கி. பி. 3ஆம் நூற்றாண்டிற்கும் கி. பி. 4ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் பாழி மொழியில் புத்த சமயக்குரவர்கள் இயற்றிய ‘மகாவம்சம்’, ‘தீபவம்சம்’ எனும் இரண்டு நூல்களைத் தழுவியே சிங்கள மொழியின் வரலாறும் சிங்கள வடுகரின் வரலாறும் இட்டுக்கட்டி எழுதப்பட்டன.
அந் நூல்கள், சிங்கள வடுகர்களை ‘வந்தேறிகள்’ (Settlers) என்றே குறிப்பிடுகின்றன.1
“According to Mahavamsa and Dipavamsa, written by Buddhist monks of the Anuradhapura Maha Viharaya in Sri Lanka, around the 3-5th century, an ancient treatise written in Pali, the Sinhalese are descendants of the settlers who came to the island in 543 BCE from Sinhapura in India, led by Prince Vijaya.” (https://en.wikipedia.org/wiki/Sinhalese_people)1
சிங்கள மொழி நான்கு காலக்கட்டங்களின் ஊடே வளர்ந்ததாம். பின்வருவனதான் அந் நான்கு காலக்கட்டங்கள்:
1. ‘சிங்களப் பாதகம்’ (Sinhalese Prakrit) - கி. மு. 3/2ஆம் நூற்றாண்டுமுதல் கி. பி. 3ஆம் நூற்றாண்டுவரை;
2. முந்தைச் சிங்களம் - கி. பி. 3ஆம் நூற்றாண்டுமுதல் கி. பி. 7ஆம் நூற்றாண்டுவரை;
3. இடைக்காலச் சிங்களம் - கி. பி. 7ஆம் நூற்றாண்டுமுதல் கி. பி. 12ஆம் நூற்றாண்டுவரை;
4. இக்காலச் சிங்களம் - கி. பி. 12ஆம் நூற்றாண்டுமுதல் இன்றுவரை.
இவற்றில், மிக முந்தைய ‘சிங்களப் பாகதக்’ கல்வெட்டு கி. மு. 3/2ஆம் நூற்றாண்டிற்குரியதாம்.2
“Sinhalese Prakrit (until 3rd century CE)
“Proto-Sinhalese (3rd – 7th century CE)
“Medieval Sinhalese (7th – 12th century CE) “Modern Sinhalese (12th century – present)” (https://en.wikipedia.org/wiki/Sinhalese_language)2
கூறப்படும் ‘அசோகன் பிரமி’ எழுத்தமைதியிலான கல்வெட்டுதான் சிங்கள வடுகர்கள் கூறும் ‘சிங்களப் பாகதக்’ கல்வெட்டு போலும். ஆயினும், கி. பி. 9ஆம் நூற்றாண்டில்தான் சிங்கள மொழியில் முதன்முதலில் இலக்கியம் தோன்றியதாகச் சிங்களர்களே கூறுவது, அதற்கு நேர்மாறானது.3
“The oldest Sinhalese Prakrit inscriptions found are from the third to second century BCE following the arrival of Buddhism in Sri Lanka,[12][13] the oldest extant literary works date from the ninth century.” (https://en.wikipedia.org/wiki/Sinhalese_language)3
கூறப்படும் ‘அசோகன் பிரமி’ எனும் ‘தமிழி’ எழுத்தைக் காட்டிச் சிங்கள மொழிக்குக் கி. மு. 600ஆம் ஆண்டளவிலேயே தனி வரிவடிவம் இருந்ததாகச் சிங்கள வடுகர்கள் கதைவிடுகின்றனர். கி. பி. 6ஆம் நூற்றாண்டில் அனுராதபுரத்திற்கு அருகிலுள்ள ‘தக்கிணத் தூபத்தில்’ (Dakkhina Stupa) தமிழ் வட்டெழுத்தில் சிங்களத்தில் எழுதியுள்ளதை வைத்து, அவ் வட்டெழுத்தும்கூடச் சிங்கள எழுத்துத்தானென அவர்கள் பொய்யுரைக்கின்றனர்.4
(https://sirimunasiha.wordpress.com/2012/01/02/the-script-of-sri-lanka/)4
ஆனால், பொலனறுவையை கி. பி. 1153 முதல் 1186 வரையில் ஆண்ட முதலாம் பராக்கிரம்பாகுவின் ஆட்சிக்காலத்தில்தான் சிங்கள மொழிக்குத் தனித்த வரிவடிவம் இருந்ததென்பதைப் ‘படவியக் கல்வெட்டு’ (Padaviya Inscription) காட்டுகிறது. அந்தக் கல்வெட்டிலிருக்கும் சமற்கிருதப் பகுதியும் சிங்கள வரிவடிவத்தில்தான் உள்ளது. அக்காலத்தில் சமற்கிருதத்திற்குத் தனி வரிவடிவம் இலங்கையிலும் இல்லை என்பதைத்தான் அது காட்டுகிறது.5
(https://sirimunasiha.wordpress.com/2012/01/02/the-script-of-sri-lanka/)5
பாழி மொழியில் ஓதப்பட்டுவந்த புத்த மறைகளான ‘திப்பிடங்கள்’, கி. பி. முதல் நூற்றாண்டு வரையில் வாய்வழியில் ஓதப்பட்டுவந்த ‘எழுதாக்கிளவி’களாயிருந்தன. ஏனெனில், பாழி மொழிக்கு அதுவரை சொந்த எழுத்து வடிவமே இல்லை.6
“The Pali Canon, having previously been preserved as an oral tradition, was first committed to writing in Sri Lanka around 30 BCE.” (https://en.wikipedia.org/wiki/Buddhism_in_Sri_Lanka)
“Aluvihare Rock Temple was the historic location where the Pāli Canon was first written down completely in text on ola (palm) leaves.” (https://en.wikipedia.org/wiki/Aluvihare_Rock_Temple)6
புத்தப் பிடகங்கள் குலைந்தும் குறைந்தும் மறைந்தும் வருவதைக் கண்ணுற்ற புத்த சமயத் துறவிகள், அனுராதபுரத்தில் கூடி அப் பிடங்களை வருங்காலத் தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டுமென முடிவு செய்தனர். அதைச் செய்வதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த இடம்தான் ஒதுக்குப்புறமாயிருந்த மாத்தளையிலிருந்த ஆலுவிகார மலைக்கோவில். தமிழ்நாட்டிலிருந்து வந்த படையெடுப்புகளிலிருந்து புத்த சமய மறைகளைப் பாதுக்காக்கும் நோக்கில்தான் மாத்தளை விகாரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 500 புத்த சமயத் துறவிகளை அழைத்துவந்து, அவரவர்க்குத் தெரிந்த பிடகங்களை ஓதச்செய்து, அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்தவற்றைத் தமிழ்முறையில் பனை ஓலைகளில் எழுத்தாணியைக் கொண்டு [தமிழ் வரிவடிவத்தில்] திப்பிடகங்களை எழுதிவைத்தனர். அவ்வாறு எழுதிவைத்த காலம் கி. மு. 30ஆம் ஆண்டு என்று சொல்லப்படுகிறது.7
“The monks who left to India and to the hilly areas of Sri Lanka, during the difficult period, returned to Anuradhapura, and decided to transcribe the Tripiṭaka (philosophical doctrines of Buddhism) for the preservation and for the use of future generations. The monks selected Aluvihare Rock temple in Matale as the most suitable and secured place to carry out this important event. This transcription was carried out due to the fear that the doctrine would be lost during the upheaval caused by repeated South Indian invasions.[5] It is said that 500 scholarly monks congregated at Aluvihare Rock temple to perform the difficult task of first reciting the doctrines and agreeing on an acceptable version before transcription. The entire transcription was done in books made of ola leaves, locally known as puskola poth. These books were made up from thick strips created from the leaves of either the palmyra or talipot palm and the doctrines were written down in Pali language. A metal stylus was used to inscribe the characters on the ola leaves.” (https://en.wikipedia.org/wiki/Aluvihare_Rock_Temple)7
கி. பி. 5ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ‘புத்தகோசர்’ எனும் புத்த சமயக்குரவர் திப்பிடகங்களுக்கு உரை எழுதினார்.
கி. பி. 4ஆம் நூற்றாண்டில் பாழி மொழியில் எழுதப்பட்ட ‘மகாவம்சம்,’ கி. பி. 13ஆம் ஆண்டில் ‘தம்மகீத்தி’ என்பவரால் இயற்றப்பட்ட ‘சூலவம்சம்’ ஆகிய நூல்கள் சிங்களரின் வரலாற்றைக் கூறுகின்றன.8
“Early recorded history of the Sinhalese is chronicled in two documents, the Mahavamsa, written in Pāli around the 4th century CE, and the much later Culavamsa (probably penned in the 13th century CE by the Buddhist monk Dhammakitti).” (https://en.wikipedia.org/wiki/Sinhalese_people)8
வடஇந்தியாவிலிருக்கும் ‘சுப்பாகரகம்’ எனும் இடத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட இளவரசன் விசயன், பிழைப்பு தேடி 700 பேருடன் கடல்வழியாகப் பயணித்து ஈழத்திலிருக்கும் மன்னாரில் வந்திறங்கினான். அப் பகுதியை ஆண்டுவந்த ‘குயினி’ எனும் தமிழ் (இயக்கர்) அரசியை மணந்து, பின்னர் அவளையே கொன்றுவிட்டு தம்மபண்ணி அரசை நிறுவினான். அவனுக்குப்பின் நாட்டை யார் ஆள்வது என்பதில் குழப்பம் தோன்றியது. அதனால், தம் தாயகமான ‘சிம்மபுரத்’திலிருந்த தன் தம்பி ‘சுமித்தன்’ என்பானை உடனே வருமாறு விசயன் ஓலை விடுத்தான். அந்த ஓலை சுமித்தனுக்குக் கிடைப்பதற்கு முன்பே விசயன் இறந்துவிட்டான். சிங்களப் புத்த சமயநூல்கள் இவ்வாறெல்லாம் கூறுகின்றன.9
“Prince Vijaya and his 700 followers left Suppāraka,[21] landed on the island at a site believed[by whom?] to be in the district of Chilaw, near modern-day Mannar, and founded the Kingdom of Tambapanni.[22][23] It is recorded the Vijaya made his landing on the day of Buddha's death.[24] Vijaya claimed Tambapanni his capital and soon the whole island come under this name. Tambapanni was originally inhabited and governed by Yakkhas, having their capital at Sirīsavatthu and their queen Kuveni.[25] According to the Samyutta Commentary, Tambapanni was one hundred leagues in extent.
“After landing in Tambapanni Vijaya met Kuveni the queen of the Yakkhas, who was disguised as a beautiful woman but was really a 'yakkini' (devil) named Sesapathi.[26]
“At the end of his reign, Vijaya, having trouble choosing a successor, sent a letter to the city of his ancestors, Sinhapura, in order to invite his brother Sumitta to take over the throne.[27] However, Vijaya had died before the letter had reached its destination, so the elected minister of the people[28] Upatissa, the Chief government minister or prime minister and leading chief among the Sinhalesebecame regent and acted as regent for a year. After his coronation, which was held in the Kingdom of Tambapanni, he left it, building another one, bearing his own name.” (https://en.wikipedia.org/wiki/Sinhalese_people)9
உண்மை இவ்வாறிருக்க,
“சுமார் 400 ஆண்டு காலம் எழுத்துவடிவம் இல்லாமல் மனப்பாடம் செய்யப்பட்ட அந்த சூத்திரங்களை இலங்கையில் பரப்பியபோது தமிழி எழுத்து வடிவத்தை பயன்படுத்தி, மாத்தளை எனும் ஊரில் கி. மு. 80 ஆம் ஆண்டு முதன்முதலாக எழுத்துவடிவத்தில் எழுதினர்”
என்று முகநூலில் பதிவிட்ட இராயபுரம் ந. சத்யா என்பவரின் பதிவை மருத்துவர் மதிவாணன் பகிர்ந்தார்.
அதைக் கண்டு,
“கி. மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே ஸ்ரீலங்காவில் ஆயிரக்கணக்கான சாக்கிய சிங்கள எழுத்து கல்வெட்டுக்கள் இருக்கும்போது, கி. மு. 80இல் தமிழ்நாட்டிற்கு வந்து சாக்கிய தமிழ் எழுத்துக்களை கற்றுக் கொண்டு போனார்கள் என்று சொல்வது வரலாறா! கோனார் தமிழ் உரை கதையா?”
என்று கருத்துரைப்பது வரலாற்று மெய்ம்மைகளுக்குப் பொருந்தவில்லை. அஃது என்ன ‘சாக்கியத்’ தமிழ்; ‘சாக்கியச்’ சிங்களம்? சிங்களத்தை ஏத்தி, தமிழைத் தாழ்த்துவது ஏனோ? அதுவும் தமிழரில் மூத்தகுடியைச் சேர்ந்த ஒருவர் சொந்த தாய்மொழியைத் தாழ்த்துவது சரியாமோ? மத உணர்வும் சாதி உணர்வும் தமிழுக்கு எதிராகத் தமிழரையே திருப்பிவிடும் கோலத்தையே இது காட்டுகிறது.
- ஆய்வறிஞர் குணா (12.7.2017)...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.