30/06/2018

பறையர்களை எவ்வாறு அழைப்பது?


தலித் என்று அழைக்கலாமா?

ஓ அழைக்கலாமே...

சிறைக்கம்பிகளை எண்ணவேண்டும் என்ற ஆசை இருந்தால் தாராளமாக அழைக்கலாம்.

1. அரசாணை நிலை எண். 198,
சமூக நலத்துறை, நாள் 21-03-1981..

2. அரசு கடிதம் எண். 24024/ஆதிந-2/1998-2 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 15-03-1999..

3. அரசாணை (ப) எண் 69இ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 05-04-1999..

ஆகிய ஆவணங்களின் படி
"தாழ்த்தப்பட்டோர்"
"தாழ்த்தப்பட்ட மக்கள்"
"தலித்"
"தலித்துகள்"
"தலித் மக்கள்"
"தலித் சாதி"
"தலித் சமுதாயம்"

போன்ற இழிவுப் பெயர்களால்  அழைக்கவோ, உச்சரிக்கவோ, எழுத்தால் எழுதவோ, ஆவணங்களில் பதிவு செய்யவோ கூடாது என்று அரசே ஆணை பிறப்பித்துள்ளது.

ஆக தலித், தாழ்த்தப்பட்டோர் போன்ற சொற்களை பயன்படுத்துதல் சட்டப்படி குற்றம் ஆகும்.

ஆதி திராவிடர் என்று அழைக்கலாமா?

1918 ல் திராவிட மகாஜன சபை ஆவணங்களில் பறையர், பஞ்சமர் போன்ற பெயர்களை நீக்கி 'ஆதி திராவிடர்' என்று குறிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது.

மூன்றாண்டுகள் பரப்புரையிலும் ஈடுபட்டது.

1921ம் ஆண்டுக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தமிழ்நாட்டளவில் பரவலாக சுமார் 15,025 பேர் தங்களை 'ஆதி திராவிடர்கள்' என்று சொல்லிக்கொண்டு, குடி மதிப்பீட்டுக் கணக்கேட்டில் அதை ஏறும்படி செய்தனர்.

ஆனால் 1921ம் ஆண்டு குடிமதிப்புக் கணக்கெடுப்பின்படி,சென்னை மாகாணத்தில் SC/ST பிரிவினரின் எண்ணிக்கை 63,72,074 ஆகும்.

இவர்களில் சுமார் 15,000 பேர்தான் ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள முன்வந்தனர்.

அதாவது ஆயிரத்தில் ஒருவர் கூற 'ஆதி திராவிடர்' என்று பதியவில்லை.

இது, தமிழ்நாட்டு பட்டியல் சாதியாரும் பிறமாநிலத்தாரைப் போல ‘திராவிடர்’ என்னும் பெயரை விரும்பவில்லை என்பதையே புலப்படுத்தியது.

ஆக ஆதிதிராவிடர் எனும் பெயர் அவர்கள் விரும்பிய ஒன்று அல்ல.
திணிக்கப்பட்ட ஒன்று.

பறையர்களை பலமுறை சாதி வெறியுடன் கேவலமாகப் பேசியுள்ள ஈ.வே.ரா இதுபற்றி என்ன கூறியுள்ளார்.

( விடுதலை- ஞாயிறு மலர் 21.8.1994
ஆசிரியர் கேள்வி- பதில் பகுதி)..

கேள்வி: திராவிடநாடு திராவிடருக்கானால் ஆதி திராவிடர்களுக்கு என்ன லாபம்?

பெரியார்: லாபம் இல்லை. நட்டம் தான். ஆதி என்ற இரண்டு எழுத்துகளை வெட்டியெறிந்து விடுவோம்.

அதாவது அவர்கள் திராவிடர்களாக இருந்தால் போதுமாம்.ஆதி குடிகளாக இருக்கக்கூடாதாம்.

ஆகவே பறையர் பெருமக்களை அவர்களின் சமூகத்தைக் கொண்டு குறிக்க பறைய'ர்' என்று மரியாதையாக அழைப்பதே முறை.

அனைத்துப் பிரிவினரையும் சமூகத்தால் குறிப்பிட இங்ஙனம் அழைப்பதே சரி.

அவமானப்படுத்தும் வகையில் சாதிப்பெயரைக் குறிப்பிடுவதும் தண்டனைக்குரிய குற்றமே ஆகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.