ஒரு குறிப்பிட்ட துறையில் நமது பார்வையை பற்றியே அதிகமாக தேடுவதன் மூலம் நாம் Echo chamber என்ற மாயஉலகத்தில் மாட்டிகொள்கிறோம்....
அதாவது அதை ஒட்டிய தகவல்கள் மட்டுமே நமது வாழ்க்கையாகிவிடும்....
ஒரு மாயஉலகத்தை மூளை கற்பனை செய்துவிடும்....
இதனால் என்ன பாதிப்பு நிகழும் என்றால் சிறு சிறு விடயங்களை கூட சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கும் பார்வை வந்துவிடும்... இது ஒரு விதமான நோய்....
மேலும் நம்முடைய கருத்துக்கு ஒத்துவராதவர்களை எதிரிகளாகவும்.... நாம் தான் மிகப்பெரிய அறிவாளி இந்த உலகத்தில் என்ற போலியான எண்ணங்களும் நம்மை ஆட்கொண்டுவிடும்....
புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கனுமே தவிர ஒற்றை சிந்தனையில் நாம் மாட்டிகொள்ள கூடாது....
என் கண்முன்னால் உலகத்தை ஆளும் அந்த குழுவே வந்து நின்றாலும் நான் இயல்பாக தான் பேசுவேன்... ஏனெனில் அவர்களே ஏதோ மனநோயால் பாதிக்கப்பட்டு தான் இவ்வாறு செய்கிறார்களோ என்னவோ.....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.