02/10/2018

ஆயுத எழுத்தின் சிறப்பு....


கீழ்கண்டவாறு, தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தில் காணப்படும் முதற்பாடலிலேயே ஆயுத எழுத்தின் பயன்பாடு அறியப்படுகிறது....

தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம் நூன்மரபு சூத்திரம் -1

எழுத்துக்களின் வகை..

1. எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.
அவைதாம்,
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன

குமரிக்கண்டத்தில் ஓடிய ஒரு மிகப்பெரிய ஆற்றின் பெயர் பஃறுளியாறு..

என்று சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகிறது.

ஒரு போர் வீரனின் கேடயம் எஃகினால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில்  இருக்கும்.

அதன் பின் பக்கத்தில், பிடிப்பதற்கென ஒரு கைப்பிடி இருக்கும். முன்பக்கத்தில் மூன்று குமிழிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இருக்கும்.

போர் நடக்கும் சமயங்களில் இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கும் போது, அந்த மூன்று குமிழிகள் போன்ற கடும் பகுதிகள், பகைவனது மார்பின் மீது திரைப்படங்களில் வருவதைப் போல இடித்துத் தாக்கும்.

(அந்த நொடியில் அவன் தொண்டைக் குழியிலிருந்து "ஃ" என்ற முக்கல் ஒலி தானாக எழும் )

அந்த கேடயம் என்ற ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும்  ஆய்தம் எனப் பெயர் பெற்றது.

அந்தக் கேடயத்தால் எதிரியின் மார்பை இடித்து தாக்கும் போது, அவன் வாயிலிருந்து என்ன ஒலி எழுமோ, அதுவே அந்த எழுத்திற்கான உச்சரிப்பாகவும் இருப்பது வியப்பை அளிக்கிறது...

பிற எந்த மொழியிலும் இதற்க்கு இணையான உச்சரிப்பை கொண்ட எழுத்து கிடையாது என்பதும் இதன் சிறப்புகளில் ஒன்றாகும்...

ஆனாலும் சிலர், இந்த ஆயுத எழுத்தானது மிகவும் பிற்காலத்தில்தான் வழக்கிற்கு வந்தது ஆய்வு செய்து எழுதியும் இருக்கிறார்கள்...

அவர்கள் எதை ஆய்வு செய்தார்கள், எப்படி ஆய்வு செய்தார்கள்  என்பது புரியாத புதிராகவே இருக்கிறது...

(அப்படியே இருந்துவிட்டு போகட்டும்)

ஆயினும், தொல்காப்பியம் எழுதப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிறது என்பதை நாம் அறிவோம்.

குமரிக்கண்டத்தை கடல்கொண்டு மேலும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிறது.

அங்கே ஆயுத எழுத்தை தனது பெயரில் கொண்டிருந்த பஃறுளி ஆறு அமைந்திருந்தது.

அப்படியானால், எந்தக் காலத்திளிருந்து வாளின் பயன்பாடும் கேடயத்தின் பயன்பாடும் தமிழர்கள் மத்தியில் பயன்பாட்டில் இருந்திருக்க கூடும் என்பதை எடுத்துக் கூறும் ஆயுதமாக இருப்பதே இந்த ஆயுத எழுத்தின் வியப்பிற்குரிய சிறப்பாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.