சோழநாட்டின் காவல் தெய்வமும், சோழ அரசபரம்பரையினரின் குலதெய்வமுமான “நிசும்பசூதனி” என்னும் காளிதெய்வத்தின் இருப்பிடம் தஞ்சையில் உள்ள குயவர்கள் வாழும் தெருவிற்கு அருகில் உள்ளது...
சோழப்பேரரசன் இராஜராஜசோழன் (எ) அருள்மொழிவர்மன் தான் கட்டப்போகும் ஏழுபனை உயரமுள்ள ஓர் மிகப்பெரிய கட்டுமானத்தைக்கட்ட உத்தரவு கேட்பதற்காக வேண்டி, கருவூர்த்தேவரோடு அவ்விடத்திற்கு சென்று தன்குலதெய்வமான அக்காவல்தெய்வத்திற்கு “பலி” கொடுத்து சாமியாடி ஒருவரிடம் குறிகேட்டான். உடனே சாமியாடியின் மேல் வந்திறங்கிய அக்காவல் தெய்வம், இவ்வாறு கூறியது...
“இந்த தஞ்சை நகரம் முழுவதும் எனது கட்டுப்பாட்டில்தான் உள்ளது. நீ கட்டப்போகும் அந்தக் கட்டிடமும் எனது கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அக்கட்டிடத்திற்கு எதிர்காலத்தில் எந்த ஆபத்தும் வராது. அதனால் நீ எந்தவிதமான பயமும் இன்றி அந்த கட்டிடத்தை கட்டுவாயாக” – என குறி சொன்னது.
(1) சோழ ஆண்டபரம்பரை புகழ்பாடும் எந்தவொரு தமிழ்ச்சாதிக்காவது இந்த “நிசும்பசூதனி” குலதெய்வமாக உள்ளதா?
(2) இராஜராஜனுக்கு என்று தனியே குலதெய்வம் இருக்கும்போது அவன் பெரியகோயிலில் யாரை வணங்கினான் ?
(3) சிவனே ஒரு ஆதிசித்தன் என்று புருடா விடும் அன்பர்களே… அந்த ஆதிசித்தனுக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால், தஞ்சை பெரியகோயிலின் நான்கு மூலைகளுக்கும் சேர்த்து நிசும்பசூதனி ஏன் காவல்காக்கவேண்டும்.? உங்கள் ஆதிசித்தனுக்கு தன்னைப் பாதுகாத்துக்கொள்ளத் தெரியாதா?
(4) கல்லிலே கலைவண்ணம் காண்பவர்களே, கற்சிலையில் தெய்வத்தைக் காணும் அதிபுத்திசாலிகளே..…..தஞ்சை பெரியகோயில் என்னும் MNC கம்பெனிக்குள் உண்மையிலேயே என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.