04/09/2018

அனுபவம் ஒரு ஆசான்...


எல்லோரையும் நேசியுங்கள், யாரையும் வெறுக்காதிர்கள்.

வெறுப்பு வாழ்நாளை குறைக்கும்.

ஓர் 100 - உற்றாரைவிட ஒரு கற்றவருடைய நட்பே மேல்.

உண்மையான அறிஞரிடம் பிறரை தாழ்மையாக என்னும் எண்ணம்
சிறிதும் இருக்காது.

நம்பிக்கை துரோகம் செய்பவன் மாபெரும் குற்றவாளி.

உழைப்பு பிழைப்புகாக மட்டுமிலாமல் உண்மைக்காகவும் இருக்க வேண்டும்.

பொய் சொல்லி பரிசு பெறுவதை விட உண்மை சொல்லி துன்பபடலாம்.

சோம்பேறிதனம்தான் பொறுமை என்ற பெயரில்  தவறாக கணிக்கப் படுகிறது.

கவலைகளை மறக்க கடமையை செய் மனம் நிம்மதி அடையும்.

தளராத முயற்சிக்குத் தன்னம்பிக்கை அவசியம்.

உன்னைத்தவிர உன்வேலையை யாராலும் சிறப்பாக செய்ய முடியாது.

பலர் முன் பயனில்லாததைக் கூறுபவன் அனைவராலும் வெறுக்கப்படுவான

அழிவுக்கு முன் கர்வம் வரும், வீழ்ச்சிக்கு முன் திமிர் வரும்.

அமைதி அனைத்தும்  பெற்று தரும்.

எல்லோரும் கடை திறக்கலாம் ஆனால் புத்திசாலிதான் லாபத்தோடு நடத்துவான்.

ஒவ்வொரு புதுசெயலிலும் உங்கள் பழைய அனுபவத்தைப் பயன் படுத்துங்கள்.

நம்முடைய செயல்களே நம்மை யார் என்று பிறர்க்கு உணர்த்தும்.

சோம்பலை போக்கு அப்போதுதான் நீசுதந்திரமான மனிதன்.

தனை புகழ்ந்து கொள்பவன் இகழப்படுவான், பணிவு உடையவன் புகழப் படுவான்.

பொறுப்பு உள்ளவன் புகழ் பெறுவான் இருமாப்புள்ளவன் ஏமாறுவான.

குறை சொல்பவன் தேவை இல்லை வ்ழிகாட்டுபவன்  தேவை.

வாழ்க வளமுடன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.