30/07/2018

ட்ராய் தலைவரின் ஆதார் பாதுகாப்பு சவால் - தோற்கடித்த ஹேக்கர்...


பொதுவெளியில் பகிர்ந்து சவால் விடுத்த சூழலில், அவரது தனிப்பட்ட தகவல்களை பிரான்ஸ் நபர் இணையத்தில் பகிர்ந்தார்.

டிராய் எனப்படும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஷர்மா, ஆதார் எண் மிகவும் பாதுகாப்பானது என்று அதை ட்விட்டரில் பதிவிட்டிந்திருந்தார். இதன்மூலம் ஏதாவது தீங்கு செய்ய முடியுமா எனவும் சவால் விட்டார். ஆனால் ஷர்மா பதிவிட்ட சில மணி நேரத்திலேயே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஷர்மாவின் ஆதார் எண்ணுடன் தொடர்புடைய தகவல்கள் என்று கூறி சிலவற்றை பதிவிட்டார்.

செல்போன் எண், அந்த எண்ணின் வாட்ஸ் ஆப் முகப்புப் புகைப்படம், பான் எண், வீட்டு முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டார்.



எலியட் அல்டர்சன் என்கிற பெயரில், ஷர்மாவின் ட்விட்டருக்கு பதில் அளித்துள்ளார். ஆதாரை பொதுவெளியில் பகிர்ந்தால் ஆபத்து என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆனால், இந்த பதிவுகளுக்கு எந்தவொரு விளக்கத்தையோ அல்லது மறுப்பையோ ட்ராய் அமைப்பின் தலைவரான ஷர்மா தெரிவிக்கவில்லை.

ஆதார் எண் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானது என்று வாதிடப்பட்டு வரும் நிலையில், இந்த நிகழ்வு மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.