18/07/2018

திருமண அழைப்பிதழ்களை கையில் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?


திருமணம அழைப்பிதழ்கள் மட்டுமல்ல.

ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக் கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.

அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள். பணமாயிருந்தால் தட்டு.

இது எதனாலென்றால், கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில் மேல்கீழாய் இருந்தாலும் அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.

வெறுமனே கையால் கொடுத்தால்,
கொடுப்பவர்கை மேலும் வாங்குபவர்கை கீழுமிருக்கும்.

இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்
நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாது என்பதற்காகவே, எப்பொருளை கொடுத்தாலும் தட்டில் வைத்துக்கொடுப்பதை பழக்கமாகக்கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.

இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.

அழைப்பிதழ் கொடுக்கப் போகும் போது
கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துக்கச் செல்லுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.