25/07/2018

ஈரானை அடக்கும் பொருட்டு கடுமையான பொருளாதார தடைகளை கொடுத்தாலும் ஈரான் அடங்குவதாக தெரியவில்லை, அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கைகளை கொடுக்கின்றது ஈரான்...


அடிக்கடி அமெரிக்க கப்பல்  ஹோல்ம்ஸ் பக்கம் உளவு பார்க்க செல்வதும், ஈரான் கடற்படை அவர்களை விரட்டி அடிப்பதுமாக அடிக்கடி உரசிகொள்ளும் இடம் அது.

அமெரிக்கா ஈரானின் அணு ஆராய்ச்சிக்கு எதிராக இருந்த நிலைப்பாட்டில் இருந்து மெல்ல மாறி, ஏவுகனைக்கு வந்து நிற்கின்றது.

அணு ஆய்வில் இருந்து அமெரிக்கா ஏவுகனை தடைக்கு வந்திருப்பதை ஈரானும் புன்னகையோடு நோக்குகின்றது..

ஏவுகனை இல்லா அணுஆயுதம் பலனளிக்காது, கூடுதலாக இஸ்ரேலை ஈரானால் தாக்க முடியாது என்பதால் அமெரிக்காவின் நகர்வு இப்படி இருக்கின்றது, ஈரானோ விடுவதாக இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.