லோக் ஆயுக்தா சட்டத்தை பொறுத்த வரை Selection Process மற்றும் Selection Panel ரொம்ப முக்கியம்...
உதாரணத்துக்கு அதிமுக அரசு எப்படி இதை வடிவமைப்பார்கள் என்றால் லோக் ஆயுக்தா ஆணையருக்கு IAS தகுதி இருந்தால் போதும் என்றும் அந்த ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழுவில் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சபாநாயகர் இடம்பெறுவார்கள் என்றும் சொல்லிவிடுவார்கள். எவ்வளவு வலுவான சட்டமாக இருந்தாலும் இந்த இரண்டு அம்சங்கள் அந்த சட்டத்தை பயனற்ற சட்டமாக மாற்றிவிடும்.
அதனால் தான் லோக் ஆயுக்தா ஆணையராக இருப்பவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவோ இருக்க வேண்டும் என்று கேட்பது அவசியம். இதற்காக தான் மக்கள் கருத்தை கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். நீதிபதிகள் எல்லாரும் நேர்மையானவர்களா என்ற கேள்வி வரும். அதற்காக தான் இவர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மன்றத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டு நீதிபதிகளும் இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். மேலும் இந்த தேர்வுக்குழு சந்திப்பு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் தான் நடைபெற வேண்டும் என்றும் கூறுகிறோம்.
சரி இதெல்லாம் யாருக்கு சொல்கிறோம். அரசுக்கு தானே. ஆனால் மக்கள் கருத்தை கேட்கவே அரசு தயாராக இல்லாத போது இதை எப்படி சொல்வது? அதனால் தான் இந்த சட்டத்தை சட்டசபையில் சமர்ப்பிக்க இருக்கும் அமைச்சர் ஜெய்குமாருக்கும் இதை தயாரிக்கும் பணியை செய்ய வேண்டிய தலைமை செயலாளருக்கும் அனுப்புகிறோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.