ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக டிஜிபி ராஜேந்திரன், திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில், 100-ஆவது நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதைத் தடுக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் பதிலளிக்க போலீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து டிஜிபி ராஜேந்திரன், திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...
ஆட்சியர் அலுவலகம் முன்னதாக கூடிய 20 ஆயிரம் பேரை கலைக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. எனவே ஆட்சியர் அலுவலகத்திஸ் சிக்கியிருந்த 277 ஊழியர்களை மீட்கவும், ஸ்டெர்லைட் குடியிருப்பில் 150 குடும்பத்தினருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டதாலும் தான் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை. இதுதொடர்பான 5 வழக்குகளும் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது என்றிருந்தது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.