இங்கு பலர் அன்பு, பாசம், காதல் மற்றும் காமம் எல்லாம் ஒன்று என்று சொல்லிகிறார்கள். அது தவறு...
அன்பு...
மனிதன் மிருகம் மீதும்
மரங்கள் மீதும்
பறவைகள் மீதும்
அறிமுகம் இல்லா மனிதர்கள் மீதும் வைப்பது தான் அன்பு.
இதில் எந்த ஒரு எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்கும்.
பாசம்...
அம்மா அப்பா குழந்தைகள் மீதும்
மனிதன் தான் வளர்க்கும் செல்ல பிராணிகள் மீதும்
நண்பர்கள் மீதும்
உறவினர்கள் மீதும்
வைப்பது பாசம் ஆகும்.
இங்கு அனைவரும் நமக்கு தெரிந்தவர்கள் பிடித்தவர்கலாக இருப்பார்கள்.
காதல்...
காதலன் காதலி மீதும்
காதலி காதலன் மீதும்
கணவன் மனைவி மீதும்
மனைவி கணவன் மீதும்
வைப்பது தான் காதல்.
இது ஒரு உயர்த்த செயல்.
ஆண் அல்லது பெண் தனது மனதை ஒருத்தன் அல்லது ஒருத்தியிடம் மட்டுமே முழுமையாக கொடுத்து இருப்பார்கள்.
காமம்...
இதில் தான் பலரும் குழப்பி கொள்கிறார்கள்..
மனிதன் ஒரு பட நடிகை மீது வைப்பது
பெண் ஒரு நடிகன் மீது வைப்பது தான் காமம்.
ஒருவனின் தோற்றம் கொண்டு காம உணர்வுகலின் ஆசைகள்.
ஒரு தப்பான படத்தில் நடிக்கும் பெண்ணை பலருக்கும் பிடிக்கும் ஆனால் கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்வார்களா மாட்டார்கள்.
அவர்களுக்கு அவளிடம் இருந்து காமம் மட்டுமே வேணும் காதல் அல்ல.
படத்தில் நடிப்பவர்கள் பணத்திற்காகவும் காமத்திற்காக நடிப்பார்கள் அங்கு காதலை பார்க்க முடியாது.
பொய்யான பாடல்கள் மற்றும் உருவங்கள் காதலில் வராது.
ஒரு பெண் தனது உயிரையும் ஒருவனுக்காக கொடுக்க நினைக்கிறாள் என்றால் மட்டுமே அவன்மீது தீராத காதல் வைத்து இருக்கிறாள் என்று அர்த்தம்.
உண்மை காதல் கிடைத்தவன் வாழ்வு சொர்கம்..
காமம் ஒரு கலை...
காமம் மற்றும் காதல் கலந்த வாழ்வே கணவன் மனைவி இடையில் இருக்க வேண்டிய ஒன்று.
மனிதன் தனது வாழ்கைமுறை யை விலங்குகள் இடத்தில் இருந்தே கற்று கொண்டான்.
அதன் வாழ்கை பொறுத்து அதற்கு மரியாதையும் அளித்தான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.