மாயா தனுவிளக்கா மற்றுஉள்ளம் காணாதேல்
ஆயாதாம் ஒன்றை; அது அதுவாய்- வீயாத
வன்னிதனைத் தன்னுள் மறைத்து ஒன்றாம் காட்டம்போல்
தன்னைமலம் அன்று அணைதல் தான்.
பொருள்...
ஆணவமாகிய இருளில் நிற்கின்ற உயிர் மாயையின் காரியமாகிய உடம்பை விளக்காகக் கொண்டு பொருள்களை அறியும். அவ்விளக்கு இல்லாவிடின் அஃது ஒரு பொருளையும் அறியமாட்டாது; அறியாமை உடையதாகவே இருக்கும்.
அதாவது, ஆணவம் உயிரறிவை எவ்வாறு மறைத்திருக்கிறது என்பதன் உவமையாவது, நெருப்பு எப்பொருளில் இருந்தாலும் அப்பொருளில் மறைந்து அது அப்பொருளாகவே நிற்குமன்றி வெளிப்பட நில்லாது. அது அதுவாய் நிற்றல் அதன் இயல்பு. அத்தகைய நெருப்பை விறகு தன்னுள் மறைத்து வைத்துத் தான் என்கிற ஒன்றே உள்ளது எனும்படி நிற்கும்.
அதாவது நெருப்பினைப் போன்றது உயிர். அது தான் சார்ந்த பொருளோடு ஒன்றித் தான் என்பது தோன்றாது அப்பொருளாகவே நிற்பது உயிரின் இயல்பு. அத்தகைய உயிரை ஆணவ மலம் தன்னுள் பொதிந்து கொண்டு, என்பதொன்று இல்லை என்னும் படியாக மறைத்து நிற்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.