இப்பிறவியிலேயே பிறப்பறுக்கும் ஜாதக அமைப்பாக லக்கினத்திற்கு 12ம் வீட்டில் கேது இருந்தால் முக்தி என ஜோதிடத்தில் கூறுவர்.
ஆனால், 12ல் கேது இருக்கும் அனைவரும் இப்பிறப்பிலேயே முக்தியடைவர் எனக் கூறமுடியாது.
ஆனால், முக்திக்கான தூரத்தை நெருங்கிவிட்டனர் எனலாம்.
அதாவது, இப்பிறவில் பாவச் செயல் செய்யாமல் புண்ணியத்தை மட்டும் செய்திருந்தால்.. மறுபிறப்பு கிடையாது...
இருப்பினும், எம்மாதிரியான ஜாதக அமைப்பு இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி என்பதைக் காணலாம்..
1. கேது பகவான் லக்கினத்திற்கு 12ம் வீட்டில் தனது சுய சாரமான அஸ்வினி/மகம்/மூலத்தில் இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி.
2. கேது பகவான் லக்கினத்திற்கு 12ல் அவ்வீட்டு அதிபதியுடன் சேர்ந்து இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி.
3. கேது பகவான் லக்கினத்திற்கு 12ம் அதிபதியின் சாரத்தில் எங்கிருந்தாலும் இப்பிறவியிலேயே முக்தி (யோகிகள் மற்றும் ஞானிகளின் ஜாதகத்தில் இந்த அமைப்பைக் காணலாம்).
4. கேது பகவான் லக்கினத்திற்கு 12ம் வீட்டில் கர்மக்காரகன் சனியின் சாரமான பூசம்/அனுஷம்/உத்திரட்டாதியில் அல்லது காலனுக்கு 12ம் அதிபதி குருவின் சாரமான புனர்பூசம்/விசாகம்/பூரட்டாதியில் இருந்தால் இப்பிறவியில் முக்தி.
5. லக்கினத்தின் மோட்சாதிபதி ஞானக்காரன் கேது அல்லது கர்மக்காரகன் சனியின் சாரத்தில் இருக்க இப்பிறவியிலேயே முக்தி.
6. கேது பகவான் லக்கினத்திற்கு 12ல் குரு அல்லது சனியுடன் சேர்ந்து இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி.
7. கால புருஷனுக்கு தர்ம/கர்மாதிபதிகளான குருவும் சனியும் லக்கினத்திற்கு 12ல் இருக்க இப்பிறவியிலேயே முக்தி.
8. ராசியிலும் நவாம்சத்திலும் கேது லக்கினத்திற்கு 12ம் வீட்டில் இருந்து வர்கோத்தமமாக இப்பிறப்பிலேயே முக்தி.
9. சனியும் சந்திரனும் சேர்ந்து லக்கினத்திற்கு 12ல் இருக்க இப்பிறவியிலேயே ஜீவ முக்தியாம்.
இதுபோல இன்னும் பல...
இப்பிறப்பில் பிறருக்கு தீங்கு செய்திருந்தால் அடுத்த பிறவி நிச்சயம்.. அடுத்த பிறப்பு மிக கடுமையான சோதனையாக அமையும்...
குறிப்பு: மேற்கண்ட ஜாதக அமைப்பை லக்கினத்திற்கு மட்டுமே பார்க்க வேண்டுமே, தவிர ராசிக்கு பார்க்க கூடாது. ஏனெனில், ராசியான உடல் இறப்புக்கு மட்டுமான விசயம். அதனால், ஜீவன் முக்திக்கு லக்கினத்தை வைத்துதான் கணக்கிட வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.