30/06/2018

இந்து, இந்தியா, திராவிடம் யாவும் கற்பனையே - பாவலேறு பெருஞ்சித்திரனார்...


திராவிடம் என்னும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல்.

இது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ, எங்கும் இல்லை.

இக்கால் தூய தமிழர் மதங்களாகிய சிவனியமும் (சைவம்) மாலியமும் (வைணவம்) எவ்வாறு ஆரியக் கலப்பால் இந்து மதம் என்றொரு புதுப்பெயரால் குறிக்கப் பெறுகின்றனவோ, அவ்வாறு, தமிழம் தமிழ்மொழி அவர்களால் திராவிடம் என்று குறிக்கப் பெற்றது.

அது, தமிழ் தவிர்த்த தமிழினில் கிளைத்த மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய மொழிகளைக் குறிப்பதற்கு ஆகிய சொல்லாகக் கால்டுவெல் போலும் மொழி நூல் ஆசிரியர்களால் பயன்படுத்தப் பெற்றது.

இனி அதனினும் பின்னர், திராவிட மொழிகள் தமிழினின்று பிரிந்த சேய்மொழிகள் என்பதைப் பெருமைக் குறைவாகக் கருதி..

அத்திராவிட மொழியாசிரியர்களும்,
புலவர்களும் திராவிட மொழிகளுக்கும் மூல மொழியாக இருந்த ஒரு பழம் பெரும்மொழியைக் குறிக்கப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆனால் உண்மையில் திராவிடம் என்று ஒரு மொழியோ, அது தழுவிய ஓர் இனமோ என்றுமே இருந்தன அல்ல.

இந்து மதம், இந்தியா போலும் அதுவும் ஒரு கற்பனைப் பெயரே. வரலாற்றுப் பெயரே அன்று.

நன்றி: தென்மொழி 1988 நூல்,
வேண்டும் விடுதலை,
பக்.294, 295...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.