இவ்வளவு தொழிற்நுட்ப பல்கலை கழகங்கள் ?
தொழிற்நுட்ப பட்டதாரிகள் இருந்தும் ஏன் மேக் இன் இண்டியா.
இதனால் இலாபம் அடையப்போவது யார்?
உலக வல்லாதிக்க நாடுகள் மட்டுமே பயனடையும் திட்டம் இது.
இதன் மூலமாக தொழிற்நுட்ப வல்லுநர்களையும், பல ஆயிரக்கணக்கான கோடி மக்கள் பணத்தில் நாம் உருவாக்கிய அரசு நிறுவனங்களையும் வல்லாதிக்க நாடுகளுக்கு கூட்டிக் கொடுக்கும்
செயல் திட்டமே இது,
இதன் மூலமாக இந்தியாவிற்கென்று சொந்தமாக தொழிற்நுட்பங்கள் உருவாகுவது தடுக்கப்படும்,
வெளிநாட்டு நிறுவனங்கள் தனது நவீன தொழிற்நுட்பங்களின் மூலமாக இந்தியாவில் உற்பத்தி செய்யும் திறன் மட்டுமே அதிகரிக்கும்,
இதுநாள் வரை வெளிநாடுகளில் உற்பத்தி செய்து இந்தியாவில் இறக்குமதியாகிய பொருட்கள் இனி இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும்,
இதன் வாயிலாக இந்திய ஏற்றுமதி என்ற ஒன்று இல்லாமல் போகும். அந்நிய நாட்டு பணம் உள்ளே வருவது தடுக்கப்படும்.
வரும் நிறுவனங்களும் இங்கு வரி விலக்குப் பெற்றப்பிறகே தொழில் தொடங்கும்.
கூலிக்கு ஆட்களை அழைத்து சென்று டாலரில் சம்பளம் கொடுத்தவன், இனி இங்கு சொற்ப சம்பளம் மட்டுமே தருவான்.
உள்நாட்டு உற்பத்தி பெருகினாலும் , இந்தியாவிற்கு எந்த விதமான இலாபமும் ஏற்படப்போவதில்லை.
மாறாக வளங்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்து வாங்கியவன்,
இனி இங்கேயே மலிவு விலையுல் திருடுவான், அவனுக்கு இறக்குமதி செலவு மிச்சம்.
உதாரணமாக ஒரு இந்திய சிறு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்த பொருளை make_in_india என்ற பெயரில்
ஒரு வெளிநாட்டு நிறுவனம் இங்கு உற்பத்தி செய்யுமானால்,அந்த இந்திய சிறு நிறுவனத்தின் கதி அதே கதிதான்.
இது போலவே மற்ற உற்பத்தி நிறுவனங்களும் பாதிப்படைந்து காணாமல் போகும்.
இத்திட்டத்தால் சொந்த நாட்டு மக்கள் அனைவரும் கூலிக்காரர்கள் ஆவதோடு மட்டும் அல்லாமல் இந்தியாவின் பொருளாதாராமே சிதைவடையும்.
நாடு நாசமாவது உறுதி..
கார்பரேட் அடிமைகள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.