14/07/2018

நகரமக்களும் கிராமத்து உழவர்களையும் இனைக்கும் பாதை - 2...


உணவு முறை:

காலை:  7 முதல் 9..

1. பார்லி கஞ்சி, இட்லி ,தோசை ,பூரி ,உடன்  கொத்தமல்லிச் சட்னி , தேங்காய்ச்சட்னி,பிரண்டைசட்னி, புதினா சட்னி,பச்சபயிர் அல்லது பைத்தம்பயிர் சாம்பார்.

முடக்கத்தான் தோசை, புதினா தோசை, மிளகு, சின்ன வெங்காயம் ,சீரகம் போட்டு தாளித்த இட்லி தோசை.

2. தினை, வரகு, சாமை,குதிரைவாளி பொங்கல் உடன் பைத்தம் பருப்பு சாம்பார்.

(சிறுதானியம் விலை அதிகமாக இருப்பின் வாரம் இருமுறை எடுத்து கொள்ளுங்கள் நுகர்வோர் அதிகமானல் உழவரும் மனம் மாறுவர்.. தங்கள் நலனுக்காகத்தான் உழவர்கள் போராடுகின்றனர்..விரைவில் அனைவருக்கும் நஞ்சில்லா உணவைத் தருவோம்).

3. கம்மங்கூழ் உடைத்த கம்பு விற்கின்றது அதனை வாங்கி கோடைகாலத்தில் கேழ்வரகு , சிறிது நொய் அரசி குருணையை சேர்த்து செய்து குடிக்கவும் கோடைக்காலத்தில்.

இதனை எளிதாக இளைஞர்களே செய்யலாம். சிறிய கம்பனி மில்க் பாய்லரை கேன் மட்டும் வாங்கி வைத்து கொள்ளுங்கள். காலை உடைத்த கம்பை ,ஊறவைத்துவிட்டு , மாலை 7 மணிக்கு மேல் பாய்லரில் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்த்து  15 முதல் 20 நிமிடம் கொதிக்க வைத்து ஆப் செய்து விடவும்.

மறுநாள் காலை கூழ் தயார் நிலையில் இருக்கும். இதனை உப்பு , சின்ன வெங்காயம் சேர்த்து பருகவும்.

4. வாரம் 1 முறை காலை பழைய சோற்றை சின்ன வெங்காயம் அல்லது நார்த்தங்காய், மாங்காய் ஊறுகாய் சேர்த்து பருகவும்.

5. சலி ,காய்ச்சல் மலச்சிக்கல் என எதுவாகினும் உடல் நிலை சரியில்லை என்றால் வடித்த சோற்றை தண்ணீர் விட்டு அருந்தி வரவும். 

மிளகு ரசம்,  முருங்கை இலை ரசம், வடித்த கஞ்சி ரசம், துளசி ரசம் என எதாவது சோற்றில் சேர்த்து நன்கு குழைத்து பருகவும் . ஓய்வு மிக அவசியம்.

மதியம் : 2 - 3..

சாப்பாடு பொறியல்,

சாம்பாரில் பூண்டு, முருங்கை கீரை, முருங்கை விலை அதிகமாக இருப்பின் தினமும் சிறிது சேர்த்து  கொள்ளவும்.

வடகம் தயாரிக்கப்படும் முறை...

கடலை உடன் வருத்த உளுந்து சேர்த்து அரைத்த சட்னியுடன் சோறு,முருங்கை பொடி அல்லது சாம்பார், கருவேப்பலை  பொடி கீரை.

சாதம். புளிச்சக்கீரை கோடையில் எடுத்துக் கொள்ளவும்.

கண்டிப்பாக வெந்தியக்  கார குழம்பு, மணத்தக்காளி வத்தக்காரகுழம்பு, சுண்டக்காய் வத்த குழம்பு வாரம் இருமுறை இருக்க வேண்டும்.

அசைவமும் மாதம் 1 முறை தவறாது எடுத்து கொள்ளுங்கள்.

சைவப்பிரியர்கள் தவிர்த்து மற்றதை உண்ணவும்.

முடிந்த வரை துவரம் பருப்புடன் சிறிது பாசி பருப்பு சேர்த்து  கொள்ளவும்.

அசைவம் கோடையில் மீனும், மட்டனும், பணிகாலத்தில் நாட்டு கோழியும் சாப்பிடலாம்.

எண்ணெயில் பொறிப்பதை விட குழம்பு வைத்து சாப்பிடுங்கள்.

மீன் வறுவல் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெயில் சாப்பிடவும்.

மேலும், தினம் அவரை, கொத்தவரை, வாழைக்காய், பூசணிக்காய்,புடலை, கோவைக்காய், முட்டைகோஸ், முல்லங்கி, விலை குறைந்த காய்கறிகளை   பொறியலாக அல்லது சாம்பாரில் சேர்த்து உண்ணவும்.

மோர் சீரகம் சேர்த்து தினம் மதியம் அல்லது காலை கண்டிப்பாக குடியுங்கள்.

குளிர்சாதனப்பெட்டியில் உணவு , காய்கறி வைத்து உண்பதை தவிர்ப்போம்.

(நகரத்து நோய்க்கு 80 சதவிகித காரணம் கடையில் சேர்க்கும் பாமாயில் எண்ணெய்தான்)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.