பழந்தமிழர்கள் காலத்தை கணிக்க சூரியனையும் சந்திரனையும் நம்பி இருந்தனர். இவை இரண்டும் தெரியா சமயத்தில் எதை வைத்து கணித்தனர் என்ற கேள்வி வரும்போது சங்க இலக்கியம் சொல்கிறது குறுநீர்க் கன்னல் என்ற ஒன்றை வைத்து காலத்தை கணித்தனர் என்று.
இந்த நீர் வைத்து கணிக்கும் முறை யவனர்கள் (எகிப்தியர்) கண்டது என அனைத்து உலகமும் நம்புகிறது.
ஆனால் அது உண்மை அன்று தமிழர்தான் இதன் முன்னோடிகள் என காட்டுகிறார் நம் விஞ்ஞானி……
அதனுடைய இன்னோரு பெயர் மற்றும் யார் என அறியும் முன் அக்கடிகார பாடலை கண்டு விடுவோம்.
பொழுதுஅளந் தறியும் பொய்யா மாக்கள்
தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்
குறுநீர்க் கன்னல் இனைத்தென்று இசைப்ப
- (முல்லைப்பாட்டு, 55-58)
மேற்கண்ட பாடலின் விளக்கம் சுருக்கமாக போருக்கு செல்லும் மன்னா உன் வாழ்நாளில் இத்தனை நாழிகை கழிந்து விட்டது என குறுநீர்க் கன்னலில் இத்தனை நாழிகை கழிந்துவிட்டது என கூறுவர் அந்த நாழிகை கணக்கர்.
அவர் பெயர் நாழிகை கணக்கர் என்பதற்கு ஆதாரம் கீழே இரண்டு அடிகளை கவனிக்க
குறுநீர்க் கன்னலின் யாமம் கொள்வர்
- ( மணிமேகலை 7:64-68)
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
- சிலப்பதிகாரம் 5: 49
இந்த குறுநீர்க் கன்னல் என்பதன் மற்றொரு பெயர் கூறிவிடுகிறேன்.
அதன் பெயர் நாழிகை வட்டில்.அதாவது ஒரு ஜாமத்திற்க்கு இவ்வளவு தண்ணீர் என நம் மக்கள் நாழிகை வட்டிலில் நீர் ஊற்றி ஒவ்வொரு சொட்டாக விழுமாறு செய்தனர் கீழே வரும் அளவையை அளந்து ஜாமத்தை கணித்தனர்.ஒரு நான்கு ஜாம அளவு உள்ள நீரை ஊற்றி நாழிகை வட்டிலை கணித்தனர். நான்கு ஜாமத்திற்க்கு முப்பது நாழிகைகள் என்பதை கவனிக்க.ஒரு ஜாமத்திற்க்கு 7-1/2 நாழிகை அதனால் நாழிகை வட்டில் என்று கூறினர்.
சரி இந்த நாழிகை வட்டில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கணக்கதிகாரம் என்ற நூல் கூறுவதை கீழே கவனிக்கவும்
மட்டாறு விட்டம் விரலிட்டு வன்செம்பு
கொட்டார் பதின்பலமாங் கொள்ளுமுளை - கட்டாணி
நாலெட்டு நான்மாப்பொன் நாலுவிரல் நாழிகையின்
பால் வட்டிற் பாதிமதிப் பாம்
- கணக்கதிகாரம்-10
அதாவது இதன் விளக்கம் யாதெனில் பலமாகிய செம்புவட்டில் கொட்டுமிடத்து மட்டு ஆறுவிரல்விட்டம் அதாவது பன்னிரண்டு விரல் வட்டம் உடைய வட்டிலை எடுத்து, கொட்டின வட்டிலுக்குத் துளைவிடுவதற்க்கு முப்பத்தாறு மாற்று பொன்னால் நான்குவிரல் அளவு ஓர் ஊசி செய்து அந்த ஊசியாலயே துளையிட்டு அத்துளையில் நீர்புகுந்து அமிழ்ந்தால் ஒரு நாழிகை கணக்காம்.
இந்த நாழிகை வட்டிலில் முப்பது நாழிகை சென்ற பின் மீண்டும் நீர் நிரப்பி இறங்கும் அளவை வைத்து கணித்தனர்.சரி இந்த கடிகாரம் உள்ள நாழிகை வட்டில் எங்கு வைக்கபட்டது என்றால், கோவில்களில் சிவன் தலைக்கு மேலே நேராக இருக்கும் அந்த பாத்திரம் தான்.
ஒரு காலத்தில் கண்ணாடியில் இருந்தது. அக்கண்ணாடியில் அளவைகோடு இருக்கும் அதை வைத்து எளிதாக ஜாமத்தை கணித்து பூஜைகள் செய்தனர்.
அந்த கால கடிகாரம் இன்றும் உள்ளது ஆனால் வேறு வடிவத்தில்.
அது ஏன் சிவன் சிலைக்கு மேல் வைத்தனர் என்ற கேள்வி எழுகிறது பக்தி காரணம் விடுத்து அறிவியல் காரணம் கொண்டு உள்ளே செல்வோம்.
சிவனை கால சம்ஹாரமூர்த்தி என்றும் காலத்தை கடந்தவர் என்றும் திரிகால ஞானி என்றும் கூறுவர். இதன் அர்த்தம் எல்லாம் தலைக்கு மேலே உள்ளது.
நாம் அசையாமல் இருந்தால் காலத்தை கணிக்கலாம் அதாவது வெல்லலாம். நாம் அசைந்தால் காலமும் நம்மோடு அசையும் காலத்தை கணிப்பது அதாவது காலத்தை கடப்பது நமக்கு தெரியாது.
நாம் அசைகிறோம் என்றால் நாம் காலத்தோடு சேர்ந்து பயணிக்கிறோம் என்று அர்த்தம். அப்போது காலம் நம் கட்டுபாட்டில் வராது.
தியானம் செய்பவரை காண்க அசையாமல் இருப்பர்..
நம் புலன்கள் அசையாமல் இருந்தால் அனைத்தும் நம் கட்டுபாட்டில் வரும். இலிங்கம் அசையுமா என்றால் அப்படியே இருக்கும் அப்படியானால் அவரால் காலத்தை கடந்து இருக்க முடியுமல்லவா.
சரி அடுத்து நடராஜரை கவனிப்போம் அவர் என்ன செய்கிறார் அசைகிறார் அவர் தலைக்குமேல் ஏன் நாழிகை வட்டில் வைக்கவில்லை அவரும் அதே சிவன் தானே.
சிந்திக்க காலத்தை உணர்ந்தவர் அசையும்போது, காலம் செயல்படும் அவர் எந்தகாலத்தில் வேண்டுமானாலும் பயணிப்பார் அவர் பயணத்தை யாராலும் கணிக்க இயலாது என்பது இரகசியம். ஆதலால் அவர் ஆடும்போது அவர் காலத்தை அவரே வழிநடத்துகிறார் அதை யாரலும் காணமுடியாது என்பதே நாழிகை வட்டில் நடராஜர் தலைக்கு மேல் வைக்ககூடாது என்ற தத்துவம்.
நவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.
சிவனை கால விஞ்ஞானி என கூறுவதில் தவறு இல்லை.
இனி சிவன் கோவிலில் அடுத்த தடவை மேலே உள்ள பாத்திரம் கண்டால் அதன் அறிவியல் கலந்த ஆன்மீகம் சொல்லவும். சிவன் சூடு, அதான் குளிர்ச்சிக்கு வைத்தார்கள் என ஒருசார் கூறும் பதில் மட்டும் கூற வேண்டாம.
இது தமிழன் அறிவியல் சம்பந்தபட்ட விடயம் மற்றும் சங்க இலக்கியத்தோடு இறைவனின் கால தத்துவ ரகசியம் இதை இன்னும் ஊன்றி தியானத்தில் கவனித்தால் நான் கண்ட அனுபவம் உங்களுக்கும் என் அப்பன் சிவன் அளிப்பான் என்பது திண்ணம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.