதியளித்தபடி நிவாரணம் வழங்க வேண்டும்.

6.தமிழக சிறைகளில் உள்ள தமிழ் தேசிய விடுதலைப் படை, தமிழ் விடுதலைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 5 பேரை தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்...

துரோகங்களாலும் சூழ்ச்சிகளாலும் மட்டுமே தமிழர்களை வீழ்த்தினீர்கள் என்று வரலாறு காட்டுகிறது திருட்டு திராவிடர்களே...

இயற்கையின் அழகு...


வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும்...


சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று
வேம்பு சிறப்பிக்கப்படுகிறது...

இப்படிப்பட்ட வேம்பு மருந்தாகித்த தப்பா மரம் என்பதை சித்தர்கள் அறிந்தனர். அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக்
கொள்கின்றனர். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள்
கண்டறியப்பட்டுள்ளன.

இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக்
கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie
போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப
எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.

லக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும்
வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.

வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.

வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக்
கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.வேப்ப
எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.

எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர்.

சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று
விடுவதையும் கண்டுள்ளனர்.

நிலத்தின் அமிலத் தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின்
வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது.வேப்பம்
பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக் கட்டுப்படுத்துவதாக
சித்திக் ஆலம் என்னும் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

சுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது.

காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர்.

வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.

வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும்மேற்பட்ட
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

வேறு பெயர்கள்...

அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி.
மருத்துவப் பண்புகள்

இலை:

1)புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.

2)வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.

3)வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.

4)வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.

பூ.. பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.

காய் + பழம்.. தோல் நோய் தீரும்.

விதை...

1)மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.

2)விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.
நெய்

1)துஷ்ட புண்கள் தீரும்.

2)ஆராத இரணங்கள் தீரும்.
வேப்பம் பட்டை

1)வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.

2)கஷாயம் குட்டம் தீரும்.
அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை நிர்ணயிக்கும் Chromosomes சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. வேம்பு Chromosome களை பாதிக்காமல் நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

பிசின்...

1)மேக நோயைப் போக்கும்.

குறிப்புகள்...

பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.

100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில்
சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.

பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல்
பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.
வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில்
கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து
வளரும்.

வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை
உடையதாகும். விந்து கட்டும்
வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப்
பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.

நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம்.

என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல்
உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது...

பாஜக மோடியின் நான்கான்டு சாதனை...


டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி...


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இது தவிர இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரும் சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது...

சேலம் 8 வழிச்சாலை வேண்டாம் என்பதற்காக போராடும் மக்களின் கேள்வி...


பறையர்களை எவ்வாறு அழைப்பது?


தலித் என்று அழைக்கலாமா?

ஓ அழைக்கலாமே...

சிறைக்கம்பிகளை எண்ணவேண்டும் என்ற ஆசை இருந்தால் தாராளமாக அழைக்கலாம்.

1. அரசாணை நிலை எண். 198,
சமூக நலத்துறை, நாள் 21-03-1981..

2. அரசு கடிதம் எண். 24024/ஆதிந-2/1998-2 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 15-03-1999..

3. அரசாணை (ப) எண் 69இ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 05-04-1999..

ஆகிய ஆவணங்களின் படி
"தாழ்த்தப்பட்டோர்"
"தாழ்த்தப்பட்ட மக்கள்"
"தலித்"
"தலித்துகள்"
"தலித் மக்கள்"
"தலித் சாதி"
"தலித் சமுதாயம்"

போன்ற இழிவுப் பெயர்களால்  அழைக்கவோ, உச்சரிக்கவோ, எழுத்தால் எழுதவோ, ஆவணங்களில் பதிவு செய்யவோ கூடாது என்று அரசே ஆணை பிறப்பித்துள்ளது.

ஆக தலித், தாழ்த்தப்பட்டோர் போன்ற சொற்களை பயன்படுத்துதல் சட்டப்படி குற்றம் ஆகும்.

ஆதி திராவிடர் என்று அழைக்கலாமா?

1918 ல் திராவிட மகாஜன சபை ஆவணங்களில் பறையர், பஞ்சமர் போன்ற பெயர்களை நீக்கி 'ஆதி திராவிடர்' என்று குறிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது.

மூன்றாண்டுகள் பரப்புரையிலும் ஈடுபட்டது.

1921ம் ஆண்டுக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தமிழ்நாட்டளவில் பரவலாக சுமார் 15,025 பேர் தங்களை 'ஆதி திராவிடர்கள்' என்று சொல்லிக்கொண்டு, குடி மதிப்பீட்டுக் கணக்கேட்டில் அதை ஏறும்படி செய்தனர்.

ஆனால் 1921ம் ஆண்டு குடிமதிப்புக் கணக்கெடுப்பின்படி,சென்னை மாகாணத்தில் SC/ST பிரிவினரின் எண்ணிக்கை 63,72,074 ஆகும்.

இவர்களில் சுமார் 15,000 பேர்தான் ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள முன்வந்தனர்.

அதாவது ஆயிரத்தில் ஒருவர் கூற 'ஆதி திராவிடர்' என்று பதியவில்லை.

இது, தமிழ்நாட்டு பட்டியல் சாதியாரும் பிறமாநிலத்தாரைப் போல ‘திராவிடர்’ என்னும் பெயரை விரும்பவில்லை என்பதையே புலப்படுத்தியது.

ஆக ஆதிதிராவிடர் எனும் பெயர் அவர்கள் விரும்பிய ஒன்று அல்ல.
திணிக்கப்பட்ட ஒன்று.

பறையர்களை பலமுறை சாதி வெறியுடன் கேவலமாகப் பேசியுள்ள ஈ.வே.ரா இதுபற்றி என்ன கூறியுள்ளார்.

( விடுதலை- ஞாயிறு மலர் 21.8.1994
ஆசிரியர் கேள்வி- பதில் பகுதி)..

கேள்வி: திராவிடநாடு திராவிடருக்கானால் ஆதி திராவிடர்களுக்கு என்ன லாபம்?

பெரியார்: லாபம் இல்லை. நட்டம் தான். ஆதி என்ற இரண்டு எழுத்துகளை வெட்டியெறிந்து விடுவோம்.

அதாவது அவர்கள் திராவிடர்களாக இருந்தால் போதுமாம்.ஆதி குடிகளாக இருக்கக்கூடாதாம்.

ஆகவே பறையர் பெருமக்களை அவர்களின் சமூகத்தைக் கொண்டு குறிக்க பறைய'ர்' என்று மரியாதையாக அழைப்பதே முறை.

அனைத்துப் பிரிவினரையும் சமூகத்தால் குறிப்பிட இங்ஙனம் அழைப்பதே சரி.

அவமானப்படுத்தும் வகையில் சாதிப்பெயரைக் குறிப்பிடுவதும் தண்டனைக்குரிய குற்றமே ஆகும்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனைக்கு...


சேரனையும் புகழ்வோம்...


சேரன் கருவூரில் இருந்தான். சோழன் அவனைப் பார்க்க யானைமீதமர்ந்து வந்தான்.

அவன் படையெடுத்துதான் வந்துள்ளான் என்று நினைத்து சேரனின் வீரர்கள் சூழ்ந்துகொண்டனர்.

இதனால் சோழனின் யானைக்கு மதம் பிடித்துவிட்டது.

இதை புலவரும் சேரனும் மாடத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
புலவரிடம் இவன் யார் என்று சேரன் கேட்கிறான்.

புலவர் சோழனின் புகழை எடுத்துக்கூறி அவனைக் காப்பாற்றுமாறு பாடினார்.

(எப்பிடி பாத்தாலும் நம்ம பயடா இவன்)

உடனே சேரன் போய் யானையை அடக்கி சோழனைக் காப்பாற்றினான்.

சேரனின் பெயர்: சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை.

சோழனின் பெயர்: முடித்தலை கோப்பெருநற்கிள்ளி.

புலவரின் பெயர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.

பாடல்: புறநானூறு 13.

இவன்யார் என்குவை ஆயின், இவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
சுறவுஇனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம,
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.

இவன் யார் என்று கேட்கிறாயா?
இவன் அம்புகளால் துளைக்கப்பட்ட புள்ளிகளுடன் சிதைந்து காணப்படும் புலித்தோலாலாகிய கவசத்தைத் தன் வலிய அழகிய மார்பில் அணிந்து கூற்றுவன் போல் யானைமீது வருகிறான்.

அந்த யானை வருவது கடலில் ஒருமரக்கலம் வருவதைப்போலவும்
பல விண்மீன்களுக்கு நடுவே விளங்கும் திங்களைப்போலவும் காட்சி அளிக்கிறது.

அந்த யானையைச் சுற்றிலும் சுறாமீன்களின் கூட்டம் போல் வாளேந்திய வீரர்கள் சூழ்ந்துள்ளனர்.
அவர்களிடையே உள்ள பாகர்கள் அறியாமலேயே அந்த யானை மதம் கொண்டது.

இவன் நாட்டில் வயல்களில் மயில்கள் உதிர்த்த தோகையை உழவர்கள் நெற்கதிர்களோடு சேர்த்து அள்ளிச் செல்வார்கள்.

இவன் கொழுத்த மீனையும் முதிர்ந்த கள்ளையும், நீரை வேலியாகவும் உள்ள வளமான நாட்டுக்குத் தலைவன்.

இவன் இன்னலின்றித் திரும்பிச் செல்வானாக...

நன்றி: https:// ta.m.wikipedia. org/wiki/சேரமான்_அந்துவஞ்சேரல்_இரும்பொறை

APTA... வணிகப் போர்...


மனக்கண்ணில் காட்சி...


ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப்படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.

வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும்.

முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது.

visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்வது ஒன்றும் சிரமம் இல்லை.

கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார்.

ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார்.

அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார்.

ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது...

பாஜக மோடியும் கருப்பு பண சாதனையும்...


எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து...


எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது..

எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்.

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும்.

இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கிண்ணம் (cup) தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம்.

இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.

வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்பு சத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது.

மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு குவளையில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.

வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, காடி (vinegar) இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மேபிள் சாறு (Maple Syrup) சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது.

இன்றைய உலகில் ஆணும், பெண்ணும் குண்டு உடலை குறைக்க நடை பயிற்சி, உடற்பயிற்சின்னு உடல் வருத்தக்கிறாங்க.

இன்னொரு பக்கம் ஆறு வாரங்களில் அழகான ‘இடை’ ன்னு விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் வாங்கிச் சாப்பிட்டு,எப்படியாவது உடல் எடையை, குறைக்க பணத்தை தண்ணியா செலவழிக்கறதும் உண்டு.

ஆனா, இவ்வளவு சிரமம் இல்லாம, உடல் எடை குறைக்க முடியும். அது ஒரு காலத்துல கடிச்சி, ருசிச்ச சாப்பிட்ட இனிப்பான சமாச்சாரம்தான். அவுசுத்திரேலியா நாட்டில் இருக்கிற மெல்போர்ன் உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சேர்ந்து ஒரு ஆய்வு செய்துள்ளனர்.

அதன்படி, குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.

உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனைக்கு...


எதிர்மறையா பேசுறேன்னு நினைக்காதீங்க.. எதிரியோட பலமறிந்து செயல்படுங்க...


உண்மையான எதிரி எவன்னு தெரியலனானும், உண்மையான கருத்தியலை உணர முயற்சிங்க இல்லையேல் இல்லாமல் ஆக்கப்படுவீர்கள்...

எந்த தலைமையையும் ஏற்காமல்.. மனிதனாய் ஒற்றுமையாக வணிகத்தை ஒழிக்க வேண்டும்...



இந்து, இந்தியா, திராவிடம் யாவும் கற்பனையே - பாவலேறு பெருஞ்சித்திரனார்...


திராவிடம் என்னும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல்.

இது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ, எங்கும் இல்லை.

இக்கால் தூய தமிழர் மதங்களாகிய சிவனியமும் (சைவம்) மாலியமும் (வைணவம்) எவ்வாறு ஆரியக் கலப்பால் இந்து மதம் என்றொரு புதுப்பெயரால் குறிக்கப் பெறுகின்றனவோ, அவ்வாறு, தமிழம் தமிழ்மொழி அவர்களால் திராவிடம் என்று குறிக்கப் பெற்றது.

அது, தமிழ் தவிர்த்த தமிழினில் கிளைத்த மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய மொழிகளைக் குறிப்பதற்கு ஆகிய சொல்லாகக் கால்டுவெல் போலும் மொழி நூல் ஆசிரியர்களால் பயன்படுத்தப் பெற்றது.

இனி அதனினும் பின்னர், திராவிட மொழிகள் தமிழினின்று பிரிந்த சேய்மொழிகள் என்பதைப் பெருமைக் குறைவாகக் கருதி..

அத்திராவிட மொழியாசிரியர்களும்,
புலவர்களும் திராவிட மொழிகளுக்கும் மூல மொழியாக இருந்த ஒரு பழம் பெரும்மொழியைக் குறிக்கப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆனால் உண்மையில் திராவிடம் என்று ஒரு மொழியோ, அது தழுவிய ஓர் இனமோ என்றுமே இருந்தன அல்ல.

இந்து மதம், இந்தியா போலும் அதுவும் ஒரு கற்பனைப் பெயரே. வரலாற்றுப் பெயரே அன்று.

நன்றி: தென்மொழி 1988 நூல்,
வேண்டும் விடுதலை,
பக்.294, 295...

அமெரிக்கா - ரஷ்யா எதிரிகள் அல்ல...


பாறைப் பல்லாங்குழிகள் பழனியில்...


சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள், பாறைப் பல்லாங்குழிகள் பழனியில் கண்டுபிடிப்பு. பழனி அருகே சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள் மற்றும் பாறைப் பல்லாங்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

பழனியில் இருந்து கொழுமம் செல்லும் வழியில் உள்ளது கரடிக்கூட்டம் மலை. இதில் கிழக்கு திசை நோக்கி இருக்கும் வழுக்குப் பாறையின் மேல் மூன்று குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு குகையின் தாழ்வாரத்தில் பாறையில் வரையப்பட்ட ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

இது குறித்து பழனியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியும், தண்டபாணி என்பவரும் ஆய்வு மேற்கொண்டனர். இது பற்றி ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது இந்த ஓவியங்களை பாறை ஓவியங்கள் என்று சொல்வதை விட ஓவியக் குறியீடுகள் என்பதே பொருத்தமானது.

இரண்டு குறியீடுகளுமே வெள்ளை நிறத்தில் உள்ளன. இடதுபுறக் குறியீடு சதுர வடிவில் 11 செ.மீ நீளம், 11 செ.மீ உயரம் கொண்டதாக இருக்கிறது. சரிசமமாக பிரிக்கப்பட்ட நான்கு சதுரம்போல உள்ள வலதுபுறக் குறியீட்டின் நீளம் 10 செ.மீ., உயரம் 9 செ.மீ ஆகும். இவை வரையப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

இவை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டவையாக இருக்கக்கூடும். இவை சிந்து சமவெளி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளைப் போல் உள்ளது. இவற்றின் பயன்பாடு பற்றியும் புரியவில்லை.

இவற்றின் மூலம் தமிழர்களின் பண்பாட்டின் எடுத்துக்காட்டாக சிந்து சமவெளி நாகரிகம் இருந்தது என்று தெரிகிறது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பாறையில் செதுக்கப்பட்ட பல்லாங்குழிகள் உள்ள மலை, பழனியில் உள்ள கல்வெட்டுகளில் பன்றிமலை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பன்றிமலையின் ஓரத்தில் பெருவழிப்பாதை என்று ஒன்று உள்ளது.

இந்த பாதையை தான் பழங்கால மக்கள் மதுரை, பழனி வழியே கேரளத்துக்கு சென்று கடல்வழி வாணிபம் செய்ய பயன்படுத்தினார்கள். இந்த பன்றிமலையின் ஒருபுறம் மூன்று பல்லாங்குழிகள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஒன்று மட்டும் நன்கு தெரிகிறது மற்ற இரண்டும் பாறைகள் வளர்ச்சியால் மூடப்பட்டுள்ளன. இவற்றை அந்த வழியாக சென்ற வணிகர்கள் குகையில் தங்கிய போது பயன்படுத்தியிருக்கலாம்.

தமிழ்நாடு மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், பஞ்சாப், ஒரிசா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, சி(ஜி)ம்பாப்வே, தான்சானியா ஆகியவற்றின் பழமையான விளையாட்டு பல்லாங்குழி விளையாட்டு என்பது குறிப்பிடத்தக்கது...

டிஜிட்டல் இந்தியா பெரு வணிகர்களுக்கு தான்...


சாலையை சேதப்படுத்தும் அதிமுக...


இந்த இடம் சிதம்பரம் அருகில் உள்ள வண்டிகேட் பகுதி. சிதம்பரத்தில் அதிமுக சார்பாக காவிரி நதி நீர் வழக்கை வென்றெடுத்ததன்(அவங்களே சொல்லிக்கிறாங்க) விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்காக யார் வரப் போகிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் கட்டவுட், தோரண வாயில், பேனர் அடிக்க என்று சாலையை சேதப்படுத்தி வருகின்றனர். இதற்காக சாலையில் பள்ளமிட்டு அதல் கம்புகளை நட்டு வருகின்றனர்.

இதெல்லாம் யாருடைய பணம்... அனைத்தும் மக்கள் வரிப்பணம்... அவர்களுக்கா அக்கரை வந்துவிடப் போகிறது.

ஏற்கெனவே சிதம்பரத்தின் அனைத்து சாலைகளும் பாதாள சாக்கடை தோண்டுவதாக கூறி சேதப்படுத்தி கடந்த ஒரு வருடமாக சரி செய்யாமல் உள்ளனர் இந்த மங்குனிகள் காண்ட்ராக்டர்கள். இதை கடந்த ஒரு வருடமாக சகித்துக் கொண்டு ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக போராடும் சிதம்பரம் மக்களின் மனநிலையை பாராட்டியே ஆகவேண்டும்.

இவ்வளவு நாள் சாலையின் நடுவே இருந்த பெரிய பள்ளங்களையே சகித்துக் கொண்ட மக்கள் இந்த சிறுயையும் நிச்சயம் சகித்துக் கொள்வார்கள். மக்களின் பொறுமை ஓங்குக...

இப்படியே நாம இருந்தா... இந்த மாதிரி மங்குனிங்க தான் 100 வருஷம் ஆனாலும் ஆட்சி பண்ணும்...

சிலைக் கடத்தல் பிரிவை முடக்கி, கடத்தல் கும்பலை காப்பாற்ற தமிழக அரசு துடிக்கிறது- பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு...


சூரிய குடும்பத்துக்கு வெளியில் ஒரு மிகப் பெரிய நிலவை வானியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்...


இது வியாழன் கிரகத்தை விட 4 மடங்கு பெரியது. பூமியின் நிலவை விட 70 மடங்கு பெரியது.

சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் புதிய புதிய நட்சத்திரங்கள் மின்னுவதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது சூரிய மண்டலத்துக்கு வெளியே சந்திரன் இருப்பதை இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக் கழக விஞ்ஞானி டேவிட் பென்னட் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

சக்தி வாய்ந்த டெலஸ் கோப்புகள் மூலம் இந்த நிலவு கண்டறியப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. பூமியில் உள்ள சந்திரனை விட 70 மடங்கு அதிக வெளிச்சத்துடன் பிரகாசிக்கிறது.

சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய கிரகமான வியாழனைவிட 4 மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது...

நியூஸ்7 னின் டூபாக்கூர் வேலைகள்...


ஸ்ரீவைகுண்டம் அருகே பதநீர் இறக்க ஏறும் போது பனை தொழிலாளி பனையில் இருந்து கீழே விழுந்து பலி...


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (70). இவர் பனை ஏறி பனையில் இருந்து பதநீர் இறக்கி அதனை காய்த்து கருப்புக்கட்டி எடுத்து விற்பனை செய்து வருகிறார்.

வழக்கம்போல் இன்று காலை 4.30 மணி அளவில் பனை ஏறுவதற்காக வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். காலை 8 மணி ஆகியும் அவர் வராத காரணத்தால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை பனை காட்டுப்பகுதியில் தேடிச் சென்றனர். அப்போது ஒரு பனையில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார்.

இதுகுறித்து உடனே செய்துங்கநல்லூர் காவல்நிலையத்திற்கு அவரது உறவினர்கள் தகவல் கொடுத்தனர். போலிசார் உடனே வந்து அவரை திருநெல்வேலி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே பனை தொழில் நலிவடைந்து வரும் நிலையில் பனை தொழிலாளர் பனையில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

இயற்கையோடு இனைந்து வாழுங்கள்...


உலகின் தோற்றம் - வரலாற்று ஆய்வு...

உலகம் எவ்வாறு தோன்றிற்று…
அதில் மனிதன் எவ்வாறு தோன்றினான்?

இந்தக் கேள்விக்கு வெவ்வேறு வண்ணம் பதில்களும் காலந்தோறும் வந்துக் கொண்டே இருக்கின்றன. ஆயினும் இது தான் விடை என்று அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் எவராலும் இன்னும் உறுதிப்பட கூறப்படவில்லை.

சரி இப்பொழுது அந்தப் பதில்களைப் பற்றிப் பார்க்கலாம்!!! பொதுவாக இந்தக் கேள்விக்குரிய பதில்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்..

உலகத்தினை கடவுள் படைத்தார். மனிதனையும் அவரே படைத்தார். - இது இறை நம்பிக்கையாளர்களின் கூற்று.

உலகம் ஒரு விபத்தினால் உருவானது. அதில் தற்செயலாய் உயிர் உருவானது. அந்த உயிரின் பரிணாம வளர்ச்சியினால் மனிதன் உருவானான். - இது அறிவியல் நம்பிக்கையாளர்களின் கருத்து.

உலகத்தினையும் மனிதனையும் கடவுள் படைத்தார்… ஆனால் மனிதன் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சியினால் வந்தான். பரிணாம வளர்ச்சி இறைவனின் செயல் - இது இறைவனையும் விட முடியாமல் அறிவியலையும் விட முடியாமல் இருப்பவர்களின் கருத்து. (இன்றைய காலத்தில் இந்தக் கருத்தினை உடையவர்களே அதிகமாக இருக்கின்றனர்)

சரி… இப்பொழுது உலகத்தின் தோற்றம் பற்றி பல காலமாக கூறிக் கொண்டு இருக்கும் நூல்களையும் கதைகளையும் அறிவியலையும் பற்றிப் பார்ப்போம்.

முதலில் வட நாட்டுக் கதை.

வடநாட்டுக் கதை கூறும் உலகின் தோற்றம்:

வடநாட்டுக் கதை என்பது ஆரியர்களின் கதை.

இக்கதையின் படி, சிவனும் பார்வதியும் ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்து இருந்ததினால் உலகம் தோன்றிற்று. அப்படிப்பட்ட உலகத்தினில் பிரம்மன் மனிதர்களை நான்கு விதமாய் பிரித்துப் படைத்தான்.

பிராமணர்கள் - பிரமனின் தலையில் இருந்துத் தோன்றியவர்களாம்.

சத்திரியர்கள் - பிரமனின் நெஞ்சில் இருந்துத் தோன்றியவர்களாம்.

வைசியர்கள் - பிரமனின் தொடையில் இருந்துத் தோன்றியவர்களாம்.

சூத்திரர்கள் - பிரமனின் பாதத்தில் இருந்துத் தோன்றியவர்களாம்.

மேலும் இந்தக் கதையின் படி இறைவனிடம் இருந்து பிறக்காதவர்களும் இருக்கின்றனர். அவர்கள் பஞ்சமர்களாம். நிற்க.

இந்தக் கதையினில் அறிவியலினை நாம் எங்காவது காண முடிகின்றதா… இல்லை ஆன்மீகத்தினையாவது காண முடிகின்றதா?

கதையினை நாம் மீண்டும் படித்துப் பார்த்தால், இல்லை என்பதே நமது பதிலாக இருக்க முடியும். அதுவும் கடவுள் தான் மனிதனைப் படைத்தார் என்றக் கொள்கையினை இந்தக் கதையே மறுத்துக் கொண்டு இருக்கின்றது (பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் மக்களை கடவுள் படைக்கவில்லை என்றால் அவர்கள் தோன்றியது எப்படி?).

அறிவியலும் இல்லை, ஆன்மீகமும் இல்லை, வரலாற்றுச் சான்றுகளும் இல்லை… அனைத்துக்கும் மேலாக தெளிவான படைப்பின் விளக்கமும் இல்லை. எனவே இந்தக் கதை வரலாற்று உண்மை அல்ல… வெறும் கதை என்றே நாம் முடிவிற்கு வர வேண்டி இருக்கின்றது.

இப்பொழுது நாம் அறிவியல் கூறும் கூற்றினைக் காண்போம்:

உலகம், விண்வெளியில் நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடி விபத்தினால் (Big Bang Theory) தற்செயலாய் தோன்றியது. முதலில் மிகவும் சூடாக இருந்த உலகம் சுழற்சியினால் குளிரக் குளிர உயிர் தோன்றும் வாய்ப்புகள் பெருகின.
அப்படி பட்ட ஒரு காலத்தில், உயிர் தோன்றுவதற்கு ஏதோ ஒரு சூழ்நிலை ஏதுவாக அமைந்ததினால் உயிர் தோன்றிற்று.

ஒரு செல் உயிரியாய்!

அந்த ஒரு செல் உயிரி காலத்தின் போக்கில் பல்வேறு உயிரினமாய் பரிணாம வளர்ச்சியினை அடைந்து இறுதியில் மனிதனாய் ஆகி உள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சி அனைத்து உயிரினங்களின் உடல்களைப் ஆராய்ந்துப் பார்த்தால்
நமக்கு புலனாகும். பாருங்கள் குரங்கின் உடம்பும் மனிதனின் உடம்பும் ஒன்றுப் போலவே அமைந்து இருக்கின்றன. எனவே மனிதன் குரங்கினில் இருந்து தான் வந்து இருக்க வேண்டும்.

இதுவே அறிவியலின் கூற்று… மன்னிக்கவும்… ஐரோப்பிய அறிவியலின் கூற்று!

ஐரோப்பிய அறிவியலா… இது என்ன புது கதை என்கின்றீர்களா? இந்தக் கதையையும் தான் பார்த்து விடுவோமே!!!

ஐரோப்பிய அறிவியல் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு உடலினை மட்டுமே ஆராய்ச்சி செய்யும் ஒன்றாக உள்ளது. உயிரினைப் பற்றிய ஆராய்ச்சி ஐரோப்பிய அறிவியலில் இல்லை.
ஐரோப்பிய அறிவியல் உலகின் பொருட்களை இரண்டு விதமாக பிரித்து உள்ளது.

உயிருள்ள பொருட்கள் - மனிதன், விலங்குகள் (Living Things ) (இங்கே அறிவியல் மனிதனை ஒரு பொருளாகப் பார்க்கும் தன்மையையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.)

உயிரற்றப் பொருட்கள் - கல், மரம் (Non - Living things )

அந்த அறிவியலில் வேறு விதமான பிரிவுகள் இல்லை. எனவே வெறும் உடலினை வைத்து மட்டுமே ஆராயும் இந்த அறிவியலினை நாம் ஏற்றுக் கொள்ளலாமா என்றக் கேள்வி வருகின்றது.

கூடவே இந்த அறிவியல் உயிரினைப் பற்றி ஆராயவில்லை என்றால் உயிரினைப் பற்றி ஆராயும் அறிவியல் இருக்கின்றதா என்றக் கேள்வியும் வருகின்றது. அந்தக் கேள்விக்கு பதில்… ஆம்! உயிரினைப் பற்றி அறிந்த அறிவியல் இருக்கின்றது. நீண்ட காலமாக நம்முடனே இருக்கும் தமிழ் அறிவியல் தான் அது.

ஐரோப்பிய அறிவியல் பொருட்களைப் உயிரின் அடிப்படையில் பிரிக்கின்றது என்றுக் கண்டோம். வேறு பிரிவுகள் அதில் கிடையாது.

ஆனால் தமிழ் உயிரினங்களையே அறிவின் வழி பிரித்து இருக்கின்றது.
ஓரறிவு உயிரினங்கள் முதல் ஆறறிவு உயிரினங்கள் வரை என்று அந்தப் பிரிவுகள் நீள்கின்றன.

மேலும் தமிழ் தன் திணை இலக்கணத்தின் மூலம் மனிதர்களுக்கு உயர்திணை (அவர்கள் மற்ற உயிர்களில் இருந்து சிறந்தவர்கள் என்ற எண்ணத்தில்) என்றச் சிறப்பினையும் கொடுத்து இருக்கின்றது.

இத்தகைய பிரிவுகளை அறியாத தொடக்க நிலையிலேயே ஐரோப்பிய அறிவியல் நிற்கின்ற காரணத்தினால் உயிரின் தோற்றம் பற்றிய ஐரோப்பிய அறிவியலின் கூற்றினை நாம் ஏற்க முடியாது.

ஐரோப்பியர்களின் அறிவியல் உலகம் தட்டையானது என்று கூறிக் கொண்டு இருந்தக் காலத்தில், உலகை கப்பலில் சுற்றிய அறிவியல் நம்முடையது. எனவே நாம் அவர்கள் கூற்றினை ஆராயாது ஏற்றுக் கொண்டால் தட்டையான உலகத்திலேயே சுற்றிக் கொண்டு இருக்க வேண்டியது தான்.
எனவே,
ஐரோப்பிய அறிவியல் உயிரினை அறியாத நிலையினாலும்,
டார்வினின் கருத்து வெறும் கருத்தே அன்றி அறிவியல் கிடையாது என்ற நிலையினாலும்,
குரங்கில் இருந்து எந்த ஒரு மனிதனையும் உருவாக்கிக் காட்டாமையினாலும்,
வெற்று இடத்தில் இருந்து உயிரினை உருவாக்கிக் காட்டாமையினாலும்,

ஐரோப்பிய அறிவியலின் உயிரின் தோற்றம் பற்றியக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வட நாட்டுக் கதையும் விளக்கம் தரவில்லை… ஐரோப்பிய அறிவியலும் தெளிவானக் கருத்தினைத் தரவில்லை. எனவே இப்பொழுது நாம் இரு வேறு கதைகளைக் காண வேண்டி இருக்கின்றது.

ஒன்று பரிபாடல் - தமிழ் சங்க இலக்கியம்.

இரண்டு விவிலியம் (பைபிள்)

இந்த இரண்டுக் கதைகளிலும் ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை இருக்கின்றது. இரண்டுமே உலகம் ஆறு ஊழிக் காலத்தில் உருவாக்கப்பட்டது என்றே கூறுகின்றன.

‘பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட’ - என்னும் பரிப்பாடல் பாட்டின் மூலம்,
கடவுள் முதலில் ஆகாயத்தினை படைத்ததாகவும், பின்னர் காற்று, செந்தீ, மழை, நிலம் ஆகியவற்றை படைத்து முடித்து பின்னர் இறுதியாக மனிதனைப் படைத்ததாகவும் அறிய வருகின்றோம்.

கிட்டத்தட்ட இதேக் கருத்து விவிலியத்திலும் இருப்பது கவனிக்கத்தக்கது.
விவிலியத்தின்படி இறைவன் ஐந்து ஊழிக் காலத்தில் உலகினைப் படைத்து முடித்து இறுதியாக ஆறாவது ஊழிக் காலத்தில் மனிதனைப் படைத்தார்.
சிறிது நிறுத்துங்கள்…!

நீங்கள் பாட்டுக்கு ஊழிக் காலங்கள் என்று சொல்லுகின்றீர்கள்… கடவுள் 6 ஊழிக் காலங்களில் அல்ல, ஆறு நாட்களில் உலகினைப் படைத்து உள்ளார்… என்கின்றீர்களா?

அப்படி என்றால் உங்கள் கவனத்திற்கு…
விவிலியம் என்பது ஒரு தொகுக்கப் பட்ட நூலே ஆகும்.
விவிலியத்தின் மூல மொழி எபிரேயம். அந்த மொழியில் இருந்தே எல்லா மொழிகளுக்கும் அது மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. மொழி பெயர்ப்பில் சில கருத்துக்கள் மாறுப்பட்டு வந்து இருக்கலாம். ஆங்கிலத்தில் ஊழி என்ற சொல்லுக்கு தகுந்த வார்த்தை இல்லாதக் காரணத்தினால், ஆறு ஊழிக் காலங்கள் என்ற கால அளவு ஆறு நாட்களாக மாறிப் போய் உள்ளது. உதாரணத்திற்கு தூத்துக்குடி டுடிகொரின் (Tutikorin ) ஆக மாறியது உங்களுக்குத் தெரியுமல்லவா! அதுப் போலத் தான்!

சரி… எங்கேயோ எழுதப்பட்ட தமிழ் சங்க நூலுக்கும் விவிலியத்திற்கும் ஒற்றுமை இருக்கின்றது என்பதினைப் பார்த்தோம். ஆனால் அந்த செய்திகள் உண்மையினைச் சொல்லுகின்றனவா? விவிலியத்தில் உண்மை இருக்கின்றதா? … என்பதனை ‘ஆதாம் என்ற தமிழன்’ என்ற அடுத்த பதிவில் பார்ப்போம்.

விவிலியம் அழைக்கின்றது!

பி.கு:
தமிழில் எழுதப்பட்ட பரிபாடல் கருத்துக்கும் விவிலியக் கதைக்கும் ஏன் இந்த ஒற்றுமை என்று எண்ணுகின்றீர்களா?

உலகின் முதல் மனிதன் தமிழன் என்னும் கூற்றின் படி. உலகம் முழுவதும் பரந்து சென்று பரவிய தமிழன் தன் கதைகளையும் தன்னுடன் சுமந்துச் சென்றுள்ளான். அந்தக் கதையே தமிழகத்தில் பரிபாடலாவும், எபிரேயத்தில் ஆதியாகமக் கதைகளாகவும் தொகுக்கப் பட்டு உள்ளன என்பது அறிஞர்கள் கருத்து!

மறைக்கப்படும் மறுக்கப்படும் தன் உயிரை இழந்த நிகழ்கால தமிழ் தேசிய லட்சிய போராளி சுபா முத்துக்குமார்...


தமிழ்த்தேசிய மீட்சிப்படையில் தன்னை இணைத்துக்கொண்டு ஆயுத வழியில் தமிழ்நாடு விடுதலை பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தவர்..

அந்த முடிவுக்கு வருவதற்கு ஆயுத வழியில் போராடி உயிர்நீத்த தமிழ்நாடு விடுதலை படையின் தோழர். தமிழரசனையே முன்னோடியாக கொண்டவர்..

1. ஆயுத பயிற்சிக்காக ஈழம் சென்றார். அங்கு தேசிய தலைவர் வழிகாட்டலின்படி சிங்கள படைக்கு எதிராக புலிகளின் பல்வேறு வெற்றிகரமான பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்றார்.

2. தேசிய தலைவரின் தனி பாதுகாப்பு அணிக்கு (சைபர் விங்) தேர்வு செய்யப்பட்டார்.

3. தமிழீழத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றியும் பயிற்சியும் பெற்று தமிழ்நாடு திரும்பினார்.

4. தமிழ்நாடு விடுதலைக்காக தமிழ்த்தேசிய மீட்சிப்படை தலைமை ஏற்று வழி நடத்தினார். அத்துடன் புலிகளுக்கு தேவையான பொருட்களையும் இங்க்கிருந்து அனுப்பி வந்தார்..

5. சென்னை சிறையிலிருந்து தப்பித்த போராளிகள் ரோமியோ மற்றும் அவர்களது தோழர்களை பத்திரமாக தமிழ் ஈழம் அனுப்பி வைத்தார்.

6. வேலூர் கோட்டை சிறையிலிருந்து சுரங்கம் அமைத்து நாளு பெண் போராளிகள் உட்பட 43 விடுதலை புலி போராளிகளை பொறுப்பேற்று ஈழத்துக்கு அனுப்பி வைத்தார்

7. புதுக்கோட்டை மனமேல் குடியில் ஈழத்துக்கு பொருட்கள் அனுப்ப காத்திருந்த போது தமிழ் நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்டு. தடா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்படார்...

8. இரண்டாரை ஆண்டுக்கு பிறகு பினையில் விடுதலை ஆனார்.. விடுதலை ஆன வுடன் சந்தன காட்டில் வீரப்பனாருடன் சேர்ந்து போராட்டக் களம் அமைத்தார்.. வெள்ளி திருப்பூர் காவல் நிலையத்தை வீரப்பனாருடன் தலைமையேற்று தாக்கதல் நடத்தி ஆயுதங்களை எடுத்துச் சென்றார்.. கண்ணட நடிகர் ராஜகுமாரை பினையாக கொண்டு வருவதற்கு களம் அமைத்து கொடுத்தார்...

9.ராஜகுமாரை விடுவிக்க தமிழரின் தாக பிரச்சனையான காவிரி நீர் பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு... அதிரடி படையால் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்கு வாழ்வாதாற தீர்வு போன்ற கோரிக்கைகளோடு சுபா முத்துக்குமாரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வீரப்பனார் முன் வைத்தார்.

10. 2 ஆண்டுகளுக்கு பிறகு வீரப்பனாருக்கு பொருட்கள் கொண்டு சென்றதாக கொளத்தூர் மணி அவர்களுடன் கைது செய்யப்பட்டார். பிறகு கண்ணட சிறையில் அடைக்கப்பட்டு கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்.. 1992 கர்னாடகத்தில் நடந்த காவிரி கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வெடிகுண்டு தயாரித்ததாக கைது செய்யப்பட்டு பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டார்.

11. நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு பினையில் வெளியில் வந்தார் மீண்டும் தமிழ் தேசிய மக்கள் அரசியலில் களம் புகுந்தார்.. மதுரையில் அறுத்தெரிவோம் முள்வேலி முகாமை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். நாம் தமிழர் கட்சி மீண்டும் உருவாகி தமிழ்தேசியளர்களை ஒருங்க்கினைத்து வலுமை மிக்க இயக்கமாக மாற்றி இரண்டு ஆண்டு வலம் வந்தார்..
தமிழகம் முழுவதும் வலிமைப்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் தமிழின துரோகிகளால் 15.02.2011 அன்று இரவு 9 மணி அளவில் புதுக்கோட்டை நகரத்தில் படுகொலை செய்யப்பட்டார்...!

29/06/2018

அண்ணாமலைப் பல்கலை. தொலைதூர கல்வியில் 25 புதிய படிப்புகள்...


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நிகழ் கல்வியாண்டு முதல் 25 புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் வி.முருகேசன் தெரிவித்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் 2018 - 19-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. அப்போது பல்கலை. துணைவேந்தர் வி.முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்ணாமலைப் பல்கலை.யில்தான் நாட்டிலேயே முதல் முறையாக தொலைதூரக் கல்வி இயக்ககம் தொடங்கப்பட்டது. நிகழ் கல்வியாண்டு (2018-19) முதுநிலை யோகா பட்ட மேற்படிப்பு, கணினி பட்டப் படிப்பு உள்பட 25 படிப்புகள் புதிதாகத் தொடங்கப்பட உள்ளன என்றார் அவர்.

புதிய படிப்புகள்: எம்.எஸ்சி. கேம் டெக்னாலஜி, எம்.எஸ்சி. கவுன்சலிங் - ஸ்பிர்ட்சுவல் ஹெல்த், எம்.எஸ்சி. மல்டி மீடியா, எம்.எஸ்சி. யோகா - வேல்யூ எஜூகேஷன், எம்.எஸ்சி. யோகா - வேல்யூ எஜூகேஷன் லேட்டரல் என்டரி, பி.எஸ்சி. அனிமேஷன், பி.எஸ்சி. அட்வர்டைசிங் டிசைன், பி.எஸ்சி. பேஷன் டிசைன் - கம்யூனிகேஷன், பி.எஸ்சி. கேம் ஆர்ட் - டிசைன், பி.எஸ்சி. கேம் டிசைன் - டெவலப்மெண்ட், பி.எஸ்சி. கேம் புரோகிராம், பி.எஸ்சி. கிராபிக்ஸ் டிசைன், பி.எஸ்சி. இன்டீரியர் ஆர்கிடெக்சர், பி.எஸ்சி. மீடியா டெக்னாலஜிஸ், பி.எஸ்சி. போட்டோகிராபி, பி.எஸ்சி. யூசர் இன்டர்ஃபேஸ் டிசைனிங் டெவலப்மெண்ட், பி.எஸ்சி. விஷூவல் எஃபக்ட், பி.எஸ்சி. விஷூவல் மீடியா, பி.ஜி. டிப்ளமோ இன் சைபர் லா, பி.ஜி. டிப்ளமோ இன் வேல்யூவேஷன் லேண்ட், பில்டிங், பி.ஜி. டிப்ளமோ இன் யோகா - வேல்யூ எஜூகேஷன், டிப்ளமோ இன் கவுன்சலிங் - ஸ்பிரிட்சுவல் ஹெல்த், டிப்ளமோ இன் பிரண்ட் டெஸ்க் ஆப்ரேஷன்ஸ்..

சான்றிதழ் படிப்பு: பிரண்ட் டெஸ்க் ஆப்ரேஷன்ஸ், வாஸ்து சான்றிதழ் படிப்பு...

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி...


பாஜக பினாமி அதிமுக மாநில அரசுக்கு எச்சரிக்கை...


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த  உச்சநீதிமன்றம், 2013 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு 100 கோடி அபராதத்தை விதித்தது.

இத்தொகையின் வட்டியை கொண்டு நீர், நிலம், காற்று மாசு படுதலை தடுத்து சுற்று சூழலை காக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது.

உத்தரவுபடி ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.100 கோடி அபராதத்தை காசோலை (எண் 184903) மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு 01.07.2013 அன்று வழங்கி வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டது. வைப்பு தொகையாக செலுத்திய தேதியில் இருந்து 13.04.2018 வரை அத்தொகை 42 கோடியே 26 லட்சத்து 96 ஆயிரத்து 162 ரூபாய் வட்டி ஈட்டியிருக்கிறது. அதில் 35 கோடியே 42 லட்சத்து 80 ஆயிரத்து 337 ரூபாய் செலவழிக்கப்படாமல் வங்கியிருப்பில் உள்ளது. (இயக்கம் தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் பெற்ற தகவல்).

ஸ்டெர்லைட் தொழிற்சாலை மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை வார்த்தைகளால் அளக்க முடியாத அளவிற்கு உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றுசேர வேண்டிய நிதி வங்கிகணக்கில் தூங்கிவழிந்து வருகிறது. இதுவரை செலவழிக்கப்பட்ட 7 கோடி அளவிலான பணிகளின் விவரங்களையும் மாவட்ட நிர்வாகம் தர மறுக்கிறது.

இந்நிலையில் நானும் இயக்க மாநில அமைப்பு செயலாளர் திரு.ஜெய் கணேஷ் மற்றும் நெல்லை மாநகர பொறுப்பாளர் திரு.ரகுமான் அவர்களும் தூத்துக்குடி துணை ஆட்சியரை நேரில் சந்தித்து இந்த நிதியை உச்ச நீதிமன்ற உத்தரவு படி உரிய திட்டத்திற்கு பயன்படுத்த மனு (26.06.2018) அளித்தோம். பல்வேறு காரணங்களால் இந்நிதியை பயன்படுத்த முடியவில்லை என்றும்  திட்ட மதிப்பீடு சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பி உள்ளதாகவும் அனுமதி கிடைத்த உடன் இந்நிதியை உரிய திட்டங்களுக்கு பயன்படுத்த உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளார்கள்.

இதுவரை மெத்தனப்போக்காக இருந்த தமிழக அரசையும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தையும்  இயக்கம் கடுமையாக கண்டிக்கிறது.உச்ச நீதிமன்ற உத்தரவு படி நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க உள்ளோம் என்பதை  மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் இதன் மூலம் எச்சரிக்கை செய்கிறோம்...

நமது மரபணு மிகவும் வீரியம் கொண்டது...


கூவம் சாக்கடையல்ல நதி...


சென்னையின் தேம்ஸ் நதி. தமிழக அரசின் திட்டங்களில் வருடாவருடம் கூவம் நதியை சுத்தம் செய்ய நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் இதுவரை தூய்மைப்படுத்தியதாக தெரியவில்லை...

பாஜக மோடியும் இந்தியா விற்பனையும் - WTO...


ஊடகங்கள் ஒருபோதும் உங்களுக்காக இருந்தது இல்லை, இன்றுவரை...






அவர்களின் தவறு வெளியே தெரியக் கூடாது என்பதற்காக, எந்த எல்லைக்கும் சென்று அதை தடைசெய்வார்கள்...

உளவியல் போர்...

அவர்கள் உங்களை உளவியல் ரீதியாக கட்டுப்படுத்துகின்றனர்...

நம் முன்னோர்கள் பயன்படுத்திய அணுஆயுதம் பிரம்மாஸ்திரமா - 2...


நமக்கு முன் பூமியில் வாழ்ந்த முன்னோர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியது அறிவியல் புனைகதை போன்று இருந்தாலும், நியூ மெக்சிகோ சோதனைக்கு பின் வெளியான டாக்டர். ஓபென்ஹெய்மர் அறிக்கையில் இதற்கான குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றது.

எனக்கு பகவத் கீதையின் குறிப்புகள் நினைவுக்கு வருகின்றது...

ஓபென்ஹெய்மர் ஆங்கில பதிப்பில் 11 ஆம் பகுதி 32 வது வசனத்தைக் குறிப்பிட்டிருந்தார். "Now I am become Death, the destroyer of worlds", தமிழில் "உலகங்களை அழிக்கவே முழுமையாக வளர்ந்த மரணம் {காலன்} நான் இப்போது மனித குலத்தைக் கொல்வதில் {அழிப்பதில்} ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கே பல்வேறு பிரிவுகளில் நிற்கும் போர்வீரர்கள் அனைவரும் நீ இல்லாமலேயே அழிவார்கள்.

மகாபாரதம் மற்றும் பகவத் கீதை போன்ற புராணங்கள் கி.பி இரண்டு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை ஆகும். இந்தப் புராணங்களில் பண்டைய நாகரீகமான ராம ராஜ்ஜியத்தில் வாழ்ந்தவர்கள் குறித்த கதைகள் இடம் பெற்றிருக்கின்றது.

இந்த நாகரீகமானது 12,000 ஆண்டுகளுக்கு முன் அல்லது முன்னதாக பதிவு செய்யப்பட்ட நாகரீகத்தை விட 5,000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோமியாவில் வாழ்ந்த பண்டைய நாகரீகம் ஆகும்.

இவை சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது மட்டுமின்றி இவற்றில் கடவுள்கள் பறக்கும் வாகனங்களைப் பயன்படுத்தியதோடு அதிநவீன தொழில்நுட்ப திறன் மற்றும் வியக்க வைக்கும் ஆயுதம் போன்றவற்றை போர்க்களங்களில் பயன்படுத்தியதாக பழைய குறிப்புகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் பயன்படுத்திய ஆயுதமானது பிரம்மாஸ்திரம் என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. பிரம்மாஸ்திரம் மூலம் பலர் உடல் தீயில் எரிந்தும், உருகியும் மரணித்திருக்கலாம். பண்டைய வானியல் கோட்பாட்டாளர்களும் பிரம்மாஸ்திரம் நிச்சயம் அணு ஆயுதமாக இருக்க வேண்டும் என்றே கூறுகின்றனர்.

அவற்றை பற்றி விரிவாக அடுத்த பகுதியில் காண்போம்... தொடரும்....

வணிகப் போர்...


ரூ.125 நாணயத்தை நாளைய மறுநாள் வெளியிடுகிறார் வெங்கய்ய நாயுடு...


புள்ளியியல் தினத்தையொட்டி, ரூ.125 நாணயத்தை குடியரசு துணைத் தலைவா வெங்கய்ய நாயுடு நாளைய மறுநாள் (ஜூன் 29) வெளியிடவுள்ளார்.

இதையொட்டி, கொல்கத்தாவில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடுதல் துறை அமைச்சகம் சார்பில் வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புள்ளியியல் தின நினைவு ரூ.125 நாணயம், ரூ.5 புதிய நாணயம் ஆகியவற்றை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிடவுள்ளார்...